Published:Updated:

தடுமாற்றங்கள் நீங்கி வெற்றியை நோக்கி நடைபோடும் கும்பராசி... 2021 ஆங்கிலப்புத்தாண்டு ராசிபலன்கள்!

கும்பம் புத்தாண்டு ராசிபலன்கள்
கும்பம் புத்தாண்டு ராசிபலன்கள்

உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த ஆண்டில் மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

எந்த நிலையிலும் நாகரிகமாக நடந்துகொள்ளும் கும்ப ராசி அன்பர்களே, எத்தனை சோதனைகள் வந்தாலும் பொறுமையைக் கைவிடாமல் எதையும் தாங்கும் இதயத்தோடு விளங்குபவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த ஆண்டில் மற்றவர்களின் ரசனைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.. உங்கள் 6வது ராசியில் ஆடம்பரமாக இந்தாண்டு பிறப்பதால் தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பலன்கள்

குருபகவான் தரும் பலன்கள்

இந்த ஆண்டு 5.4.21 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 12 - ம் வீட்டில் நிற்பதால் சஞ்சரிப்பதால் அநாவசிய செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். ஆக்கப்பூர்வமான பணிகளுக்காக வெளியிலும் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருக்கும். ஆன்மிகத்தில் மனம் செல்லும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்விகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்லவிதத்தில் முடியும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 வரை குருபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஜன்ம குருவாக அமர்வதால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். யாரையும் நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். அடிக்கடி கோபப்படாதீர்கள். உணவில் உப்பு, காரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். லாகிரி வஸ்துக்களைப் பயன்படுத்துபவர்கள் இனி அவற்றை அறவே தவிர்க்க வேண்டும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும். பிள்ளைகள் சில நேரங்களில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள்.

உணர்ச்சிவசப்படாமல் எந்த முடிவும் எடுப்பது நல்லது. தேனொழுக பேசுகிறார்கள் என்று யாரையும் நம்பி விட வேண்டாம். குடும்பத்தில் சுபச் செலவுகள் இருந்து கொண்டேயிருக்கும். விருந்தினர், உறவினர் வருகை அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, தலைச் சுற்றல் வரக்கூடும். விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தர வேண்டாம்.

ராகு - கேது

இந்த ஆண்டு ராகு 4 - ம் வீட்டில் நிற்பதால் தாயாரின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தலை தூக்கும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். சகோதர வகையில் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

கேது 10 - ம் வீட்டில் தொடர்வதால் மறைமுக எதிர்ப்பு, உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதனால் சில நேரங்களில் பதற்றமாகக் காணப்படுவீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்க விஷயத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர்கள். உங்கள் மீது சிலர் பழி சுமத்துவார்கள்.

சனி பகவான்
சனி பகவான்

சனிபகவான்

சனிபகவான் ராசிக்கு 12 - ம் வீட்டில் ஏழரைச்சனியின் ஒருபகுதியான விரையச் சனி தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பழைய கடனை எவ்வாறு சமாளிக்கப் போகிறோமோ என்று கவலைப்படுவீர்கள். பணவரவு ஓரளவு இருக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்ட பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளைப் பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே!

தொழிலிலிருந்த மந்த நிலை விலகும். இனி தேவையறிந்து கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். விளம்பரங்களால் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மற்றவர்களின் ஆலோசனையை ஒதுக்கித் தள்ளுங்கள். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்துங்கள். வேலையாள்களிடம் கறாராக இருங்கள். மெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள். பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

குருபகவான்
குருபகவான்

உத்தியோகஸ்தர்களே!

பணியிடத்தில் உங்களைப் பாடாய்ப் படுத்திய மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். தள்ளிப் போன பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். உங்களின் திறமையைக் கண்டு உயரதிகாரி வியப்பார். இனி அநாவசியமாக விடுப்பு எடுக்கமாட்டீர்கள். அவ்வப்போது மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். சக ஊழியர்களில் சிலர் உங்களைப் பற்றி மேலதிகாரியிடம் குறை கூறுவார்கள். அலுவலகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் உஷாராக இருங்கள். சிலர் பணிபுரியும் அலுவலகத்திலிருந்து தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்படுவீர்கள். சம்பளம் உயரும்.

அலைச்சலும், பணப்பற்றாக்குறையும் முற்பகுதியிலிருந்தாலும் மையப் பகுதி முதல் திடீர் திருப்பங்கள் தரும் வருடமாகும்.

பரிகாரம்

சென்னை சோழிங்கநல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீப்ரத்யங்கரா தேவியை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். சாலை விபத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றியுண்டு.

அடுத்த கட்டுரைக்கு