‘விஷு’ என்ற சொல்லின் பொருள் `சமம்’ என்பதாகும். கேரளத்தில் `மேடம்’ எனப்படும் இந்த மாதத்தில், முதல் நாளின் பகலும் இரவும் சமஅளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

`விஷு’ திருநாளின் அதிகாலையில், பூஜையறையில் கண்ணனின் திருஉருவத் துடன் நால்வகை காய்கனிகள், மஞ்சள் நிறமுள்ள கொன்னைப்பூ, ஆபரணம், விசிறிபோல் மடித்த புதுவேட்டி ஆகிய அனைத்தையும் கண்ணாடியில் கண்டு தொழுது மகிழ்வர். இதனை `விஷுக்கணி’ என்பர். `கணி’ என்ற சொல்லுக்கு `முதலில் காண்பது’ என்று பொருள்.

இதில் கொன்னைப் பூவின் பின்னணியில் கதையொன்று உண்டு.

ஏழைச்சிறுவன் ஒருவன் தினமும் அம்மா சொல்லும் கண்ணன் கதைகளைக் கேட்டு, அவரை நேரில் தரிசிக்க ஆசைப்பட்டான். ஆகவே, மனமுருகி கண்ணனை வழிபட்டு வந்தான். அவனுக்கு, ஒரு விஷு திருநாளன்று காட்சி தந்த கண்ணன், இடைச் சதங்கை ஆபரணத்தையும் அளித்து அருள்பாலித்து மறைந்தார்.

மறுநாள் கோயிலில் பகவானின் இடையில் ஆபரணம் இல்லாததைக் கண்டு பதறிப்போன அர்ச்சகர்கள், ஊரைக்கூட்டி முறையிட்டார்கள். அது சிறுவனிடம் இருப்பதைக் கண்டு, அவனைப் பிடித்து வந்தார்கள் ஊர்க்காரர்கள். ‘அது கண்ணன் தந்தது’ என்று அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. ஆகவே, அந்தச் சிறுவன் மிகுந்த ஆதங்கத்துடன் ‘‘கண்ணா! உன்னால்தானே எனக்கு இந்தத் திருட்டுப் பட்டம். இதோ நீ தந்த பரிசு’’ எனக்கூறி, கோபத்துடன் அதை வீசியெறிந்தான். அந்த ஆபரணத்திலிருந்த பொற்காசுகள் அருகிலுள்ள மரத்தின் மீது சிதறி விழ, மறுகணம் அவை அந்த மரத்தில் மஞ்சள் வண்ண மணிவடிவ பூக்களாகப் பிரகாசித்தனவாம். இந்த அற்புதத்தைக் கண்ட மக்கள் உண்மையை உணர்ந்து மெய்சிலிர்த்தார்கள்.

அன்று முதல் விஷுக்கணி வைபவத்தில் இந்தப் பூக்களும் முக்கியத்துவம் பெற்றன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இந்தக் காலத்தில் மட்டுமே இப்பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன!

கணிகாணும் நேரம் கமல நேத்ரன்டே
நிறமேறும் மஞ்ஞ துகில் சார்த்தி
கனக கிங்கிணி வளகள் மோதிரம்
அணிஞ்ஞு காணேணம் பகவானே!

- லீலா நாராயணஸ்வாமி