Published:Updated:

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’
பிரீமியம் ஸ்டோரி
சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

Published:Updated:
சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’
பிரீமியம் ஸ்டோரி
சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

கோதரி நிவேதிதையின் இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபிள். இவருக்கு பிரம்மச்சரிய தீக்ஷை அளித்து, ‘நிவேதிதை’ என்ற பெயரைச் சூட்டியவர் சுவாமி விவேகானந்தர். `நிவேதிதை’என்றால் சமர்ப்பிக்கப்பட்டவள் என்று பொருள். ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்டு அடிமை தேசமாக இருந்த அயர்லாந்தில், சமய போதகராக பணியாற்றியவர். 

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

சாமுவேல் ரிச்மென்ட். அயர்லாந்து சுதந்திர நாடாக வேண்டும் என்று கனவுடன் சாமுவேல் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்காக,  இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் தமது மனைவி மேரி இஸபெல் ஹேமில்டனுடன் குடியேறினார். இங்கு, இவர்களின் முதல் குழந்தையாக 1867  அக்டோபர் 28-ஆம் நாள் மார்கரெட் எலிசபெத் நோபிள் பிறந்தார்.

சாமுவேல் தனது 34- வயதிலேயே மறைந்தார். அவர் மரணப் படுக்கையில் இருந்தபோது, தன் மனைவியை அழைத்து, ‘மார்கரெட்டுக்கு ஒருநாள் தெய்வத்தின் அழைப்பு வரும். அப்போது அவளைப் போகவிடு. அவள் தனது சிறகுகளை விரித்துப் பறந்து செல்வாள். செயற்கரிய பணிகளைச் செய்து சாதிப்பாள்’ என்றார். அவரின் வாக்கு அப்படியே பலித்தது.

மார்கரெட்டும் அவளுடைய தங்கை மே நோபிளும் இங்கிலாந்தில் ஹாலிபேக்ஸில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டு, விடுதியில் தங்கிப் படித்தனர்.

மார்கரெட்டைப் பற்றிய பள்ளி அறிக்கையில், ‘மிகச் சிறந்த திறமைகள் கொண்டவள்; அமைதியுடன் கம்பீரமும் கொண்டிருப்பவள்; அவளுடைய திறன்கள் அசாதாரணமானவை; சிறந்த நன்னடத்தை கொண்ட அவள், உண்மையே பேசுவதில் விருப்பம் கொண்டிருந்தாள். உயர்ந்த லட்சியப் போக்கு அவளிடம் காணப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

படிப்புக்குப் பிறகு ஆசிரியையாகப் பணியைத் தொடர்ந்த மார்கரெட், 1895-ல் விம்பிள்டனில் புதிய பள்ளியை ஆரம்பித்தார். இலக்கிய விவாத சங்கத்தின் செயலாளராகவும் பொறுப்பேற்றார். பெர்னாட்ஷா, ஹக்லி போன்ற பல அறிஞர்களும், விஞ்ஞானிகளும் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்துகொண்டனர்.

மார்கரெட் அங்கிருந்த காலத்தில்தான், அவருடைய நண்பர் ஒருவர், ஒரு சீமாட்டியின் வீட்டில் ஓர் இந்துத் துறவி பேசவிருப்பதாகக் கூறி, அவளையும் அழைத்தார்.  அதை ஏற்று அவர் சந்திக்கச் சென்ற துறவி சுவாமி விவேகானந்தர்.

சுவாமிஜியின் அறிமுகம் கிடைத்ததும் மார்கரெட் வாழ்க்கையில் புதிய பாதை பிறந்தது. தான் பின்பற்றப்பட வேண்டியவரும், தன்னுடைய குருநாதரும் சுவாமி விவேகானந்தர் தான் என்ற தெளிவு ஏற்பட்டது.

இந்தியா திரும்பிய சுவாமிஜி, ராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கினார். மக்கள் சேவையை மகேசனுக்கான தொண்டாகச் செய்யத் தூண்டிய சுவாமிஜியின் பணிகளில் தம்மையும் இணைத்துக்கொள்ள விரும்பினார் மார்கரெட்.  சுவாமிஜிக்கு எழுதி அனுமதி வேண்டினார். அவருக்கு ‘இந்தியாவுக்கான பணியில், அதன் எதிர்காலத்தில் உனக்கு ஒரு மகத்தான பங்கு ஒன்று உள்ளது என்பதில் நான் மிக உறுதியாக உள்ளேன்.

 இந்தியர்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே வேலை செய்ய இப்போது வேண்டியது ஓர் ஆணல்ல. பெண் சிங்கம். தற்போதைய இந்தியா சிறந்த பெண்களை உருவாக்க முடியாததாக இருக்கிறது. அவர்களை மற்ற நாடுகளிலிருந்து கடனாகத்தான் பெற்றாக வேண்டும். உனது கல்வி, ஈடுபாடு, தூய்மை, ஆழமான அன்பு, உறுதி அனைத்தையும் விட உன் உடலில் ஓடும் வீர ரத்தம் இவையெல்லாம் அந்தப் பெண் நீயே என்பதைக் கூறுகின்றன...’ என்று பதில் கடிதம் எழுதினார் சுவாமிஜி.    

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

இந்திய சேவையில் தம்மை அர்ப்பணிக்க 1898 ஜனவரி 28 அன்று கல்கத்தாவை அடைந்தார் மார்கரெட். அவரை வரவேற்க சுவாமி ஜியே துறைமுகத்துக்கு வந்திருந்தார். சுவாமிஜி மார்கரெட்டுக்காக ஒரு வீட்டை அமர்த்தியதுடன் வங்கமொழி கற்பிக்கவும் ஏற்பாடு செய்தார்.

 விரைவிலேயே வங்கமொழியில் பேசும் அளவுக்கு முன்னேறினார் மார்கரெட் சுவாமிஜி மூலம் மேலைநாட்டுத் தோழிகளோடு சாரதாதேவியைத் தரிசித்து ஆசிபெற்றார் மார்கரெட். அந்த நாள் தனது வாழ்வில் ஒரு புனித நாளாக அமைந்தது என்று பிற்காலத்தில் சகோதரி நிவேதிதை பக்தியுடன் எழுதினார்.

1898 மார்ச் 28-ஆம் நாள் நிவேதிதையை மடத்திற்கு அழைத்துச் சென்று சிவபூஜையைக் கற்றுத்தந்தார் சுவாமிஜி. அத்துடன் அவருக்கு மந்திர தீக்ஷை அளித்து நிவேதிதை என்று பெயரையும் சூட்டினார். சேவைப் பணியில் நிவேதிதையைப் பயிற்றுவிப்பதில் சுவாமி விவேகானந்தர் அதிகம் முயற்சி எடுத்துக் கொண்டார். 

சுவாமிஜியின் துறவறச் சீடரில் ஒருவரான ஸ்வரூபானந்தரிடம் இந்திய சாஸ்திரங்களைப் பயின்றார் நிவேதிதை. அத்துடன் பல்வேறு ஆன்மிகப் பயிற்சிகளையும் அவரிடம் கற்றுக் கொண்டார். 1898 மே மாதத்தில் கல்கத்தாவை பிளேக் நோய் தாக்கியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர்.

நிவேதிதையின் தலைமையில் சுவாமிஜி ஒரு நிவாரணக் குழுவை அமைத்தார். அவரது தலைமையிலான தொண்டர்படை தங்களது உயிரைத் துச்சமென மதித்து அயராது சேவை ஆற்றியது. சுவாமி விவேகானந்தரின் அனுமதியோடும் ஆசியுடனும்  1898 நவம்பர் 13 தீபாவளி நாளன்று நிவேதிதை பள்ளியைத் தொடங்கினார்.

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’ அங்கு தூய அன்னை ஸ்ரீசாரதாதேவியே நேரில் வந்து பள்ளியைத் திறந்து வைத்து ஆசீர்வதித்தார். அத்துடன் பெண் குழந்தைகளின் தாயார்களுக்கும் கல்வி அளிக்க ஏற்பாடுகளைச் செய்த நிவேதிதை, அவர்கள் சுயதொழில் செய்வதற்கான பயிற்சியும் அளித்தார்.

