Election bannerElection banner
Published:Updated:

வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்!

வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்!
வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்!

வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்!

இறைவனே வாணிகம் செய்யும் செட்டியாராக தராசுக்கோலை ஏந்த, அம்பாள் படியளந்து வியாபாரம் செய்யும் வணிக உற்சவப் பெருவிழா, நேற்று அய்யம்பேட்டையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள அய்யன்பேட்டையில், அருள்மிகு படியளந்த நாயகி சமேத அருள்மிகு செட்டியப்பர் என்கின்ற சுந்தரேஸ்வரசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் அருகில், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில் நாயன்மார்களான திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்கியிருந்து தரிசனம்செய்து வந்த காலத்தில், நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது, பசி பட்டினியில் தவிக்கும் மக்களின் பஞ்சம் தீர்க்க, இருவரும் திருவீழிமிழலை இறைவனை வேண்டி பதிகம் பாடினர்.

இறைவன் திருவருளால்,  இருவரும்  பஞ்சம் தீர்க்க பொற்காசுகள் கிடைக்கப்பெற்றனர். "ஐயனே, இந்தப் பொற்காசுகளைக்கொண்டு எங்கு சென்று உணவுப்  பண்டங்கள் வாங்குவது?" என்று  இருவரும் முறையிட்டபோது, அய்யன்பேட்டை என்னும் திருத்தலத்தில் இறைவன்  வணிகம் செய்யும் செட்டியாராகவும் அம்பாள் படியளந்த நாயகியாகவும் தோன்றி வியாபாரம் செய்து, உணவுப் பண்டங்கள் வழங்கியதாக ஐதீகம். இதனை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளன்று, வணிக உற்சவப் பெருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம், நவகிரக சாந்தி, மிருத்யுஞ்ஜய ஹோமம், ருத்ர ஜபம், வருண ஜபம், மற்றும் 16  விதமான அபிஷேக ஆராதனைகளுடன், பஞ்சமுக தீபாராதனை நடக்க, பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம்செய்தனர்.அதன்பின், சுவாமி வெள்ளியிலான தராசுக்கோல ஏந்த, அம்பாள் வெள்ளியிலான படியுடன் காட்சியளிக்க ,மஞ்சள்,குங்குமம், நவதானியம், சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய பொருள்களை வைத்துப் படைத்தனர். இந்தப் பொருள்களை பிரசாதமாகப் பெற்றுச்செல்லும் பக்தர்கள், அவற்றை வீட்டில் வைத்து வணங்கிவர, தரித்தரம் இல்லாமல் ஆண்டு முழுதும் நிம்மதியாக வாழ்வதாகக் கருதுகின்றனர். மேலும், விவசாயப் பணிகளுக்கு விதைவிடும்போது, இந்த நவதானியங்களைக் கலந்து விதைப்பதை இப்பகுதி மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிச் செய்தால், விவசாயம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. 

வணிகத்தைப் போற்றும் திருவிழா, தமிழகத்திலேயே இங்கு மட்டுமே நடைபெறுவதால், ஏராளமான வணிகர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு