Published:Updated:

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

ஆ.சாந்தி கணேஷ்படங்கள்: ப.சரவணகுமார், ப.பிரியங்கா

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

ஆ.சாந்தி கணேஷ்படங்கள்: ப.சரவணகுமார், ப.பிரியங்கா

Published:Updated:
காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

கா பாரதம்! இந்த மாபெரும் இதிகாசத்தை, 35 பெண்கள் இணைந்து, நான்கு வருட உழைப்பில், 113 ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள். 30 வயது தொடங்கி 75 வயது பெண்கள் வரை இந்தக் கலைக்காக சங்கமித்திருக்கிறார்கள். சென்னையில் உள்ள லலித் கலா அகாடமியின் கூரையின் கீழ், தங்களின் அந்த ஓவிய இதிகாசத்தை கண்காட்சியாகப் படைத்திருந்தார்கள்.

சாந்தனு - கங்கா காதலில் ஆரம்பித்து கீதோபதேசம் வரையிலுமான கேரள பாணியிலான அந்த மியூரல் ஓவியங்களின் கண்காட்சியை, ஓவியக் கலையின் ரசிகர்கள் மட்டுமல்ல, அதில் ஜாம்பவான்களான மணியம்செல்வன், கேசவ், ராமு, ஓவியரும் நடிகருமான சிவகுமார் ஆகியோரும் விழியகல பாராட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஒரு வாரம் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற படங்களைக் கேரளம் மற்றும் சென்னையைச் சேர்ந்தப் பெண்கள், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் என இணைந்து வரைந்தார்களாம். இவர்களின் குரு, கேரளாவைச் சேர்ந்த பிரின்ஸ் தொன்னக்கல். ஒரு முன் மதிய வேளையில் இந்த மகாபாரத ஓவியப் பெண்களைச் சந்திக்கக் கிளம்பினேன். தரையெங்கும் இறைந்துகிடந்த பெயர் தெரியாத அந்தப் பெரிய பெரிய சிவப்பு மலர்களை ரசித்தபடியே உள்ளே நுழைந்த என்னை, ஓவியங்கள் வரவேற்றன.

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

வியாசரின் மகா பாரதத்தை விநாயகர் எழுத ஆரம்பிக்கும் ஓவியம்தான் முதல் படம். கீதோபதேசம் என்றாலே, தேரில் பரந்தாமனும் அவன் காலடியில் பார்த்தனும்தான் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், இந்தக் கண்காட்சியில் கீதோபதேசத்தை 35 யோகங்களாகப் பிரித்து வரைந்திருக்கிறார்கள். பிரமிப்புடன் ரசித்துக்கொண்டிருந்த என்னை, ‘`சக்தி விகடன்ல இருந்து வந்திருக்கீங்களா? உங்களுக்காகத்தான் காத்திட்டு இருந்தோம்’’ எனச் சூழ்ந்து கொண் டார்கள் அந்த ஓவியப் பெண்மணிகள்.

‘`மகாபாரதத்தை 113 சம்பவங்களாகப் பிரித்து, அவற்றைப் பேப்பரில் எழுதி, குலுக்கல் முறையில் ஆளுக்கு மூன்று அல்லது நான்கு சம்பவங்களை எடுத்து, அதன் அடிப்படையில் ஓவியங்களை வரைய ஆரம்பித்தோம். குருக்ஷேத்திரப் போரின் முடிவில் கிருஷ்ணனுக்கு காந்தாரி சாபம் தருகிற ஓவியமும், சிறுவயதில் துரியோதனனால் விஷம் வைத்து கங்கையில் விட்டெறியப்பட்ட பீமன் ஓவியமும் எனக்கு வந்தன. ஓவியங்களை வரைய ஆரம்பித்த அன்று கிருஷ்ண ஜயந்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

முதல் ஓவியமே காந்தாரி கண்ணனுக்குச் சாபம் தருவதாக அமைந்துவிட்டது. கண்ணன் எனக்குப் பிடித்த தெய்வம். அவனுடைய ஜன்மாஷ்டமி அன்று இப்படிப்பட்ட ஓவியத்தை வரைய மாட்டேன் என்று மறுத்துவிட்டு,  மறுநாள்தான் வரைய ஆரம்பித்தேன்’’ என்று சொல்லும் கல்பனா, பீமனின் ஓவியம் தொடர்பாகவும் ருசியான ஒரு தகவலைச் சொன்னார்.

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

காணாமல் போன சிறுவன் பீமன் இறந்து விட்டான்  என்று, குந்தி அவனுக்குக் கங்கைக் கரையில் படையல் போடப் போகிறாள். அதற்கா கக் காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கும் போது, பீமன் கங்கைக்குள் இருந்து வெளியே வந்து விடுகிறான். வந்தவன் பசி தாங்காமல் தாய் குந்தி நறுக்கி வைத்த காய்கறிகளை எல்லாம் ஒன்றாக வேகவைத்து அதனுடன் தயிரைக் கலந்து சாப்பிடு கிறான். இதுதான் அவியலின் முன்னோடியாம்.

அடுத்துப் பேசிய டாக்டர் ரமாதேவி, விலங் கியல் ஆராய்ச்சியாளராக இருந்து ஆறு வருடங் களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர். ‘`மகா பாரத ஓவியங்களை வரையும்போதெல்லாம் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களைச் சொல்லிக்கொண்டேதான் வரைவேன்’’ என்கிறார் பயபக்தியுடன்.

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

‘`வீட்டு வேலைகளை வேக வேகமாக முடித்து விட்டு, பகலிரவு தூக்கம் மறந்து வரைந்தோம். எங்களுக்கு இருந்த முதுகுவலி, கழுத்துவலி மாதிரியான எல்லா உபாதைகளையும் பகவானின் காலில் இறக்கி வைத்துவிட்டே ஓவியங்களை வரைந்தோம். வரைந்து முடிக்கிற வரை உடம்பில் ஒரு பிரச்னையும் வரவில்லை’’ என்று வானத்தை நோக்கி கை தொழுகிறார்கள் மைதிலியும் புவனேஸ்வரியும்.

உஷா ரமேஷும், ரேவதி குமாரும் தஞ்சை பாணி, கேரள பாணி ஓவியக் கலையில் அனுபவத் தில் மூத்த ஆசிரியர்கள். இவர்கள், ‘`மகாபாரதத்தை ஓவியங்களாக வரைந்த நான்கு வருடங்களும் ஒரு தவம் புரிந்ததைப்போல, பெரும் யாகம் செய்தது போலவே உணர்ந்தோம்’’ என்று நெக்குருகினார்கள்.

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!
காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

பிரியதர்ஷினியின் உணர்வுகள் வேறு வண்ணம் காட்டின. ‘`ஓவியங்கள் வரையும்போது இருக்கிற மகிழ்ச்சியெல்லாம், அவற்றின் கண்களைத் திறக்கும் நேரத்தில் பதற்றமாக மாறிவிடும். ஸ்லோ கங்களோ அல்லது கண்ணன் மீதான பக்திப் பாடல்களோ பாடியபடியேதான் ஓவியங்களின் கண் திறப்பேன். கர்ணன் மீது அர்ஜுனன் அம்பெய்திக் கொல்லும்போது, கர்ணனுடைய தேர்ச் சக்கரத்தை க்ளோஸ் - அப் ஆக வரைவோம் இல்லையா..? நான் செட்டிநாடு குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால், அந்தத் தேர்ச் சக்கரத்தில் எங்கள் செட்டிநாட்டுக் கதவுகளில் காணப்படுகிற ஓவியங்களை எல்லாம் வரைந்தேன்’’ என்கிறார் மண்ணின் மகளாக.

காவியம் படைத்த ஓவியப் பெண்கள்!

வி.ஐ.பி ஒருவருக்கு ஓவியங்களைப் பற்றி விளக்கிவிட்டு வந்த விஜய நிர்மலா, ‘`அந்தக் காலத்தில் கேரளாவில் உள்ள கோயில் சுவர் களில்தான் மியூரல் ஓவியங்களை வரைவார்கள். பெண்களால் சில நாள்கள் கோயிலுக்குள் செல்ல முடியாது என்பதால், பெண்களுக்கு இந்த ஓவியத் தைக் கற்றுக்கொள்ள அனுமதி அளிக்கவில்லை. இன்றோ, பெண்கள் இணைந்து ஓர் இதிகாச மியூரல் ஓவியம் படைத்திருக்கிறோம். வணக்கங் களும் நன்றிகளும் குரு பிரின்ஸ் தொன்னக்கல்லுக்கு’’ என்றார் உத்தம சிஷ்யையாக. அந்த நேரத்தில் குருவும் அங்கே வந்துவிட, குரு வரைந்த மகா விஷ்ணுவின் விஸ்வரூப ஓவியத்தின் முன்னால் புகைப்படம் எடுக்க நின்றார்கள் அனைவரும்.

‘புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே... எங்கள் திறமையை உலகம் பாராட்டினால் அதுவும் கண்ணனுக்கே’ என்றபடி புன்னகையோடு விடை கொடுத்தார்கள் அந்த ஓவியப் பெண்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism