Published:Updated:

சகல மங்கலங்களும் தரும் மீனாட்சியம்மன் துதிப்பாடல்!

ஶ்ரீமீனாட்சியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமீனாட்சியம்மன்

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

சகல மங்கலங்களும் தரும் மீனாட்சியம்மன் துதிப்பாடல்!

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

Published:Updated:
ஶ்ரீமீனாட்சியம்மன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீமீனாட்சியம்மன்

அம்பாள் மீனாட்சிக்கு தீபம் ஏற்றுவோம்!

மீனாட்சி அம்மையைக் குழந்தையாக பாவித்து, பிள்ளைத்தமிழ் பாடியவர் குமர குருபரர். இந்நூல் மதுரை திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் அரங்கேறியது. பெண் பிள்ளையின் பருவங்களைப் பத்தாகப் பகுத்து, ஓவ்வொரு பருவத்துக்கும் 10 பாடல்கள் பாடினார் குமரகுருபரர். அவற்றில் வருகைப் பருவத்தில் 9-வது பாடலை அவர் பாடிக் கொண்டிருந்தபோது, சிறு பெண்பிள்ளை வடிவில் வந்தாள் மீனாட்சியம்மை.

சகல மங்கலங்களும் தரும் மீனாட்சியம்மன் துதிப்பாடல்!

சிறு பெண்பிள்ளை வடிவில் வந்த மீனாட்சியம்மை, மன்னரின் மடியில் அமர்ந்து பாடலை ரசித்து மகிழ்ந்ததோடு, மன்னர் கழுத்திலிருந்த மணிவடத்தைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் போட்டுவிட்டு மறைந்துபோனாளாம்.

அந்தப் பாடல்...

தொடுக்கும் கடவுள் பழம்பாடல்

தொடையின் பயனே நறைபழுத்த

துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே

அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு

ஏற்றும் விளக்கே வளர்சிமய

இமயப் பொருப்பில் விளையாடும்

இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன்

திருவுள்ளத்தில் அழ(கு)ஒழுக எழுதிப்

பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம்வாய்

மடுக்கும் குழல் காடேந்தும்

இளவஞ்சிக் கொடியே வருகவே

மலையத்துவசன் பெற்ற

பெருவாழ்வே வருகவருகவே...

வரும் நவராத்திரி புண்ணியக் காலத்தில் தினமும் வீட்டில் தீபங்கள் ஏற்றிவைத்து, அற்புதமான இந்தப் பாடலைப் பாடி வழிபடுங் கள்; உங்கள் வீட்டுக்கும் மீனாட் சியம்மை வருவாள்; வேண்டும் வரம் தந்து உங்களை வாழவைப்பாள்!

சகல மங்கலங்களும் தரும் மீனாட்சியம்மன் துதிப்பாடல்!

மீனாட்சி அம்மன் மகிமை!

வேதப் பழம்பாடல்; ஞானியர் தேடிய நல்மணி; அருள் பழுத்த கற்பகம்; தோன்றாத் துணையாம் சிவனுக்கே துணையானவள்; துவாதசாந்தப் பெருவெளியில் பரமானந்தப் பெருக்கைத் தரும் பூரண நிலவு - மதுரை மீனாட்சி அம்மன்.

மாமதுரை அவளின் ராஜதானி. அங்கிருந்து உலகை ஆளும் பாரரசியாகத் திகழ்கிறாள் மீனாட்சி அம்மன். மதுரைக் கோயிலில் மீனாட்சியை தரிசித்துவிட்டே சொக்கநாதரை தரிசிக்கவேண்டும் என்பது மரபு.

நின்ற திருக்கோலம்; பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தமாகத் (தொங்கு கரம்) திகழ... வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டை என்று அருள்கோலம் காட்டுகிறாள் மீனாட்சியம்மை.

மீனாட்சி அம்மனுக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிசேகவல்லி, அபிராம வல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித் துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பெயர்களும் உள்ளன.

மீனலோசனியாக அருளும் இந்தத் தாய்... மீன்கள், முட்டையிலிருந்து தங்களது குஞ்சுகளைப் பார்வையின் வழியாகவே பொரிப்பது போன்று, நயனத்தின் வழியாகவே, பக்தர்கள் எங்கிருந்தாலும் அருள் தருவாளாம்.

மீனாட்சியம்மனின் தாழம்பூ குங்குமப் பிரசாதம், மதுரையின் தனிச் சிறப்பு. ஆதிசங்கரர், மீனாட்சி அம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்ச ரத்தினம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாடியுள்ளார்.

மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாள்மீது 15 பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடி பார்வை பெற்றாராம்.

நாமும் அன்னையின் புகழைப் பாடி வழிபடு வோம். அவளின் திருநாமம் சொல்லிப் போற்று வோம். அதற்கு, ஶ்ரீசியாமளா அஷ்டோத்ர சதநாமாவளி எனும் அற்புதமான துதிப்பாடல் உங்களுக்கு உதவும்.

சகல மங்கலங்களும் தரும் மீனாட்சியம்மன் துதிப்பாடல்!

ஶ்ரீசியாமளா அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் ஶ்ரீமாதங்க்யை நம:

ஓம் விஜயாயை நம:

ஓம் ச்யாமாயை நம:

ஓம் ஸசிவேச்யை நம:

ஓம் சுகப்ரியாயை நம:

ஓம் நீபப்ரியாயை நம:

ஓம் கதம்பேச்யை நம:

ஓம் மதாகூர்ணித லோசனாயை நம:

ஓம் பக்தானுரக்தாயை நம:

ஓம் மந்த்ரேச்யை நம:

ஓம் பிஷ்பிண்யை நம:

ஓம் மந்த்ரிண்யை நம:

ஓம் சிவாயை நம:

ஓம் கலாவத்யை நம:

ஓம் ரக்தவஸத்ராயை நம:

ஓம் அபிராமாயை நம:

ஓம் ஸுமத்யமாயை நம:

ஓம் த்ரிகோணமத்ய நிலயாயை நம:

ஓம் சாருசந்த்ராவதம் ஸின்யை நம:

ஓம் ரஹ: பூஜ்யாயை நம:

ஓம் ரஹ: கேள்யை நம:

ஓம் யோனிரூபாயை நம:

ஓம் மஹேச்வர்யை நம:

ஓம் பகப்ரியாயை நம:

ஓம் பகாராத்யாயை நம:

ஓம் ஸுபகாயை நம:

ஓம் பகமாலின்யை நம:

ஓம் ரதிப்ரியாயை நம:

ஓம் சதுர்பாஹவே நம:

ஓம் ஸுவேண்யை நம:

ஓம் ஸாருஹாஸின்யை நம:

ஓம் மதுப்ரியாயை நம:

ஓம் ஶ்ரீஜனன்யை நம:

ஓம் சர்வாண்யை நம:

ஓம் சிவாத்மிகாயை நம:

ஓம் ராஜலக்ஷ்மீ ப்ரதாயை நம:

ஓம் நித்யாயை நம:

ஓம் நிபோத்யான நிவாஸின்யை நம:

ஓம் வீணாவத்யை நம:

ஓம் கம்புகண்ட்யை நம:

ஓம் காமேச்யை நம:

ஓம் யக்ஞ ரூபிண்யை நம:

ஓம் ஸங்கீதரஸிகாயை நம:

ஓம் நாதப்ரியாயை நம:

ஓம் நீலோத்பலத்யுத்யை நம:

ஓம் மதங்கதனயாயை நம:

ஓம் லக்ஷ்ம்யை நம:

ஓம் வ்யாபின்யை நம:

ஓம் ஸர்வரஞ்சின்யை நம:

ஓம் திவ்யசந்தன திக்தாங்க்யை நம:

ஓம் யாவகார்த்ர பதாம்புஜாயை நம:

ஓம் கஸ்தூரீ திலகாயை நம:

ஓம் ஸுப்ருவே நம:

ஓம் பிம்போஷ்ட்யை நம:

ஓம் மதாலஸாயை நம:

ஓம் வித்யாராக்ஞ்யை நம:

ஓம் பகவத்யை நம:

ஓம் ஸுதாபானானு மோதின்யை நம:

ஓம் சங்கதாடங்கின்யை நம:

ஓம் குஹ்யாயை நம:

ஓம் யோஷித்புருஷ் மோஹின்யை நம:

ஓம் கிங்கரீபூத கீர்வாண்யை நம:

ஓம் கெளளின்யை நம:

ஓம் அக்ஷர ரூபிண்யை நம:

ஓம் வித்யுத்கபோல பலகாயை நம:

ஓம் முக்தாரத்ன விபூஷிதாயை நம:

ஓம் ஸுனாஸாயை நம:

ஓம் தனுமத்யாயை நம:

ஓம் ஶ்ரீவித்யாயை நம:

ஓம் புவனேச்வர்யை நம:

ஓம் ப்ருதுஸ்தன்யை நம:

ஓம் ப்ரம்ஹவித்யாயை நம:

ஓம் ஸுதாஸாகர வாஸின்யை நம:

ஓம் குஹ்யவித்யாயை நம:

ஓம் அனவத்யாங்க்யை நம:

ஓம் யந்த்ரிண்யை நம:

ஓம் ரதிலோலுபாயை நம:

ஓம் த்ரைலோக்ய ஸுந்தர்யை நம:

ஓம் ரம்யாயை நம:

ஓம் ஸ்ரக்விண்யை நம:

ஓம் கீரதாரிண்யை நம:

ஓம் ஆத்மைக்யஸுமுகீ

பூதஜகதாஹ்லாதகாரிண்யை நம:

ஓம் கல்பாதீதாயை நம:

ஓம் குண்டலின்யை நம:

ஓம் கலாதராயை நம:

ஓம் மனஸ்வின்யை நம:

ஓம் அசிந்த்யானந்த விபவாயை நம:

ஓம் ரத்ன ஸிம்ஹாஸனேச்வர்யை நம:

ஓம் பத்மாஸனாயை நம:

ஓம் காமகலாயை நம:

ஓம் ஸ்வயம்புகுஸும ப்ரியாயை நம:

ஓம் கல்யாண்யை நம:

ஓம் நித்யபுஷ்பாயை நம:

ஓம் சாம்பவ்யை நம:

ஓம் வரதாயின்யை நம:

ஓம் ஸர்வவித்யாப்ரதா வாச்யாயை நம:

ஓம் குஹ்யோபநிஷ துத்தமாயை நம:

ஓம் ந்ருபவச்யகர்யை நம:

ஓம் போக்த்ரியை நம:

ஓம் ஜகத்ப்ரத்யக்ஷ ஸாக்ஷிண்யை நம:

ஓம் ப்ரம்மவிஷ்ண்வீச ஜனன்யை நம:

ஓம் ஸர்வஸெளபாக்ய தாயின்யை நம:

ஓம் குஹ்யாதிகுஹ்ய கோப்த்ரியை நம:

ஓம் நித்யக்லின்னாயை நம:

ஓம் அம்ருதோத் பவாயை நம:

ஓம் கைவல்யதாத்ரை நம:

ஓம் வசின்யை நம:

ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயின்யை நம:

ஓம் ச்யாமளாம்பிகாயை நம:

ஓம் ஶ்ரீமீனாக்ஷ்யம்பிகாயை நம:

ஓம் ஶ்ரீராஜராஜேச்வர்யை நம:

ச்யாமளா அஷ்டோத்ர

சத நாமாவளி சம்பூர்ணம்