Published:Updated:

ஆழம் தெரியாமல்..?

ஆழம் தெரியாமல்..?
பிரீமியம் ஸ்டோரி
ஆழம் தெரியாமல்..?

ஆழம் தெரியாமல்..?

ஆழம் தெரியாமல்..?

ஆழம் தெரியாமல்..?

Published:Updated:
ஆழம் தெரியாமல்..?
பிரீமியம் ஸ்டோரி
ஆழம் தெரியாமல்..?

ரலாற்று நாயகர்களில் மறக்க முடியாத பெயர் ஜூலியஸ் சீஸர். நம்பியவர்களாலேயே குத்தப்பட்டு, மரணத்தின் வாசலில் நின்றபோது அவர் உதிர்த்த `யூ டூ புரூட்டஸ்?’ வாசகம் வெகு பிரபலம். துரோகத்துக்கு மட்டுமல்ல, வீரத்துக்கும் ஜூலியஸ் சீசரின் வாழ்க்கை ஓர் உதாரணம். `எதிராளியின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு விடாதே!’ என்று தன் எதிரிகளுக்கு சீசர் சுட்டிக் காட்டிய நிகழ்வு இது.

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில், மிகப் பெரும் சாம்ராஜ்ஜியங்களை ஸ்தாபித்தவர்களுக்குக் கூட பெரும் தலைவலியாக இருந்தவர்கள் கடற்கொள்ளையர்கள். அவர்களிடம் ஒருமுறை மாட்டிக்கொண்டார் சீசர். அப்போது அவருக்கு வயது 25.

ஆழம் தெரியாமல்..?

கிரீஸிலிருந்த ரோட்ஸ் (Rhodes) என்ற தீவுக்கு ஒரு சிறு கப்பலில் போய்க்கொண்டிருந்தார் சீசர். துணைக்கு அதிகம் வீரர்கள் இல்லை. அவருடைய கப்பலை கடற்கொள்ளையர்கள் எளிதாக மடக்கிப் பிடித்துவிட்டார்கள். சீசரைக் கைது செய்தார்கள். அழகு பொலியும் களையான முகம்; எடுப்பான நிறம். பளிச்சென்ற தோற்றம். ஆனால் அவர் ஒரு பெரிய இடத்துப் பிள்ளை என்பதை கடற்கொள்ளையர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அன்றைக்கு அவர்களிடம் சீசர் மாட்டிக்கொண்டது, அவர் களின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். 

ஆரம்பத்திலிருந்தே சொல்லிக் கொண்டிருந் தார் சீசர்... ``பாருங்கள், நான் பெரிய இடத்தைச் சேர்ந்தவன். என்னைக் கைதிபோல நடத்தைக் கூடாது; கண்ணியமாக நடத்தவேண்டும்.’’

இதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். ``கண்ணியமாக நடத்தவில்லையென்றால் என்ன செய்வீர்கள் பிரபு?’’ ஒரு கடற்கொள்ளையன் கிண்டலாகக் கேட்டான். ஒரு கணம் மௌனம் காத்தார் சீசர்.

``சொல்லுங்கள்... என்ன செய்வீர்கள்?’’

``உங்களைக் கொன்று சிலுவையில் ஏற்றுவேன்.’’

மறுபடியும் கூட்டத்தில் சிரிப்பு. இந்த விளையாட்டு தினமும் தொடர்ந்துகொண்டிருந்தது. சீசர் ஒரு தனிமை விரும்பி. ஆனால், அவர் தூங்கும்போதுகூட அவரைச் சுற்றிக்கொண்டு தொல்லை கொடுத்தார்கள் கொள்ளையர்கள். அவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. ஒருவழியாகக் கொள்ளையர்கள் இறங்கி வந்தார்கள். அவரை மீட்டுக்கொண்டு போக இவ்வளவு வேண்டும் என்று ஒரு பெரும் தொகையை நிர்ணயித்து, ``இதைப் பெற்றுத்தர முடியுமா?’’ என்று கேட்டார்கள்.

சீசர், அதைவிட இருமடங்கு பெற்றுத் தருவதாக வாக்குக் கொடுத்தார். அவர் சொன்ன இடத்துக்கு கொள்ளையர்கள் சிலர் கிளம்பிப் போனார்கள். சீசர் சொன்னதைப்போலவே இரு மடங்கு தொகை கிடைத்தது கிட்டத்தட்ட 38 நாள்களுக்குப் பிறகு கொள்ளையர்களின் பிடியிலிருந்து விடுபட்டார் சீசர். ஆனாலும், அவர்கள் மேலிருந்த வன்மம் மட்டும் அவருக்குக் குறையவில்லை. ஊர் திரும்பியதும் முதல் காரியமாக மைலெட்டஸ் (Miletus) என்ற கிரேக்க நகரத்தில் கடற்படைக்கு ஆள் சேர்த்தார். அதற்காக ராணுவத்திடமிருந்து உதவிகூட பெறவில்லை.

அவர் எந்தத் தீவில் சிறைவைக்கப்பட்டிருந்தாரோ, அங்கேதான் அந்தக் கொள்ளையர்கள் இருந்தார்கள். தன் படையோடு போன சீசர் அத்தனை பேரையும் சிறைப்பிடித்தார். அப்போதைய ரோமானிய கவர்னர் முன் கொண்டுவந்து நிறுத்தினார். தான் சொன்னபடியே அவர்களைச் சிலுவையில் அறையும் தண்டனை வாங்கிக் கொடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- பாலு சத்யா

ஒரு துளி சிந்தனை

`ஒருவருக்குத் தான் செய்யும் தவறை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால், தவறுகள் மன்னிக்கக்கூடியவையே!’ - புரூஸ் லீ

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism