Published:Updated:

எதற்கும் உண்டு எல்லை!

எதற்கும் உண்டு எல்லை!
பிரீமியம் ஸ்டோரி
எதற்கும் உண்டு எல்லை!

ஓவியம்: பிள்ளை

எதற்கும் உண்டு எல்லை!

ஓவியம்: பிள்ளை

Published:Updated:
எதற்கும் உண்டு எல்லை!
பிரீமியம் ஸ்டோரி
எதற்கும் உண்டு எல்லை!

`மனிதப் பிரயத்தனத்தால் முடியாதது எதுவுமில்லை!’ உண்மை. ஆனால், அதற்கும் சில எல்லைகள் உண்டு என்பதை, அவ்வப்போது நம் தலையில் குட்டிக் குட்டி இயற்கை பாடம் எடுத்துக்கொண்டேயிருக்கிறது.

எதற்கும் உண்டு எல்லை!

அண்டவெளியிலிருக்கும் எண்ணற்ற பால்வீதி களில், ஒரு சூரிய குடும்பத்திலிருக்கும் பூமியில், அதிலிருக்கும் ஒரு கண்டத்தில், ஒரு நாட்டில், ஒரு மாநிலத்தில், ஓர் ஊரில், ஏதோ ஒரு தெருவில், ஒரு வீட்டில் வசிக்கும் மனிதன் தன் எதிர்காலம் குறித்து பேராசைக் கணக்குப் போடுவது எத்தனை வேடிக்கை!

இதைத்தான் `மனிதன் நினைப்பதுண்டு... வாழ்வு நிலைக்குமென்று; இறைவன் நினைப்பதுண்டு... பாவம் மனிதனென்று’ என எல்லோருக்கும் புரியும் எளிய மொழியில் சொன்னார் கண்ணதாசன். கவியரசர் மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எத்தனையோ பேர் இதுகுறித்து எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஆங்கில எழுத்தாளர் சாமர்செட் மாம் (Somerset Maugham) எழுதியிருக்கும் ஒரு கதை, வாழ்க்கை யதார்த்தத்தை எளிமையாக விளக்கும்.

பாக்தாத்தில் புகழ்பெற்ற வணிகர் ஒருவர் இருந்தார். ஒருநாள் தன் வேலையாளை, கடைத்தெருவுக்குப் போய் ஒரு மளிகைச் சாமானை வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். போனவன், சற்று நேரத்தில் திரும்பி வந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது; முகம் வெளிறிப் போயிருந்தது. அவனுடைய தோற்றத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட வியாபாரி, ``என்னப்பா ஆச்சு... ஏன் இப்படிப் பதட்டமா ஓடி வர்றே?’’ என்று கேட்டார்.

``எஜமான்... நான் கடைத்தெருவுக்குப் போனப்போ, கூட்டத்துல யாரோ ஒருத்தர் என்னை முட்டித் தள்ளுற மாதிரி இருந்துச்சு. திரும்பிப் பார்த்தா, அது மரண தேவதை. அது என்கிட்ட சைகையில என்னமோ கேட்டுச்சு. அது என் காதுலயே விழலை. நான் பயந்து போய் ஓடி வந்துட்டேன்.’’

``நிச்சயமா அது மரண தேவதைதான்னு உனக்குத் தெரியுமா?’’

``ஆமாங்க எஜமான்...’’

``சரி... இப்போ என்ன பண்ணப் போறே?’’

``எனக்கு என்னவோ அது என்னைத் தேடித்தான் வந்திருக்குனு தோணுது. அதனால, அது கண்ணுல படாம எங்கேயாவது போயிட்டா நல்லதுனு நினைக்கிறேன். நீங்க உங்க குதிரையைக் கொடுத்தீங்கன்னா, அதுல ஏறி நான் தூரத்துல இருக்குற சமாரா நகரத்துக்குப் போயிடுவேன். தேவதையால அங்கே வர முடியாதுல்ல?’’

எஜமானர் தாமதிக்கவில்லை. அந்த வேலை யாளுக்குத் தன் குதிரையையும் செலவுக்குக் கொஞ்சம் பணமும் கொடுத்தார். அவனும் உடனே கிளம்பி, எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக குதிரையைச் செலுத்திக்கொண்டு சமாரா நகரத்தை நோக்கிப் போனான்.

அவன் போனதும் வணிகர் கடைத் தெருவுக்குப் போனார். அவர் கண்ணுக்கும் அந்த மரண தேவதை தென்பட்டது. அவர் அதனிடம் போனார். அவர் கொஞ்சம் தைரி யமானவர். மரண தேவதை என்று தெரிந்துமே அதனிடம் பேச்சுக் கொடுத்தார். ``ஆமா... என் வேலையாள் வந்தப்போ சைகையில எதையோ சொல்லி பயமுறுத்தினீங்களாமே... என்ன விஷயம்?’’ என்று கேட்டார்.

``நான் அவனை பயமுறுத்தல்லாம் இல்லை... அவனைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். ஏன்னா, என் கணக்குப்படி இன்னிக்கி ராத்திரி நான் அவனை சமரா நகரத்துல சந்திக்கணும். அவன் என்னடான்னா, இங்கே பாக்தாத்துல இருந்தான். நான் ஆச்சர்யப்பட்டதைப் பார்த்து, பயமுறுத்துறேன்னு நினைச்சிட்டான்போலருக்கு....’’

பாலு சத்யா 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு துளி சிந்தனை

`இ
ந்தக் கணத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்; இந்த கணம் மட்டும்தான் நீங்கள் வாழும் வாழ்க்கை!’

- உமர் கயாம் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism