அஞ்சனையின் மைந்தன் என்பதால் ஆஞ்சநேயர். வாயுவின் அருளால் பிறந்தவர் என்பதால் மாருதி - வாயு புத்திரன் ஆகிய பெயர்களைப் பெற்ற அனுமன், புராணங்கள் சிறப்பிப்பதுபோல் ருத்ராம்சமாக திருஅவதாரம் செய்த திருநாள் - மார்கழி மூலம்.

சம்பசாதனன் எனும் அசுரனை அழித்த வானர வீரனான வீரகேசரியே அனுமனின் தந்தை. வீரகேசரி - அஞ்சனை தம்பதிக்கு வெகுகாலமாகக் குழந்தை வரம் இல்லை. ஆதலால், அதுகுறித்து இறை வழிபாடு செய்தனர். ஒருநாள் ஓர் அசரீரி ஒலித்தது. அதன் வழிகாட்டுதல்படி அருகிலுள்ள சூதக மரத்தை வழிபட்டு, அதிலிருந்து கிடைத்த கனியை அஞ்சனை சாப்பிட, அதன் பலனாக வாயுபகவானின் அருளால் அனுமன் பிறந்தார்.

சிறு வயதில் சூரியனைப் பழம் என்று கருதி அதைப் பறித்துத் தின்ன ஆசைப்பட்டு ஆகாயத்தில் உயர்ந்து பறந்தார் அனுமன். அப்போது, இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாடையில் தாக்கப்பட்டார். இதனால் வாயுதேவன் கோபம்கொண்டு ஈரேழு லோகங்களிலும் காற்றே இல்லாமல் செய்துவிட்டார். தேவர்கள் அவரிடம் மன்னிப்பு வேண்டி விமோசனம் பெற்றனர். மட்டுமின்றி அனுமனை வாழ்த்தி சிரஞ்ஜீவியாக வாழும் வரத்தையும் அளித்தனர். மேலும், கற்பக விருட்சத்தின் பொற்றாமரை மாலையையும் அவருக்குப் பரிசளித்த இந்திரன், `அனுமனை வணங்குபவர்களுக்குக் கற்பக விருட்சத்துக்கு ஒப்பான ஐஸ்வர்யம் கிடைக்கும்’ என்றும் வரம் அளித்தான்.

`அனு’ என்றால் தாடை, தாடையில் தாக்கப்பட்டதால் அனுமன் என்ற திருப்பெயர் அவருக்குக் கிடைத்தது.

அனுமனின் குறும்புகளால் பாதிக்கப்பட்ட ரிஷிகள் சிலர், `உன் பலம் என்னவென்று உனக்கே தெரியாமல் போகட்டும்’ என்று சபித்துவிட்டனர். பின்னர், அஞ்சனை வந்து வேண்டிக்கொள்ள, `மூன்றாவது நபர் ஒருவர் மூலம் தன் பலத்தை உணர்வான்' என்று விமோசனம் தந்தனர். பிற்காலத்தில் ஜாம்பவான் மூலம் தனது பலத்தை அறிந்த அனுமன், சமுத்திரத்தைத் தாண்டிய திருக்கதை நாமறிந்ததே.

தசரத மாமன்னர் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி, யாகத் தீயிலிருந்து தெய்விகப் பிரசாதத்தைப் பெற்றார். அதை, தம்முடைய மூன்று மனைவியரையும் அருந்தச் செய்து, பிள்ளை வரம் பெற்றார். அந்தப் பிரசாதம் சற்றே மீதம் இருக்க, அதை வாயு தேவன் அஞ்சனையிடம் வழங்கி அவளுக்குப் புத்திர பாக்கியம் அருளினார் என்றும், அவ்வாறு அவதரித்த மைந்தனே அனுமன் என்றும், இதனால் அனுமன் ராமபிரானின் சகோதரன் என்றும் சமர்த்த ராமதாசர் எழுதிய `தாசபேதம்' என்ற நூல் கூறுகிறது. ஆனால் இந்தத் தகவல் வால்மீகி, கம்ப ராமாயணம் உள்ளிட்ட எந்த ராம காதையிலும் இல்லை.

வேத வித்துவான சூரியனுக்கு அனுமன், யாக்ஞவல்கியர் என சீடர்கள் இருவர். சகல வேத சாஸ்திரங்களையும் சூரிய தேவனிடம் கற்றார் அனுமன். மேலும், சூரியனின் மகளான சுவர்ச்சனாதேவியை மணந்தார். அதனால் சூரியன் அனுமனுக்கு மாமனார் ஆனார் என்றும் ஒரு புராணக் கதையுண்டு.

ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்கின்றன சில புராணங்கள். இதை உணர்த்தும்விதமாக, திருக்கடையூர் அருகே உள்ள அனந்தமங்கலத்தில் அருளும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் அமைந்துள்ளது.

ராமநாமத்தை ஜபித்தபடியே இருக்கும் ஸ்ரீஆஞ்சநேயர் மிகச்சிறந்த இசைவாணர். சிறுவயதில் அனுமனின் சுட்டித் தனங்களைப் பொறுக்கமுடியாத அகஸ்தியர், அனுமனைச் சாந்தப்படுத்தி, அவரின் மனதை ஒருமுகப்படுத்தும் வகையில் வீணை வாசிக்கவும் கற்றுக்கொடுத்தாராம். இவ்வாறு இசையில் தேறிய அனுமன் ‘குண்டக்ரியை’ எனும் ராகத்தைக் கண்டறிந்து, அதை முதன்முதலில் பாடினார். இசையில் மேதை என்று கர்வம் கொண்டிருந்த நாரதரை அடக்கவே இந்த ராகத்தை இசைத்தார் அனுமன் என்கின்றன ஞானநூல்கள்.

மேகநாதன் (இந்திரஜித்) தொடுத்த பிரம்மாஸ்திரம் தாக்கி லட்சுமணன் மண்ணில் வீழ்ந்து மூர்ச்சையானதும், ராமபிரான் உயிரை விடவும் துணிந்தார். அப்போது கேசரி மைந்தன், ராம நாமம் ஜபித்தபடியே சஞ்ஜீவி மூலிகை மலையைக் கொண்டு வந்து சகலரையும் காத்தார். அவரை ஆரத்தழுவிக்கொண்ட ராமன், ‘`தந்தையின் மறைவால் துக்கப்பட்டேன். பரதனையும் சத்ருக்னனையும் பிரிந்து துயர் கொண்டேன். இப்போது லட்சுமணனையும் இழந்தேனோ என்ற துயரில் வீழ்கையில், எங்களைக் காத்த தூயவனே... நீயே ரகுகுல ரட்சகன்'' என்று கூறி நெகிழ்ந்தாராம்.

ராமனைப் பிரதிபலிக்காத எதையும் அனுமன் விரும்பியதே இல்லை. அதனால்தான் ராமர் பட்டாபிஷேகத்தின்போது, சீதாதேவியார் கொடுத்த கலைமகள் திருமாலையை, ஒவ்வொரு முத்தாகக் கடித்துப் பார்த்து துப்பிவிட்டார். அதில் எதிலுமே ராமபிரானைக் காணவில்லை என்று விளக்கமும் அளித்தார். நீ மட்டும் ராமரை பிரதிபலிக்கிறோயோ என்ற சீதாதேவியின் சிறிய சீண்டலைக்கூட பொறுக்கமுடியாமல், உடனே தன் நெஞ்சைக் கிழித்து அங்கு ராமபிரானைக் காண்பித்தார். இப்படி, பதிபக்தியைக் காட்டிலும் சிஷ்ய பக்தி பெரிது என உணர்த்தினார்.

அனவரதமும் அஞ்சனை மைந்தன் ராமனைத் தொழுதபோதிலும் ஒருமுறை அனுமனே ராமபிரானை எதிர்க்க வேண்டிய சூழலும் வந்தது.

ஒருமுறை, சகுந்தன் எனும் சிற்றரசனைத் தண்டித்து அவன் சிரத்தைத் தன் காலடியில் போடும்படி ராமனுக்குக் கட்டளையிடார் விசுவாமித்திரர். குருவின் ஆணையைச் செயல்படுத்த புறப்பட்டார் ராமன்.

மனம் கலங்கிய சகுந்தன், நாரதரின் ஆலோசனைப்படி அஞ்சனையைச் சரணடைந் தான். அவனை ரட்சிக்கும்படி அனுமனுக்கு ஆணையிட்டாள் அஞ்சனை. அனுமன் தவித்தார். ஒன்று அன்னையின் ஆணையை மீறவேண்டும் அல்லது தன் தலைவனாம் ராமனை எதிர்க்கவேண்டும். என்ன செய்வது என்று கலங்கியவர், நிறைவில் சரண் புகுந்தவனை காப்பதே அறம் என்று முடிவு செய்தார்.

