பிறரிடம் உள்ள குறைகளையும் பலவீனத்தையும் பார்ப்பது மனிதர்களின் இயல்பு. அதே நேரத்தில், பிறரின் சக்தியையும் திறமையையும் பார்த்து, பாராட்டும் நேர்மறைச் சிந்தனை உள்ளவர்களும் நம்மில் இருக்கிறார்கள். அப்படியானவர்கள், இறைவனின் ஆசீர்வாதம் பெற்றவர்கள்.

வீரம் நிறைந்த அரசன் ஒருவன், பல நாடுகளின் மேல் படையெடுத்து வென்றான். கடைசியாக அவன் நடத்திய போரில் படுகாயமடைந்தான். எப்படியோ உயிர் பிழைத்தான். ஆனாலும், அவனுடைய ஒரு கண்ணும், இடது முழங்காலுக்குக் கீழிருந்த பகுதியும் பறிபோயிருந்தன. ஒருநாள் அரண்மனையைச் சுற்றிவந்த அரசனின் கண்களில் அந்த ஓவியம் தென்பட்டது. அது, அவனுடைய தந்தையின் ஓவியம். மிக பிரமாண்டமான சட்டத்துக்குள், இடுப்பில் உடைவாள் தொங்கிக்கொண்டிருக்க, நிமிர்ந்த நிலையில், கூர்மையான கண்களோடு அழகாகத் தெரிந்தார் அவன் தந்தை. அப்போதுதான் அரசனுக்கு அவனுடைய ஓவியம் ஒன்றுகூட அரண்மனையில் இல்லை என்பது உறைத்தது.

மந்திரிகளை அழைத்தான். ``உடனே தண்டோரா போட்டு, நாட்டிலுள்ள எல்லா ஓவியர்களையும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று அரண்மனைக்கு வரச் சொல்லுங்கள்’’ என்று உத்தரவு போட்டான்.

எல்லா ஓவியர்களும் அரண்மனையில் வந்து கூடினார்கள். அரசன் வந்தான். நேரடியாக விஷயத் துக்கு வந்தான். ``ஓவியர்களே... என் உருவத்தை அழகான ஓவியமாக வரையவேண்டும். உங்களில் யார் வரையப் போகிறீர்கள்?’’ என்று கேட்டான்.

இதை ஓவியர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு காலையும், ஒரு கண்ணையும் இழந்த அரசனை ஓவியமாக வரைவது அவனை அவமானப் படுத்துவதற்கு ஒப்பானது. அதே நேரத்தில், அவனை அழகானவனாக, முழு உருவம் இருப்பதுபோல வரைவது ஏமாற்று வேலை. யாருமே அதை ஏற்கமாட்டார்கள். ஆக, அரசனை ஓவியமாக வரைவது சாத்தியமில்லை. இப்போது என்ன செய்யலாம்... ஓவியர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பதில் சொல்லாமல் தலை கவிழ்ந்து நின்றிருந்தார்கள்.

``என்னை ஓவியமாக வரைவதற்கு ஒருவர்கூட இல்லையா?’’ - அரசனின் குரலில் கோபம் தொனித்தது.

ஓர் இளம் ஓவியன் முன்னே வந்து நின்றான்.

``அரசே... நான் உங்களை வரைகிறேன்.’’

எல்லோரும் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தார்கள்.

``என் ஓவியம் எப்போது கிடைக்கும்?’’

``ஒரு மாதத்தில் கொடுத்துவிடுகிறேன்.’’

ஒரு மாதம் முடிந்தது. அன்றைக்கு மற்ற ஓவியர்களும் அரண்மனையில் குழுமியிருந்தார்கள். அரசன் முன்னிலையில் அந்த இளம் ஓவியன் தான் வரைந்த ஓவியத்தின் திரையை விலக்கிக் காட்டினான். எல்லோருடைய விழிகளும் விரிந்தன.

அந்த ஓவியத்தில் அரசன் ஒரு காலை மடித்த நிலையில் தரையில் அமர்ந்திருந்தான். அதனால் சேதமடைந்திருந்த மற்றொரு கால் வெளியே தெரியவில்லை. அவன் கையில் வில். ஒரு கை நாணை இழுத்துப் பிடித்திருந்தது. அரசனின் இடது கண் மூடியிருக்க, மற்றொரு கண் எதையோ குறிபார்த்துக்கொண்டிருந்தது. வெகு அற்புதமாக வரையப்பட்டிருந்தது அந்த ஓவியம். கூடியிருந்த அன்பர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.

- பாலு சத்யா ஓவியம்: பிள்ளை

ஒரு துளி சிந்தனை

`எதையும் எதிர்மறையாகவே சிந்திக்கும் மனப்பான்மை பலவீனத்தை ஏற்படுத்தும்; நேர்மறை மனப்பான்மை சக்தியைக் கொடுக்கும்.’ - அமெரிக்க தத்துவவியலாளர் வில்லியம் ஜேம்ஸ்