Published:Updated:

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

Published:Updated:
ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!
ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.

கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி கோயில் திருமடைப்பள்ளியில் கைங்கர்யப் பணிகளில் ஈடுபட்டு வந்த லட்சுமி நாராயணப் பெருமாள் என்னும் பக்தருக்கு நீண்ட நாட்களாக ஒரு குறை இருந்துவந்தது. பெருமாளின் 108 திவ்விய தேசங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ள ஸ்ரீசார்ங்கபாணி கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லையே என்பதுதான் அந்தக் குறை.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்ன நம் ஆன்றோர், கோபுரம் தரிசனம் கோடிப் புண்ணியம் என்றும் சொன்னார்கள் அல்லவா? அதனால், ஸ்ரீசார்ங்கபாணி கோயிலுக்கு எப்பேர்ப்பட்டாவது ராஜகோபுரம் அமைத்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டார் அந்தப் பக்தர்.

ராஜகோபுர திருப்பணி என்றால் சும்மாவா? இப்போது கோடிக் கணக்கில் ரூபாய் செலவாகும் என்றால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சில லட்சங்களையாவது செலவு செய்ய வேண்டுமே?

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

ஆனால், திருமடைப்பள்ளியில் கைங்கர்யம் செய்துவரும் லட்சுமி நாராயணப் பெருமாளால் அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது என்பது இயலாத காரியம்தான். அதற்காக மனம் தளர்ந்து போய்விடவில்லை அவர். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று எண்ணியவர், ராஜகோபுர திருப்பணிக்கான வேலைகளை லட்சிய வெறியோடு தொடங்கினார். 'என் ஆயுள் முழுக்க ஓடி ஓடி உழைத்தாவது ராஜகோபுரம் கட்டியே தீருவேன்’ என்று வைராக்கியம் கொண்டார்.

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

'என் பக்தனுக்கு என் மீது இவ்ளோ பற்றுதலா!’ என்று அந்த திருமாலே எண்ணினாரோ என்னவோ... ராஜகோபுர திருப்பணிக்கு பக்தர்கள் பலரிடம் இருந்து உதவிகள் தேடி வந்தன. ராஜகோபுரம் கட்டுவதையே தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டதால், இல்வாழ்க்கை பற்றித் துளியும் சிந்திக்கவில்லை லட்சுமி நாராயணப் பெருமாள். அவரது திருமண வயதும் கடந்துவிட்டது.

ஆண்டுகள் பல கடந்த நிலையில், லட்சுமி நாராயணப் பெருமாளின் லட்சியம் நிறைவேறும் நாள் நெருங்கியது. ஆம்... ராஜகோபுரம் கட்டிமுடித்தாகிவிட்டது. அன்பர்கள் பலரது முயற்சியால் பிரமாண்ட மாக எழுந்து நின்ற ராஜகோபுரத்தை இமைக்க மறந்து ரசித்தார் அவர். ஸ்ரீசார்ங்கபாணி கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது, கும்பகோண திருத்தலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

அன்று தீபாவளித் திருநாள். பிரம்மசாரியாக வாழ்ந்து, ஸ்ரீசார்ங்க பாணிக்கே தனது வாழ்வை அர்ப்பணித்த அடியாரான லட்சுமி நாராயணப் பெருமாள் பரமபதம் அடைந்தார். கும்பகோணம் மாநகர் வாழ் வைஷ்ணவ பெருமக்கள் எல்லாம் தாங் கொணாத் துயரம் அடைந்தனர். 'இனி, இப்படியரு பக்தரை நாம் எப்போது காணப் போகிறோமோ...’ என்று ஏங்கினர்.

லட்சுமி நாராயணப் பெருமாள்தான் பிரம்மசாரி ஆயிற்றே... அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்ய யாருமே இல்லை! எல்லோரும், 'அய்யோ பாவம்’ என்றார்கள். அப்போது, 'நான் இருக்கிறேன்...' என்று மக்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தான் ஓர் அந்தணச் சிறுவன்.

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

முந்தைய நாள் முழுக்கக் கண் விழித்திருந்து அழுதானோ என்னவோ... சோகம் அப்பிய அவனது முகம் சற்று வீக்கம் கண்டிருந்தது. தாரை தாரையாய் வடித்த கண்ணீரின் துக்கக் கறை முகத்தில் படிந்திருந்தது.

'சொந்தத் தந்தையை இழந்ததுபோல் தவிக்கும் இந்தச் சிறுவன் யார்?’ என்று மக்கள் யோசிக்க... லட்சுமி நாராயணப் பெருமாளின் பூதவுடலுக்குத் தானே இறுதிச்சடங்கு செய்வதாகச் சிறுவன் சொல்ல... அது பெருமாளின் கட்டளையாகத்தான் இருக்கும் என்று கருதி சம்மதித்தனர் பொதுமக்கள்.

ஒருவழியாக, இறுதிச்சடங்கு முடிந்தது. தான் வந்த காரியத்தை நிறைவேற்றி முடித்த சிறுவன், மக்கள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து மறைந்தான். பொதுமக்களுக்கு ஆச்சரியம்! மறுநாள் அதைவிடப் பெரிய ஆச்சரியம், ஸ்ரீசார்ங்கபாணி கோயிலில் காத்திருந்தது.

ஒரு ராஜகோபுரத்தின் உண்மைக் கதை!

அன்று காலையில், ஸ்ரீசார்ங்கபாணியின் திருச்சந்நிதியை வழக்கம்போல் திறந்தார் கோயில் அர்ச்சகர். பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஆடை ஈரமாக இருந்ததோடு, அவரது திருக்கையில் தர்ப்பைப்புல்லும் இருந்ததைக் கண்டு வியந்தார் அர்ச்சகர். 'பகவானே... அப்படியென்றால் நேற்று பரமபதம் அடைந்த பக்தனுக்குச் சிறுவனாக வந்து இறுதிச்சடங்கு செய்தது நீதானா?' என்றுக் கூறி மெய்சிலிர்த்தார் அவர். இந்தத் தகவலை அறிந்த கும்பகோணம் மாநகர்வாழ் அந்தணப் பெருமக்களும் மிகவும் பரவசப்பட்டுப் போனார்கள்.

இன்றைக்கும், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசை (தீபாவளி) அன்று, தனது பக்தர் லட்சுமி நாராயணப் பெருமாளுக்காக சிராத்தம் செய்கிறார், கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி. இவரது திருச்சந்நிதிக்கு இடதுபுறம், தாயாரை தரிசித்துவிட்டு வரும் வழியில் தூண் ஒன்றில் சிலை உருவில் கைகூப்பிய நிலையில் காணப்படும் லட்சுமி நாராயணப் பெருமாளை நாமும் பார்க்கலாம்.

படங்கள் : அருண்பாண்டியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism