Election bannerElection banner
Published:Updated:

ஓவியர் ஜெ.பி-யின் சித்திரங்களில் தெய்வீக தரிசனம் - ஐப்பசி மாத 'இறையருள்' மின்னிதழ்! #Iraiyarul

ஓவியர் ஜெ.பி-யின் சித்திரங்களில் தெய்வீக தரிசனம் - ஐப்பசி மாத 'இறையருள்' மின்னிதழ்! #Iraiyarul
ஓவியர் ஜெ.பி-யின் சித்திரங்களில் தெய்வீக தரிசனம் - ஐப்பசி மாத 'இறையருள்' மின்னிதழ்! #Iraiyarul

ஐப்பசி மாத ‘இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திபூர்வமான, பரவசம் நிறைந்த ‘சித்திர தரிசன’த்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம்...

கோயில்களை வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, கல்விக்கூடங்களாகவும் கலைக்கூடங்களாகவும் வடிவமைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். சிற்பிகளின் தேர்ந்த கைவண்ணத்தில் அதிநுட்பமான, அழகியல் ததும்பும் பல்லாயிரக்கணக்கான சிற்பங்கள் நம் கோயில்களில் நிறைந்திருக்கின்றன. வியக்க வைக்கும் அந்தச் சிற்பங்களையும் தெய்வ மூர்த்தங்களையும் அழகாகவும் ரசனையுடனும் தனது தூரிகைகளால் கோட்டோவியமாக்கிப் பதிவு செய்திருக்கிறார் ஓவியர் ஜெ.பி. ஐப்பசி மாத `இறையருள்’ மின்னிதழ் ஓவியர் ஜெ.பி-யின் சித்திரங்களைத் தாங்கி வருகிறது. 

'இறையருள்' மின்னிதழை விகடன் ஆப்பிலேயே படிக்கலாம்.
bit.ly/2EL4PL7 இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்யுங்கள்!

முறுக்கு மீசையும் மிரட்டும் பார்வையும் கொண்டு தோற்றமளிக்கும் வீரபத்திரர், தூணில் சிற்பமாகக் காணப்படும் நளின நடராஜர், நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டிருக்கும் ஸ்ரீவரசித்தி விநாயகர், பல்வேறு கோயில்களில் நாம் கவனிக்கத் தவறும் அஷ்டதிக் பாலகர்கள், ஆதிசங்கரர் வழிபட்ட ஸ்ரீசைலம் ஸ்ரீமல்லிகார்ஜுனர், சக்தி மிக்க மைசூர் சாமுண்டீஸ்வரி, பார்க்கும்போதே பரவசப்படுத்தும் குண்டுக் கிருஷ்ணன், எங்கும் காணாத கோலமாக யம தர்மனுடன் அருள்புரியும் சோமாஸ்கந்தர், தொந்தி சரிய நடனமாடும் நர்த்தன விநாயகர் என்று பலரும் அறிந்திராத அற்புதச் சிற்பங்கள் ஜெ.பி-யின் கைவண்ணத்தில் கோட்டோவியமாக உயிர்பெற்றுள்ளன. 

இதுவரைக்கும் 'இறையருள்' மின்னிதழை நேரடியாக லிங்க் மூலம் டிரைவிலிருந்து டவுன்லோடு செய்து படித்துவந்தீர்கள். ஆனால், இனிமேல் நேரடியாக விகடன் ஆப்பிலேயே படிக்கலாம். 

bit.ly/2EL4PL7 - இந்த லிங்க்கை க்ளிக் செய்து முதலில் விகடன் ஆப்பை டவுன்லோடு செய்து, பின்னர் `Magazines' பகுதிக்குச் செல்லவும். அங்கே லேட்டஸ்ட் 'இறையருள்' இதழ் இடம்பெற்றிருக்கும். அதை க்ளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளலாம். ஒருமுறை டவுன்லோடு செய்துவிட்டால், பின்னர் இணைய இணைப்பு இல்லாதபோதும்கூட படித்துக்கொள்ளலாம். முந்தைய இதழ்களும் ஒரே இடத்தில் வரிசையாக இடம்பெற்றிருக்கும். அவற்றையும் டவுன்லோடு செய்து படித்துக்கொள்ளலாம்.

ஐப்பசி மாத ‘இறையருள்’ மின்னிதழ், ஒரு பக்திபூர்வமான, பரவசம் நிறைந்த ‘சித்திர தரிசன’த்தை உங்களுக்குத் தரும் என்று நம்புகிறோம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை bodynsoul@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு