Published:Updated:

புகழ்பெற்ற திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - சிறப்புகள் என்னென்ன?

திருவாமாத்தூர்
News
திருவாமாத்தூர் ( தே.சிலம்பரசன் )

நேற்று சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்கயிலாய நடன நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 9.00 - 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

Published:Updated:

புகழ்பெற்ற திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் - சிறப்புகள் என்னென்ன?

நேற்று சிறப்பு யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்கயிலாய நடன நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று காலை 9.00 - 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

திருவாமாத்தூர்
News
திருவாமாத்தூர் ( தே.சிலம்பரசன் )
விழுப்புரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது திருவாமாத்தூர். பசுக்கள் தவம் செய்து கொம்புகளைப் பெற்ற ஸ்தலம் என்பதால் இவ்வூருக்கு திருஆமாத்தூர் (திரு+ஆ+மாத்தூர்) என பெயர் வந்தது. இது ராமபிரான் போற்றிய க்ஷேத்திரம். மூவர் பெருமக்களால் பாடல்பெற்ற ஆலயம். நீதி வழங்கும் திருவட்டப்பாறை திகழும் ஊர். பிருங்கி முனிவரே ஸ்தல விருட்சமாகத் திகழும் பதி எனப் பல்வேறு சிறப்புகளையும், அற்புதங்களையும் தன்னகத்தே கொண்ட ஊர்தான் திருவாமாத்தூர்.

இந்த தலத்து ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது. இறைவனுக்கு அபிராமேஸ்வரர் என்றும், இறைவிக்கு முத்தாம்பிகை என்பது திருநாமம்.  

108 போ பூஜை
108 போ பூஜை

சீதையை மீட்க ராமபிரான் சென்றபோது, அபிமானத்துடன் வழிபட்ட தலம் இது என்கிறார்கள். அதனால், இந்தத் தலத்து இறைவனுக்கு 'அபிராமேஸ்வரர்' எனப் பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ராமபிரானுக்கு தனிச்சந்நிதி இந்த ஆலயத்தில் உள்ளது. இத்தலத்துக்கு, ஆலம்பலப் பொய்கை, தண்ட தீர்த்தம், பம்பை ஆறு என்று மூன்று தீர்த்தங்கள் உள்ள்ன.  

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் இந்தத் தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். இடப்புறமாக சற்று சாய்ந்த நிலையில் கிழக்கு திசை நோக்கியபடி அருள்கிறார் அபிராமேஸ்வரர். குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டுகள் உட்பட கி.பி.955 - கி.பி.1584 வரையிலான சுமார் 26 வரலாற்றுக் கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளன. வண்ணச்சரப தண்டபாணி சுவாமிகள் இந்தத் தலத்திற்கு வந்து, எல்லை தாண்டா விரதம் இருந்து இதே ஊரில் ஜீவ சமாதி அடைந்தார். 

வண்ண ஒளியில் மிளிரும் கோபுரம் - திருவாமாத்தூர்
வண்ண ஒளியில் மிளிரும் கோபுரம் - திருவாமாத்தூர்

இவை மட்டுமின்றி, மேலும் பல சிறப்புகளைக் கொண்ட இந்தத் திருத்தலம் தற்போது அழகு மிளிரப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தை மாதம் 14-ம் தேதி (28.01.2023) அன்று யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேகத் தொடக்கவிழா நடைபெற்றது. பசுக்கள் வழிபட்ட தலம் ஆதலால் நேற்றைய தினம், '108 கோ பூஜை' நடைபெற்றது. நேற்றைய தினம் சிறப்பு யாகசாலை பூஜைகள், திருக்கயிலாய நடன நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று (01.02.2023) காலை 9.00 - 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆதீனத் தலைவர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகப் பெருவிழாவைச் சிறப்பித்தனர்.