Published:Updated:

‘செம்பொன் ரங்கன்’

‘செம்பொன் ரங்கன்’
பிரீமியம் ஸ்டோரி
‘செம்பொன் ரங்கன்’

‘செம்பொன் ரங்கன்’

‘செம்பொன் ரங்கன்’

‘செம்பொன் ரங்கன்’

Published:Updated:
‘செம்பொன் ரங்கன்’
பிரீமியம் ஸ்டோரி
‘செம்பொன் ரங்கன்’

காஞ்சிபுரத்தில் காஸ்யபன் என்ற ஏழை அந்தணர் வாழ்ந்தார். வறுமையில் இருந்து மீள முடியாமல் தவித்தது அவர் குடும்பம். ஒரு நாள் அவரின் மூத்த மகனான முகுந்தன், பொருள் திரட்டி வர ‘செம்பொன்செய் கோவில்’ என்ற ஊரை அடைந்தான்.

அங்குள்ள கோயிலில் யோகி ஒருவரைச் சந்தித்து தன் குடும்பத்தின் பரிதாப நிலையைக் கூறி வருந்தினான். யோகி, ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மூல மந்திரத்தை அவனுக்கு உபதேசித்து, ‘`இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜபித்து வா. லட்சுமி கடாட்சம் பெருகும்!’’ என்று அருளினார். 

‘செம்பொன் ரங்கன்’

முகுந்தன், கோயிலின் செம்பொன் அரங்கத் தின் முன் அமர்ந்து, மிகுந்த நம்பிக்கையுடன் - தொடர்ந்து மூன்று நாட்கள்... 32 ஆயிரம் முறை மந்திரத்தை ஜபித்து முடித்தான். பிறகு அங்கிருந்து புறப்பட்டவன், குரங்குகள் அதிகம் வசிக்கும் ஒரு வனத்துக்குச் சென்றான் (தற்போது இந்த இடம், ‘குரங்குப்புதூர்’ எனப்படுகிறது). பொழுது இருட்ட ஆரம்பித்தது. பாதை சரியாகப் புலப்படவில்லை; எனவே, அருகில் இருந்த ஆல மரத்தில் ஏறி, படுத்தவன், அப்படியே கண்ணயர்ந்தான். இரவு ஏதோ பேச்சுச் சத்தம் கேட்டுக் கண் விழித்தான். ஆலமரத்தின் கீழே திருடர்கள், அவர்களிடம் விலையுயர்ந்த ஆபரணங்களும் தங்கக் கட்டிகளும் இருந்தன.

மரத்தடியில் நின்றிருந்த திருடர்கள், ‘`நாராயண பூதமே விலகி இரு!’’ என்று ஐந்து முறை குரல் எழுப்பினர். உடனே, மரம் இரண்டாகப் பிளந்து கொள்ள... உள்ளே ஒரு சுரங்கம்! அதனுள் சென்ற திருடர்கள், கொள்ளையடித்த பொருள் களை உள்ளே வைத்துவிட்டு வெளியேறினர். பிறகு, ‘நாராயண பூதமே மூடிக் கொள்’ என்று ஐந்து முறை குரல் கொடுத்தனர். பழையபடி மூடிக்கொள்ள... திருடர்கள் கிளம்பினர். அப்போது மற்றோர் அதிசயம் நிகழ்ந்தது!

ஆம், அவன் முன் காட்சி தந்தார் பெருமாள். `‘முகுந்தா! கீழே இறங்கி, நாராயண பூதத்தை நகரச் சொல்லி, உனக்குத் தேவையான பொருளை எடுத்துச் செல்!’’ என்று அருளினார்.

உற்சாகத்துடன் கீழே குதித்த முகுந்தன், பெருமாள் அருளியபடியே செய்து, வேண்டிய அளவுக்கு பொன்- பொருளை எடுத்துக் கொண்டான். பிறகு பெருமாளை சேவித்து நன்றி சொன்னவன், மகிழ்ச்சியோடு காஞ்சிக்குத் திரும்பினான். அங்கே, தான- தருமங்கள் செய்து, தன் பெற்றோருடன் நீண்ட காலம் வாழ்ந்து, முடிவில் வைகுண்டம் அடைந்தான்.

அதுநாள் வரை, ‘தாமோதரன்’ என்ற பெயருடன் திகழ்ந்த பெருமாள் முகுந்தனுக்கு செம்பொன்னை அள்ளிக் கொடுத்த தால் அன்று முதல், ‘செம்பொன் ரங்கன்’ என்று திருநாமம் பெற்றார்!

- எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33