தன் வாலால் கோட்டை எழுப்பி அதனுள் சகுந்தனைப் பாதுகாத்துவைத்தார். ராமன் வந்தார், சரம் தொடுத்தார். ஆனால் அவை அனைத்தும் மீண்டும் வந்து ராமனின் பாதங்களிலேயே விழுந்து கொண்டிருந்தன. முடிவின்றி நீண்டது போர். நிறைவில், விசுவாமித்திரரே நேரில் வந்து உண்மையை உணர்ந்து போரை நிறுத்தினார். அதேநேரம், சகுந்தனை அந்த முனிவரின் திருவடியில் விழவைத்து வணங்கச் செய்தார் அனுமன். ஆம், ராமனுக்கு முனிவர் இட்ட ஆணையையும் இப்படி நிறைவேற்றிவைத்தார் ஆபத்சகாயர் அனுமன்.

ராமாயணக் காவியத்தின் நாயகன் ராமன் என்றால், மயில் ராவணன் கதையில் அனுமனே நாயகன் எனலாம். ராவணனின் தாய்வழி வந்த தம்பியான மயில்ராவணன் பாதாள லோகத்தின் அதிபதி. அவன் ராவணன் விருப்பப்படி, ராம - லட்சுமணர்களைக் கடத்திச் சென்று பாதாள காளிக்கு பலியிடத் துணிந்தான். அவனை வதம் செய்து, ராம லட்சுமணர் மீண்டு வர உதவினார் அனுமன் என்கிறது, மயில் ராவணக் கதை.

மயில்ராவணனின் உயிர் ஐந்து வண்டுகளின் வடிவில் இருந்ததாம். ஒரே கடியில் இந்த ஐந்து வண்டுகளும் கடிக்கப்பட்டால் மட்டுமே மயில் ராவணன் சாவான் என்ற நிலை. ஆகவே, தனது சொந்த முகத்தோடு... நரசிம்மம், கருடன், வராகம், ஹயக்ரீவர் ஆகிய திருமுகங்களையும் ஏற்று, பஞ்சமுக அனுமனாகத் தோன்றி வண்டுகளைக் கடித்து அசுரனை வதம் செய்தாராம் ஆஞ்சநேயர்.

மார்கழி மாத அமாவாசை அன்று மூல நட்சத்திரம் கூடிய வேளையில் அஞ்சனைப் புத்திரனாக ஆஞ்சநேயர் பிறந்ததால், அன்றைய தினத்தையே அனுமன் ஜயந்தியாகக் கொண்டாடுகிறோம். ஆந்திராவில், சித்திரை மாதப் பௌர்ணமி தினத்தில் அனுமனைக் கொண்டாடுகின்றனர்.

வடமாநிலங்களில் வைகாசிப் பௌர்ணமிக்கு அடுத்துவரும் செவ்வாய்க்கிழமையை அனுமனின் அவதார தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடக மாநிலத்தில், ஒரு வார காலம் அனுமன் ஜயந்தி விழாவைக் கொண்டாடுகின்றனர். அங்கு ஸ்ரீமத்வாசார்யர் அனுமனின் அவதாரமாகவே கொண்டாடப்படுகிறார்.

ஸ்ரீவியாசராய தீர்த்தருக்கு அனுமன் 14 முறை காட்சி தந்து வேதங்களை விளக்கினாராம். எனவே, ஸ்ரீவியாசராயர் 732 இடங்களில் அனுமனைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பினார்.

பக்தவத்சலனான அனுமன் இன்றைய ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சி நகருக்கு அருகே அஞ்சனை என்ற கிராமத்தில் பிறந்ததாகச் சொல்லப் படுகிறது. திருமலை திருப்பதியில் பிறந்ததாகச் சொல்பவர்களும் உண்டு.

திருத்துறைபூண்டியில் அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில், சுமார் 16 அடி உயரத்துடன் விஸ்வரூப ஆஞ்சநேயர் அருள்கிறார். விசேஷ நாள்களில், இந்த விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயர் சந்நதியில் விசேஷ வழிபாடுகள் நடக்கும்.

அன்றைய தினத்தில் வெற்றிலைப் பாக்கு, உரிக்காத மட்டைத் தேங்காய், எலுமிச்சம்பழம், வேண்டுதல் எழுதப்பட்ட துண்டு சீட்டு ஆகியவற்றை சிவப்புத் துணியால் இறுக முடிந்து, அதை அர்ச்சகரிடம் கொடுக்கிறார்கள் பக்தர்கள். அவர், அதை அனுமனிடம் சமர்ப்பித்து பூஜித்தபிறகு, ஆலய உத்திரத்தில் கட்டிவிடுவார். அன்றிலிருந்து ஒரு வருடத்துக்குள் நினைத்த காரியங்கள் நிறைவேறிவிடும் என்பது நம்பிக்கை!

பால அனுமன், யோக அனுமன், தீர அனுமன், பஜன அனுமன், வீர அனுமன், தியான அனுமன், பக்த அனுமன், பவ்ய அனுமன், சஞ்ஜீவி அனுமன் ஆகிய நவ அனுமன் திருவடிவங்களுக்கும் சேர்த்து திண்டுக்கல் ராம் நகரில் ஓர் ஆலயம் உள்ளது. சகல திசைகளையும் நோக்கி அமைந் திருக்கும் இந்த அனுமன் வடிவங்களை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

நாகை மாவட்டம், திருகுரங்குக்கா ஆலயத்தில் இன்றும் வானரங்கள் செய்யும் பூஜை விசேஷமானது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். இங்குள்ள ஸ்ரீகுந்தள நாயகி சமேத ஸ்ரீகுந்தளேஸ்வரர் ஆலயத்தை அனுமன் கட்டியதாகப் புராணங்கள் சொல்கின்றன. குறிப்பிட்ட நாள்களில், இங்குள்ள குரங்குகள் வில்வ மரத்தில் ஏறி இலைகளைப் பறித்து கருவறை விமானத்தின் மீது போட்டு வழிடுகின்றனவாம்!

தருமபுரி ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில், ஒன்றரை அடி உயரமே கொண்ட அனுமன், அஞ்சலி ஹஸ்தராக கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தேனபிஷேகம் செய்து இவரை வழிபட்டால், சங்கடங்கள் நீங்கி வாழ்க்கை இனிக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயத்துக்கு அருகேயுள்ள நந்தவனத்தில், அனுமனுக்குத் தனிக் கோயில் உள்ளது. இங்கு அனுமன் ராமாயணப் பாராயணம் செய்யும் கோலத்தில் வீற்றிருக்கிறார். அவருக்கு அருகிலேயே, மூல ராமர் பட்டாபிஷேகக் கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் வீற்றிருக்கும் வராக ஆஞ்சநேயர், வராக முகத்துடன் வடக்கு நோக்கி அருளுகிறார். இவரை வழிபட்டால், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயிலின் தேரடி அருகே கோயில்கொண்டிருக்கிறார் தேரடி அனுமன். பிணிகள் நீங்க இவரை வழிபடுகிறார்கள். வெண்பாப்புலி என்று போற்றப் பட்ட வேலுசாமிப் பிள்ளை ‘தேரடி ஆஞ்சநேய புராணம்’ என்ற ஸ்தோத்திரப் பாடலைப் பாடி, இழந்த பார்வையை மீண்டும் பெற்றாராம்.

செஞ்சி மலைக்கோட்டைக்குச் செல்லும் வழியில், விஸ்வரூபக் காட்சி தருகிறார் வீர ஆஞ்சநேயர். இவர் வலக் கரத்தை ஓங்கிய நிலையில் அருள்கிறார். தன் அடியவர்களின் துன்பங்களை அறைந்து விரட்டுவதாக ஐதீகம்.

குடந்தை ராமசாமி கோயிலில் கையில் வீணை ஏந்திய அனுமன் சிற்பம் உள்ளது. சோளிங்கரில் மலையில் கோயில் கொண்டிருக்கும் அனுமன், நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரம் தாங்கிய நிலையில் அருள்கிறார்.

இந்தியாவைத் தாண்டி கிழக்காசிய நாடுகளிலும் அனுமன் வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. இங்கெல்லாம்... அனுமனுக்கு மனைவியும், மகரத்வஜன் என்ற மகனும் உண்டு எனச் சொல்லும் கதைகள் உண்டு. மச்சவல்லபன், சுறவக்கொடியோன் என்றெல்லாம் புகழப்படுகிறான் மகரத்வஜன்.

அன்பு, வீரம், தியாகம், பக்தி, விவேகம், தொண்டு, காரிய ஸித்தி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த தெய்வ வடிவம் அனுமன். அவரை வழிபட்டு அல்லல்கள் நீங்கப் பெறுவோம்