பிரீமியம் ஸ்டோரி

வாரியார் வழி!

கல்யாணத்தில் கலந்துகொள்வதில்கூட ஓர் ஒழுங்குமுறையை வைத்திருந்தார் வாரியார் சுவாமிகள். `வாரியார்  வாக்கு' எனும் நூலில் அவர்  சொல்கிறார்: “திருமண காலத்தில்  முப்பது நாற்பது கல்யாணப் பத்திரிகைகள் அடியேனுக்கு வரும்; இன்னார் என்று கூடத் எனக்குத் தெரியாது. ஆயினும் அவர்களை ஆசீர்வதித்து, வெண்பா பாடி அனுப்புவேன். எதற்காக? ஒரு பண்பாட்டுக்காக, அவர்களைத் திருப்திப்படுத்து வதற்காக.  

ஆன்மிக துளிகள்

கொஞ்சம் தெரிந்தவர் என்றால், விபூதியும் குங்குமப் பிரசாதமும் அனுப்புவேன். இன்னும் நெருக்கமானவர்கள் என்றால், நான் எழுதிய புத்தகங்களை அனுப்புவேன். இன்னும்  கொஞ்சம் நெருக்கமானவர்கள்  என்றால், என் தம்பியை அனுப்புவேன். நிரம்ப  வேண்டியவர்கள் என்றால், நானே வருவேன். மிகமிக வேண்டியவர்கள் என்றால், என் சம்சாரத்தோடு வருவேன்.”

ஆன்மிக துளிகள்

சிரமாறுடையான்!

ஒரு புலவர் ‘சிரமாறுடையான்’ என்று ஆரம்பித்து ஒரு பாடல் பாடினார். பின்னர், அப்பாடல் பல கடவுளரையும் குறிப்பதை விளக்கினார்.

சிரம் + ஆறு + உடையான்: தலையில் கங்கை நதியைக் கொண்டவன்.

சிரம் + ஆறு + உடையான்: ஆறு தலைகளைக்கொண்ட ஆறுமுகப்பெருமான் (முருகன்).

சிரம் + ஆறு + உடையான் (சிரமாறுடையான்): மாறுபட்ட தலையை உடைய விநாயகர்.

சிரம் + ஆறு + உடையான் = திருவரங்கத்தில் தன் தலைப் பக்கத்தில் காவிரி ஆறு பாய, பள்ளிகொண்டிருக்கும் திருமால்.

ஆன்மிக துளிகள்

துதிக்கையிலே...

“ஒளவையார் விநாயகர் அகவலைப் பாடி முடித்ததும், அவரைத் தமது துதிக்கையால் துக்கி, திருக்கயிலாயத்தில் சேர்த்தார் விநாயகர். அப்படி, அங்கே சென்ற ஒளவை வாயிலில் அமர்ந்திருந்தார்.
பின்னர் வந்த சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைக் காணும் வேகத்தில் சென்றதால், ஒளவையைக் கவனிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு வந்த சேரமான்பெருமான் நாயனார் கண்டுகொண்டார். “நீங்கள் எப்படி இங்கு வந்து சேர்ந்தீர்கள்?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டார். ஒளவை பதில் சொன்னார்: “விநாயகரை பூஜை பண்ணினேன்.

அவரைத் `துதிக்கையிலே' அவருடைய `துதிக்கையிலே'

வந்து சேர்ந்தேன்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு