Published:Updated:

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

Published:Updated:
சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...
பிரீமியம் ஸ்டோரி
சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

ன்னை நம்பிய அத்தனை கோடி பக்தர்களுக்கும் அவரவர் சூழ்நிலை, மனநிலை, வாழ்க்கைக்கேற்ற சாயியாய் இருந்துகொண்டு, ஆவன செய்கிறார் பகவான் சத்ய சாயிபாபா. ஆயிரம் தாய்மார்களின் அன்பல்லவா நம் பகவானின் அன்பு!

பகவானின் அழைப்பு

இடையில் சிலநாள்கள் கடந்திருக்கும். ஒருநாள் மதியம் வழிபாடானதும், உணவுக்குப் பிறகு வீட்டுக்கு வெளியே மதிலையொட்டி சற்று நடந்துகொண்டிருந்தேன். திடீரென்று புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம், குல்வந்த ஹால், புக் ஷாப்... என்று அனைத்தும் வரிசையாக நினைவுக்கு வந்தன. `புட்டபர்த்திக்குப் போகப் போகிறேனா என்ன?!' எனும் எண்ணம் மனதுக்குள் எழவும், எங்கிருந்தோ பல்லி பலபலவென்று கத்தியது!

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

ஸ்வாமி தரிசனத்துக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு தவிப்பு மனதில் கிளம்பியது. ஆனால், அவ்வளவு சீக்கிரமாக இங்கிருந்து புறப்பட்டுவிட முடியாதே. அனுமதி வாங்குவது, ஏற்பாடுகளைச் செய்வது என்பதற்கு அப்பாற்பட்டு... முதுகெலும்புப் பிரச்னை வந்து இப்போதுதான் சரியாகியிருக்கிறது. நீண்ட பயணம் சரிப்படாதே என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே... சத்யசாயி மாவட்டத் தலைவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...புட்டபர்த்தியின் சத்யசாயி அகில இந்திய மகளிர் மாநாடு செப்டம்பர் 24, 25 தேதிகளில் நடக்க இருக்கிறது. அதற்கு இந்தியா முழுக்க 3000 மகளிர் வருகிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் சில பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம். உங்களையும் தமிழகப் பிரதிநிதிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். நீங்கள் சம்மதம் சொன்னால், மற்ற ஏற்பாடுகளைச் செய்யலாம் என்றார்.

`இதென்ன ஸ்வாமி’ என்று திகைத்துப்போனேன். ``இரண்டு நாள்களில் பதில் சொல்கிறேன் சாயிராம்’’ என்றேன். அடுத்தநாள் காலையில் என் தோழியிடம் இதுகுறித்து பேசினேன். ‘‘எனக்குப் போக முடியுமான்னு தெரியலே. எந்த நாள்லயும் புட்டபர்த்திக்குக் கிளம்பறதுன்னா கொஞ்சம் போராடணும்... உடல்நிலையும் சுமாராகத்தான் இருக்கிறது’’ என்றேன்.

அந்தத் தோழி இதுகுறித்து ஸ்வாமியிடம் கேட்க, ஸ்வாமி சொல்லியிருக்கிறார். ‘உன் சாயிம்மா சொல்கிறேன். துன்பங்களைக் கடந்து வந்தால்தானே சொர்க்கபூமியை அடைய முடியும். இது என் சங்கல்பம்... தெய்வ அழைப்பு...’ என்று. ஸ்வாமி சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டேன். இனி பயணப்படவேண்டும் என்ற நினைப்போடு பிள்ளைகளிடம் செய்தியைச் சொன்னேன். இருவருமே மகிழ்ச்சி அடைந்தார்கள். 

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

அதேநேரம், ‘‘நீண்ட பயணம்... இப்போதுதான் சிகிச்சை நடந்திருக்கிறது. டாக்டரிடமும் அனுமதி கேளுங்கள். துணைக்கு யாரையாவது உடன் அழைத்துச் செல்லுங்கள். பயணத்துக்கு வேண்டிய உதவியைச் செய்கிறோம்’’ என்றார்கள்.

டாக்டரிடம் கேட்டேன். அவரும் சாயி பக்தை... வேறு என்ன சொல்வார்... ‘`நம்ம ஸ்வாமியோட அழைப்பு. சந்தோஷமா போய்ட்டு வாங்க. கார்ல முன்சீட்ல உட்கார்ந்துக்கோங்க. நடுநடுவே காரை நிறுத்தி கொஞ்சமா நடந்துட்டு, அப்புறமா பயணத்தை கன்டின்யூ பண்ணுங்க’’ என்றார்.

அடுத்து, உடன் வருவதற்கு தோழி எவரையேனும் கேட்கவேண்டும். கடந்த முறை சாந்தி வந்தார். இம்முறை அவருக்கு வர முடியாத சூழல். ஸ்வாமியிடம் பிரார்த்தித்தேன். ஸ்வாமி என் சாயித்தோழி ஜெயந்தியின் பெயரை நினைவுக்குக் கொண்டு வந்தார். ஜெயந்தியை தொலைபேசியில் அழைத்தேன். குடும்பத்தோடு திருப்பதிக்குச் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தவர், நான் விஷயத்தைச் சொன்னதும், கணவரிடம் அனுமதி கேட்டார். அவரும் ஒப்புக்கொள்ளவே ஜெயந்திக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்குப் பெரிய நிம்மதி. ஆக பயணத்துக்குத் தெளிவாக ஏற்பாடுகள் செய்து புறப்படவைத்துவிட்டார் ஸ்வாமி.

வழிநெடுக... பஜனைப் பாட்டும், ஸ்வாமி அவரவர்க்குத் தந்த அனுபவங்களைப் பற்றிய பேச்சுமாய் மிக ஆனந்தமாக அமைந்தது பயணம். ஆங்காங்கே காரிலிருந்து இறங்கிப் பொடிநடை நடந்துவிட்டு, மீண்டும் பயணப்பட்டோம். `வேகம் வேண்டாம்' என்று சொல்லியதால் ஒரு சீராக வண்டி ஓடிக்கொண்டிருந்தது!

திடீரென்று வண்டிக்குள் விபூதி வாசனை! கமகமவென்று வண்டி முழுவதும் பரவியது... ஸ்வாமி பிரத்யட்ச பட்டிருக்கிறார். ஸ்வாமியைப் பற்றிய பேச்சு, பாட்டு, ஸ்வாமியை நோக்கிய பயணம்... எப்படி ஸ்வாமி வராமலிருப்பார்?! ஒரு மணி நேரத்துக்கு விபூதி வாசனையில் மூழ்கியிருந்தோம். சொல்ல முடியாத பரவசம் இருவருக்கும்.

மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, சத்யசாயி மாவட்டத் தலைவரிடமிருந்து போன் வந்தது... `‘புறப்பட்டுவிட்டீர்களா சாயிராம்’’ என்று. ‘‘ஆமாம் சென்று கொண்டிருக்கிறோம் சாயிராம்’’ என்றேன். ‘`நல்லது சாயிராம்’’ என்று அவர் போனை வைத்துவிட்டார். மதியம் ஒரு மணிக்குமேல் சேவை ஒருங்கிணைப்பாளரிடமிருந்து போன் வந்தது. `‘சாயிராம் கிளம்பிவிட்டீர்களா? மதியம் 3 மணிக்கு... நாளைய நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக ‘ஆல் இண்டியா பிரசிடெண்ட்’ பேசுகிறார். பிரதிநிதிகளாக இருப்பவர்கள். கட்டாயம் இருக்கவேண்டும்’’ என்றார்.

``இப்போதுதான் மதன பள்ளியில் இருக் கிறோம். அவ்வளவு சீக்கிரம் வர முடியுமா என்று தெரியவில்லை. கோபுரவாசல் வழியாக வருகிறோம். யாராவது உதவிக்கு இருப்பார்களா?’’

‘‘உங்களுக்கென்று ஒரு பெண் சேவாதள தொண்டர் உதவிக்கு வருவார்’’ என்றார்.

அவரிடம், வேறு சந்தேகங்களையும் (அஞ்ஞானம்) கேட்டேன்.

``மிகப்பெரிய கூட்டமாக இருக்குமே சாயிராம்... மகாசமாதி தரிசனம் நெருக்கத்திலிருந்து செல்லவேண்டுமே...’’

`‘தாராளமாக’’

``பஜன்தரிசனம் என்றால் குலவந்த்ஹாலில் தரையில் உட்காருவதுதான் தர்மம்... என்னால் தரையில் உட்கார முடியாது. நாற்காலி வரிசை இருக்குமா?’’

சத்யசாயி பொற்பதம் சரணம்! - தொடர்ச்சி...

‘‘உங்களுக்கு அற்புதமான நாற்காலி இருக்கு’’

எல்லாம் வித்தியாசமான பதில்களாயிருந்தன. கார் இப்போது கனவேகத்தில் பறந்தது. ஸ்வாமி மீட்டிங் 3 மணிக்கு. இப்போதே மணி நான்காகிவிட்டது. முதலில்... ஸ்வாமி சொல்லும் கடமையைச் செய்ய முடியாமல் போகிறதே என்ற தவிப்பு! என்ன வேகம் பிடித்தாலும் கோபுரவாசலில் நுழையும்போது மாலை மணி ஐந்தாகிவிட்டது!

வேகமாக இறங்கியதும், எங்களின் உதவிக்கு வந்த சேவாதள தொண்டரிடம் கேட்டேன்: ‘‘மீட்டிங் முடிந்துவிட்டதா?’’ 

``இல்லை... இரவு எட்டு மணிக்கு அதை மாற்றிவிட்டார்கள்’’ என்றார் அவர். அப்பாடா... இது ஸ்வாமியின் முதல் கருணை!

``அறையில் போய் பெட்டிகளை வைத்துவிட்டு, முகம் அலம்பி, சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு போகலாம். முன்னதாக ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்’’ என்றார் அவர்.

நார்த் ப்ளாக் (North Block) - எண் 9. எங்களுக்குத் தரப்பட்டிருந்தது, சகல வசதிகளுடன் கூடிய வி.ஐ.பி. அறை. வராந்தாவில் வந்து நின்றால், வண்ண வண்ணப் பூக்களோடு மரங்கள்... செடிகொடிகள்!

வழக்கமாய் புட்டபர்த்தி வரும்போது, ஓரளவுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட அறை கிடைக்கும். பிரதிநிதியாக வந்திருக்கும் நிலையில்... இந்த முறை எல்லாமே பிரமிப்பூட்டின. கான்டீன், புக் ஷாப் என எங்கே சென்றாலும் தனிச் சலுகை, வரவேற்பு.

‘‘நீங்கள் இரண்டு நாள்களும் கூடவே இருப்பீர்களா’’ என்று சேவாதள தொண்டரைக் கேட்டேன்.

``ஆமாம்! முழுதும் உங்களுடன் இருப்பேன். இங்கே ஸ்வாமி தரிசனம், மாநாட்டு நிகழ்ச்சி ஆனதும்... உள்ளிருக்கும் கோயில்கள், வெளியிலிருக்கும் கோயில்கள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல், புக் ஷாப், கடைகள்... எல்லாம் போகலாம்’’ என்றார்.

சற்றுநேரத்தில் தயாராகி, மகாசமாதி - ஸ்வாமி தரிசனத்துக்குப் போய் நின்றபோது, அழுகை வந்துவிட்டது. மனம் ஏதேதோ பிரார்த்தனையில் குமுறிக்கொண்டிருந்தது. என் தோழிக்கு, ஸ்வாமி இருபுறமும் திரும்பி ஆசீர்வதிப்பது போல் தெரிந்திருக்கிறது.

`நாளைக்கு ஸ்வாமியை பக்கத்திலேயே போய் நீங்கள் தரிசனம் பண்ணலாம்’ என்று சொல்லி எங்களை, மீட்டிங் நடக்கும் கான்ஃப்ரன்ஸ் ஹாலுக்கு அழைத்துப் போனார் அந்தப் பெண்.

3000 பெண்களுக்கு மேல் கூடியிருந்த அந்த மிகப் பெரிய ஹாலிலிருந்த பகவானின் திருவுருவப்படம், அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. சத்யசாயி அகில இந்தியத் தலைவர் மிக அற்புதமாகப் பேசினார். நிகழ்ச்சி முடிந்து இறங்கி வந்து எங்கள் அறையை நோக்கி நடந்துகொண்டிருந்தோம்.

அழகிய பிரமாண்டமான கட்டடங்கள், மிக நீண்டு உயர்ந்து பரந்து... வருபவர்க்குக் குடை பிடிக்கும் குளிர்ச்சியான மரங்கள், ஓரங்களில் பச்சைப்பசேலென்ற செடிகொடிகள், தெய்விகம் ததும்பும் மெல்லியக் காற்று... ஸ்வாமியின் அன்பை நினைத்தபடி நடந்துகொண்டிருந்தபோது, சேவாதள தொண்டர் சொன்னார்: `‘சாயிராம்! பிரதிநிதிகளா இருக்கறவங்க கொஞ்சம்பேரை மரியாதை செய்து கௌரவப்படுத்துறதுக்காக மேடைக்குக் கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க... தயாராக இருங்க.’’

‘திக்’கென்றது எனக்கு. ``மகாசமாதி அருகேவா - மேடைக்கா...?’’ எனக் கேட்டேன்.

‘`ஆமாம் சாயிராம். காலையில் குல்வந்த் ஹாலுக்குப் போன பிறகு, நீங்க திகைச்சிடக் கூடாதுன்னுதான் இப்பவே சொல்றேன்’’  என்றார் அவர். எனக்கு உள்ளுக்குள் உதைப்பு... ஏதோ எதிர்பாரத அனுபவம் - நிகழ்ச்சி வரப்போகிறது!

``ஏதாவது பேசச் சொல்வார்களா?’’

‘`அது தெரியாது சாயிராம். அப்படிச் சொன்னால், நீங்கள் வழக்கமாய்ப் பேசுவதைப் பேசினால் போதும்.’’

டென்ஷன் தொடங்கியது.

காலை 3 மணிக்கே நானும் தோழியும் எழுந்து தயாரானோம். 6 மணிக்குத் தங்குமிடத்திலிருந்து சற்றுதூரத்தில் ஷாமியானாவின் கீழ், ஏராளமான மகளிர் கூட்டம். ஸ்வாமியின் புன்னகைக்கும் மிகப்பெரிய படம். ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்துகொண்டு... அருமையான சிற்றுண்டியை முடித்துக்கொண்டு குல்வந்த்ஹாலுக்குப் போனோம்.

அது பூலோக வைகுண்டம் அல்லவா? தேவலோகத்திலிருந்து மயன் இறங்கி வந்து, பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்துவிட்டது போல் அத்தனை பேரழகு! ஸ்வாமியின் அன்பும், கருணையும், ஆசீர்வாதமும் நிறைந்து ததும்பிய குல்வந்த்ஹால், இம்முறை ஸ்வாமி சொன்னது போல் சொர்க்கபூமியாகவே தெரிந்தது எனக்கு. கண்ணுக்கெட்டியவரை மகளிர் கூட்டம். வியந்து போய் நின்றேன்.

என்னை அழைத்துப்போய், குருசேவா ஒருங்கிணைப்பாளரிடம் ஏதோ சொல்லிவிட்டு... `‘நாங்கள் கீழே போய் உட்கார்ந்து கொள்கிறோம். நீங்கள் மேடைக்குப் போய் உட்காருங்கள்’’ என்றபடி, என் தோழியை அழைத்துக்கொண்டு போய்விட்டார் சேவாதள தொண்டர்.

எனக்கு உண்மையில் நடுக்கமாய்ப் போனது. மேலே போய்விட்டேன். மேடையில் வெவ்வேறு மாநிலத்திலிருந்து வந்த பிரதிநிதிகள் இருந்தார்கள். பகவான் சத்யசாயிபாபாவுக்குத் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சேவை புரிந்து வரும் வெவ்வேறு துறையைச் சார்ந்த மகளிர் பதின்மூன்று பேருக்கு, மரியாதை செய்து கௌரவிக்கும் விதமாகவே, அந்தக் காலைப் பிரிவில் எங்களை அழைத்திருந்தார்கள்.

இரண்டு நாள்களிலும் காலை, மாலை என்று நான்கு பிரிவுகளில் மகளிர் பலர் கௌரவிக்கப்பட்டனர். அதில் முதல் நாள் - முதல் பிரிவில் எங்களை அழைத்திருந்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து, பி.சுசீலாம்மாவோடு சேர்த்து நாங்கள் நான்கு பேர். அன்று அவர் வரவில்லை என்பதால், மூன்றுபேர் இருந்தோம். மேடையேறிய பிறகே இந்த ஆச்சர்ய செய்தி எங்கள் எல்லாருக்குமே தெரிந்தது. என்னைப்போலவே அவர்களும் திகைத்துப்போய் அமர்ந்திருந்தார்கள்.

மகா சமாதிக்குச் சற்றுத் தள்ளி இடது புறமாகப் போடப்பட்ட நாற்காலிகளில், முதல் வரிசையில் முதல் நாற்காலியில் என்னை உட்காரவைத்துவிட்டார்கள். மிக நெருக்கத்தில்... பெரிய மாலையிட்ட ஸ்வாமியின் மகாசமாதி. மகாசமாதிக்குப் பின்புறமும் பக்கங்களிலும், மேற்புறமுமாக... ஸ்வாமியின் அபயஹஸ்தம் காட்டும் பிரமாண்டமான படங்கள்.

அந்தத் தெய்விக மேடையில் அமர்ந்தபடி எல்லா திசை களிலும் ஸ்வாமியை தரிசித்தபடியிருந்தேன்.

ஆதம்பாக்கம் சத்சங்கத்தில் ஸ்வாமி தந்த ஆரஞ்சு வண்ணச் சேலையைத்தான் அன்று உடுத்தியிருந்தேன். அன்று ஸ்வாமியின் நட்சத்திரம் திருவாதிரை. மனம் உருகிப் பிரார்த்தனையில் கரைந்து கொண்டேயிருந்தது.

`ஏன் ஸ்வாமி... ஏதோ கொஞ்சம் சேவைகள்... அது எங்கள் கடமையல்லவா. இதற்கு எதற்கு தனிமரியாதை...’ எனக்குள் ஸ்வாமியிடம் பேசிக் கொண்டே இருந்தேன். அரசாங்க மேடைகளில் விருதுகள் வாங்கியது உண்டுதான். ஆண்டவன் மேடையில் ஆண்டவனால் தரப்படும் அங்கீகாரத்தைவிடப் பெரிதானது எது?

என்னைப் பெயர் சொல்லி அழைக்கும்போது... `இவர் பகவானுக்காக பத்திரிகைகளில் எழுதி வருபவர். சொற்பொழிவுகளாற்றி வருபவர். பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்...’ என்று அறிமுகப்படுத்தி அழைத்தனர்.

மகாசமாதிக்குமுன் விழுந்து ஸ்வாமியைக் கண்ணீரோடு நமஸ்காரம் செய்துகொண்டேன். ஒரு பெரிய பக்தையின் மூலம், மிக அழகான பட்டுச்சேலையைப் போர்த்தி, மிகப்பெரிய ரோஜா தந்து, தேங்காய் தந்து, விழா மலர் தந்து கௌரவித்தார் ஸ்வாமி. அது ஸ்வாமி தந்த தாய்வீட்டுச் சீதனமாகவே அமைந்தது. வாங்கியபின், மீண்டும் மகாசமாதி முன் நமஸ்காரம் செய்துகொண்டு, மீண்டும் இருக்கையில் வந்து அமர்ந்து, மனதில் ஸ்வாமிக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தேன்.

`கடவுளுக்கு இயல்பாகச் செய்யும் சேவைக்கு இப்படி மேடை யேற்றி கௌரவித்துவிட்டாயே ஸ்வாமி?! என் ஐயா... ஏன் இப்படித் திணறடித்து விட்டாய்? என் காலம் முழுதும் உனக்குச் சேவை செய்தாலும்கூடப் போதாதே என் ஸ்வாமி...’ என்று மனதில் புலம்பியபடியே வெளியே வந்தேன்.

சென்னை ஸ்வாமி கோயிலான ‘சுந்தரத்’திலிருந்து, மாநிலத் துணை தலைவர் - விழாவுக்கு வந்திருந்தவர், வண்டியிலிருந்து இறங்கி வந்து வாழ்த்தியதும் மனம் வெடிக்க அழுதுவிட்டேன்.

``ஏன் சாயிராம் இப்படி... ஸ்வாமி கௌரவம், மரியாதை தந்து பாராட்டிவிட்டார்! பலப்பல ஆண்டுகளாய் பலர் எத்தனையோ சேவைகளில் இருக்கிறார்கள். நான், இப்போதுதான் சில வருடங்களாக ஸ்வாமி சேவைகளைச் செய்து வருகிறேன். அதற்கு... ஏன் இப்படி...’’

அவர் சொன்னார். `‘யார் யாருக்கு மரியாதை செய்யணும் கௌரவிக்கணும்னு அன்பர்களைத் தேர்ந்தெடுத்ததே ஸ்வாமிதான்.எல்லாம் அவர் சங்கல்பம்தான். அதுமட்டுமில்லை... நீங்கள் எத்தனையோ பேருக்கு சாயிபக்தியை வளர்த்து, உத்வேகம் கொடுத்துக்கிட்டு வர்றீங்க. அதற்காகவும் இனிமே ஸ்வாமிக்கு நீங்க செய்யவேண்டிய சேவைக்காகவும் சேர்த்துதான் ஸ்வாமி உங்களுக்குக் கௌரவம் செய்திருக்கிறார்” என்றார்.

அன்று ஸ்வாமி நட்சத்திரம் - திருவாதிரையில் ஸ்வாமி காட்டிய பேரன்பு, என் ஆன்மாவின் அடித்தளத்தில் நன்றியோடு பதிந்திருக் கிறது. எனது வாழ்வில் முத்திரை பதிக்க நினைத்த செயல்கள் முடியாமலேயே போயின. பகவான் சத்யசாயி பாபாவின் சந்நிதியை நோக்கி நான் அடியெடுத்து வைக்கத் தொடங்கியதுமே... எனக்கு அன்போடு ஆசீர்வாத அட்சதையைப் போடத் தொடங்கினார் ஸ்வாமி. அதிலும், இந்த மகளிர் மாநாட்டில் ஸ்வாமி தந்த கௌரவம் மானப்பெரிது. என் பிறவிக்குத் தந்த அங்கீகாரமல்லவா அது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism