`முடியும்’ என்கிற நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் போதும்; ஒருவரால் மலையைக்கூட நகர்த்திவைத்துவிட முடியும். என்ன... `அதெல்லாம் உன்னால முடியாதுப்பா’ என்று யாராவது அந்த மனிதருக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.

அது ஒரு மலை கிராமம். அங்கே இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். ஒருவனுக்கு 10 வயது; மற்றவனுக்கு ஏழு வயது. இருவரும் நண்பர்கள். பக்கத்து ஊரிலிருக்கும் பள்ளிக்குப் போவார்கள். மற்ற நேரமெல்லாம் ஊரை அடுத்திருக்கும் காட்டுப் பகுதியில் சுற்றித் திரிவார்கள்; விளையாடுவார்கள்.

ஒருநாள், காட்டுக்குச் சென்றிருந்தபோது, 10 வயது சிறுவன், ஒரு கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியும். அதனால் தண்ணீரில் லேசாக நீச்சலடித்தபடி மிதந்துகொண்டிருந்தான். ஆனால், அந்தக் கிணற்றிலிருந்து மேலே வர எந்தப் பிடிமானமும் இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஆள் நடமாட்டமும் இல்லை.

``நான் ஊருக்குள்ள போய் யாரையாவது கூட்டிட்டு வர்றேன்டா...’’ என்றான் சின்னவன்.

``வேணாம்டா. போயிடாதே... எனக்குத் தனியா இருக்க பயமாயிருக்கு.’’

சின்னவன் யோசித்தான். அக்கம் பக்கம் பார்த்தான். சற்று தூரத்தில், ஒரு மரத்தடியில் இரும்பு வாளியும் கயிறும் கிடந்தன. கயிற்றில் வாளியை இறுக்கமாகக் கட்டினான். அதைக் கிணற்றுக்குள் விட்டான். ``டேய்... பக்கெட்டை கெட்டியாப் பிடிச்சுக்கோ... நான் இழுக்குறேன்.’’

பெரிய பையன் வாளியைப் பிடித்துக்கொள்ள, சின்னப் பையன் தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி கயிற்றை இழுத்தான். கயிற்றைப் பிடித்தபடி கொஞ்ச நேரத்தில் பெரிய பையன் மேலே வந்துவிட்டான்.

இருவரும் கிராமத்துக்குள் வந்தார்கள். பெற்றோரிடமும் ஊராரிடமும் நடந்ததைச் சொன்னார்கள். ஆனால், எவரும் நம்பவில்லை.கிராமத்தில் வயசாளி ஒருவர் இருந்தார். அனுபவஸ்தர். அவரும் சிறுவர்கள் சொன்னதைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். ஒருவன் அவரிடம் சொன்னான்... ``பாட்டா... எப்பிடி பொய் சொல்றானுங்க பாருங்க. இவனோ சின்னவன். பலவீனமான உடம்பு. இவன் போய் அவ்வளவு பெரிய பையனைக் காப்பாத்தினானாம். நீங்க நம்புறீங்களா?’’

``நம்புறேன்.’’

கேள்வி கேட்டவன் ஆச்சர்யமாகப் பார்த்தான். ``எப்பிடி பாட்டா..?’’

``ஏன்னா, அவனால பெரியவனைக் காப்பாத்த முடியாதுன்னு அவன்கிட்ட சொல்றதுக்கு யாரும் இல்லை. சின்னவனுக்கு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை பெரியவனைக் காப்பாத்திடுச்சு.’’

நம்பிக்கை என்ன செய்யும்? எதை வேண்டுமானாலும் செய்யும் ஆற்றலைக் கொடுக்கும்!

பாலு சத்யா

ஒரு துளி சிந்தனை

`பயம் என்பதன் மறுபக்கத்தில்தான் உங்களுக்குத் தேவைப்படும் அத்தனையும் கொட்டிக்கிடக்கின்றன.’

- ஜார்ஜ் டபிள்யூ அட்டெய்ர்