இந்தியச் சுதந்திரத்திற்காகப் பாடுபடவும் முடிவெடுத்த நிவேதிதை பள்ளியில் ஆங்கிலேய அரசு தடை செய்த `வந்தேமாதரம்’ பாடலைப் பிரார்த்தனைப் பாடலாக அமைத்தார்.

தமக்குத் தெரிந்த வங்கப் பெண்களை இந்திய தேசத்துப் பொருள்களை வாங்கவும் இந்தியத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டார். 1902 ஜூலை 4-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் மறைந்தார். அதனால் உள்ளம் துயருற்றாலும் தம்மை முற்றிலுமாக இந்தியப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள உறுதிபூண்டார் நிவேதிதை. 

பல்வேறு இடங்களில் அவர் நிகழ்த்திய உரை முக்கியத்துவம் பெற்றது. இந்திய தேசியக் கொடியை முதன் முதலில் வடிவமைத்தவர் நிவேதிதையே. அந்தக் கொடியில் ததீசி முனிவரின் தியாகத்தை உணர்த்தும் வஜ்ராயுதத்தைப் பதித்திருந்தார்.

விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திர போஸின் முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருந்தார் நிவேதிதை. அரவிந்தர் மற்றும் பல்வேறு சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து இந்திய விடுதலைக்காகப் பல திட்டங்களைத் தீட்டினார்.

நிவேதிதையிடமிருந்து இந்திய விடுதலை, பெண்கள் சுதந்திரம் போன்றவற்றை உபதேசம் பெற்றவர் மகாகவி பாரதியார்.தம்முடைய கவிதைகளில் அவற்றை வெளிப்படுத்தும்படி நிவேதிதை அவருக்கு ஆணையிட்டார். தாம் எழுதிய நூல்கள் சிலவற்றை நிவேதிதையின் திருவடிகளுக்கு அர்ப்பணித்துள்ளார் பாரதியார். நிவேதிதையை தமது குருமணி தேவியாகப் போற்றினார் மகாகவி பாரதி.

இந்தியாவின் விடுதலைக்காகவும், அது பல துறைகளில் மேம் படவும் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த நிவேதிதை 1911 அக்டோபர் 13 அன்று டார்ஜிலிங்கில் தமது உடலை உகுத்தார். நிவேதிதையின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டு, ‘தமது அனைத்தையும் இந்தியாவிற்கு அர்ப்பணித்த சகோதரி நிவேதிதை இங்கே ஓய்வெடுக்கிறார்’ என்று அங்குள்ள கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

நிவேதிதையின் அற்புதமான வாழ்வை இன்னும் விரிவாக அறிந்து,  இந்தியாவின் முன்னேற்றத்திற்காக நாம் நமது வாழ்வை அர்ப்பணிக்க அவரது 150-வது நூற்றாண்டில் சபதம் ஏற்று பாடுபடுவோம்!

சகோதரி நிவேதிதை 150-வது பிறந்த ஆண்டு - ‘சமர்ப்பிக்கப்பட்டவள்’

பட்டை நாமம்!

`அ
வனிடம் கொடுத்தால் காசு திரும்பி வராது. அப்புறம் உனக்குப் பட்டை நாமம்தான்’ என்று பலரும் சொல்லக் கேட்டிருப்போம். `நாமம் சாத்துதல்’ என்ற வசனத்தைச் சிலர் இப்படி வேடிக்கையாகக் குறிப்பிடுவது உண்டு. இதற்காக கோபப்படத் தேவையில்லை.

 தியாகராஜ ஸ்வாமிகளே தம் குலதெய்வமான ராமனைக் குறித்து பாடிய ‘ராமா தைவமா ராகலோவமா’ என்ற பாடலில், நகைச்சுவையோடு குறிப்பிடுகிறார்... ‘ரங்கநாத மூர்த்தியை விபீஷணனுக்குக் கொடுத்து, அவன் அதை இலங்கைக்கு எடுத்துப்போக முடியாமல், திருவரங்கத்திலேயே வைத்துவிடும்படியாகச் செய்து, அவனுக்குப் பட்டைநாமம் இட்டாயே’ என்கிறார் (ரங்கராஜு விபீஷணனிகி பங்க நாமமு இடின ரீதி).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism