Published:Updated:

பென்சில் பாடம்!

பென்சில் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
பென்சில் பாடம்!

ஓவியம்: பிள்ளை

பென்சில் பாடம்!

ஓவியம்: பிள்ளை

Published:Updated:
பென்சில் பாடம்!
பிரீமியம் ஸ்டோரி
பென்சில் பாடம்!

ளிமை... காந்தியிடம் நாம் அனைவருமே கற்றுக்கொள்ளவேண்டிய முக்கியமான பாடம். எளிமை ஒரு வரமும்கூட. அது பலருக்குப் புரிவ தில்லை. அதைக் கைவரப் பெற்றிருந்தார் காந்தி. 

பென்சில் பாடம்!

மனுபென், காந்தியின் தனி உதவியாளராகச் சேர்ந்து ஒரு வருடம்கூட ஆகியிருக்கவில்லை.  அப்போதுதான் அந்தச் சிறு பெண்ணுக்கு 18 வயது நெருங்கிக்கொண்டிருந்தது. மனுபென், காந்தியிடம் எதையாவது கற்றுக் கொண்டேயிருந்தார். அத்தனையும் வாழ்க்கை, அனுபவப் பாடங்கள்.

அது, 1947-ம் ஆண்டு. பீஹார் மாநிலம், பாட்னாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார் காந்தி. ஓரிடத்தில் தன் கையிலிருந்த பென்சிலை எடுத்து மனுவிடம் நீட்டினார்... ``இதை பத்திரமாவெச்சிரு!’’

மனு, அந்தப் பென்சிலை வாங்கிப் பார்த்தார். அது, அவரின் சுண்டுவிரல் அளவைவிடச் சற்று சிறியதாக இருந்தது. `இதைவெச்சுக்கிட்டு பாபுஜி என்ன பண்ணப் போறார்?’’ லேசாகச் சிரிப்பு வந்தது.

அன்று இரவு 12:30 மணி. உறங்கிக்கொண்டிருந்த மனு, காந்தியின் குரல் கேட்டுப் பதறியெழுந்தார். ``நான் காலையில குடுத்தேனே... பென்சில்... அதை எடுத்துக்கிட்டு வா!’’ என்றார் காந்தி.

மனு ஒரு கணம் விழித்தார். ``என்ன புழுக்கை பென்சிலாட்டம் இருக்கேனு தூக்கிப் போட்டுட்டியா?’’

``இல்லை பாபுஜி... எங்கே வெச்சேன்னு ஞாபகம் இல்லை. இதோ தேடி எடுத்துட்டு வர்றேன்.’’ மனுபென், பென்சிலை எங்கெல்லாமோ தேடினார். கிடைக்கவில்லை. 15 நிமிடங்கள் ஆகின. காந்தி வந்தார். ``என்ன கிடைக்கலையா? பரவால்லை... தூக்கம் கெட்டுப் போச்சுன்னா உடம்பு பாதிக்கும். நீ தூங்கு. காலையில தேடிக்கலாம்.’’

பென் படுத்துவிட்டாரே தவிர, உறக்கம் வரவில்லை. காலை, 3:30 மணி. பிரார்த்தனை முடிந்திருந்தது. காந்திக்கு அன்றைக்கு எழுத்து வேலை அதிகமாக இருந்தது. மனுவிடம் பென்சில் கேட்டார். மனு, அந்தத் துண்டுப் பென்சிலைத் தேட ஓடினார். சிறிது நேரம் தேடிய பிறகு அது கிடைத்துவிட்டது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டு வந்து காந்தியிடம் நீட்டினார். அதற்குள் காந்தி, வேறொரு பென்சிலால் எழுத ஆரம்பித்திருந்தார்.

``இதை நீயே வெச்சிரு. நான் கேட்கும்போது கொடு!’’

15 நாள்கள் கழித்து, ஒரு நாள் காலையில் காந்தி மறுபடியும் பென்சில் கேட்டார். மனு, அதை பத்திரமாக வைத்திருந்ததால், உடனே எடுத்து நீட்டினார்.

``மனு உனக்குப் பொறுப்பு வந்துடுச்சு’’ என்று பாராட்டிய காந்தி, அந்த பென்சில் குறித்துச் சொன்ன விளக்கம் அருமையானது. ``மனு, நம் நாடு, ஏழை நாடு. இந்தக் குட்டி பென்சில்கூட கிடைக்காத லட்சக்கணக்கான மாணவர்கள் இங்கே இருக்காங்க. நான் இந்தக் குட்டி பென்சிலைவெச்சு எழுதுறதைப் பார்த்தா, இவ்வளவு சின்ன பென்சிலைத் தூக்கி எறியணும்னு நினைக்கிறவங்ககூட எறிய மாட்டாங்க. அது யாராவது ஓர் ஏழை மாணவனுக்குப் பயன்பட்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை. இதையெல்லாம் வார்த்தையில சொல்றதைவிட செயல்ல காட்டினாத்தான் நாலு பேருக்குப் புரியும்.’’

காந்தியையே சில விநாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் மனுபென்.

 பாலு சத்யா 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு துளி சிந்தனை

`எ
ங்கே எளிமையும், இரக்க குணமும், உண்மையும் இல்லையோ, அங்கே மேன்மை இருக்காது.’ - லியோ டால்ஸ்டாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism