Published:Updated:

கோபப்பட்ட குருநாதர்!

கோபப்பட்ட குருநாதர்!

கோபப்பட்ட குருநாதர்!

கோபப்பட்ட குருநாதர்!

Published:Updated:
சிறுகதை
கோபப்பட்ட குருநாதர்!
கோபப்பட்ட குருநாதர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கு ருவே!’’ குரல் கேட்டு நிமிர்ந்தார் குருநாதர். எதிரே நின்றிருந்தான் சீடன். பரந்த நெற்றி. தலையில் கட்டுக்குடுமி. சங்குக் கழுத்து. கூர்மையான கண்கள். கண்களில் நீர்.

‘‘குழந்தாய்... ஏன் அழுகிறாய்?’’ _ குரு கேட்டார்.

‘‘குருவே! தாங்கள் ஒரு மேதாவி. தங்களின் சித்தாந்தம் மற்றும் உபதேசங்களை அடியேன் குறை கூறுவதாக தயவு செய்து எண்ண வேண்டாம்!’’

இடைமறித்தார் குரு: ‘‘விஷயத்துக்கு வா!’’

சீடன் தொடர்ந்தான்: ‘‘குருவே, தங்களைப் போன்ற மகானின் திருவாயினின்று இப்படிப்பட்ட சொற்களை நான் எதிர்பார்க்க வில்லை!’’

மறுகணம் ருத்ரமூர்த்தியானார் குரு: ‘‘போதும் உன் அதிகப் பிரசங்கித்தனம். நீ எதைப் பற்றிக் குறிப்பிடுகிறாய்?’’.

சீடன் பணிவான குரலில், ‘‘கூறுகிறேன் குருவே... சாந்தோக்ய உபநிடதத்தின் முதல் அத்தியாயம், ஆறாவது பகுதியின் ஏழாவது மந்திரமான, ‘தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக - மேவமட்சிணி’ என்ற தொடரில் இடம் பெற்றுள்ள ‘கப்யாஸம்’ என்ற சொல்லுக்கு சற்று முன் ஒரு மாணவனுக்கு விளக்கம் அளித்தீர்களே... அதைத்தான் குறிப்பிடுகிறேன்.’’

கோபப்பட்ட குருநாதர்!

‘‘அதில் என்ன குறைக் கண்டாய்? ‘கப்யாஸம்’ என்றால் ‘குரங்கின் ஆசனவாய்’ என்று பொருள். பரம னின் இரு கண் களை அதனுடன் ஒப்பிட்டேன்.. கப்யாஸத்துக்கு வேறொரு அர்த் தத்தை உன்னால் கூற இயலுமா?’’ என்று கர்ஜித்தார் குரு.

‘‘இயலும் குருவே... தாங்கள் அனுமதியளித்தால்!’’

‘‘ம்... கூறு!’’

‘‘குருவே, ‘ஆஸ’ என்றால் ‘மலர்தல். ‘கப்யாஸம்’ என்றால் ‘சூரியனால் மலர்ந்தது’ என்று பொருள். சகல கல்யாண குணங்களும், அழகும் நிரம்பிய பரமனின் திருக்கண்கள், சூரியனின் கதிர்களால் மலர்ந்த தாமரை போல் அழகாகத் திகழ்ந்தன என்று பொருள். மாறாக பரமனின் கண்களை குரங்கின் ஆசனவாயுடன் ஒப்பிடுவது எவ்வளவு பாவம்!’’

குரு ஆனந்தக் கண்ணீர் பிரவாகமாக வழிந்தோட... வாஞ்சையுடன் அவனை வாரிய ணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தச் சீடனின் புகழ் பாரெங்கும் பரவியது. அப்போது அந்தச் சீடனின் வயது பதினாறு. பிற்காலத்தில் அவன் ஆற்றியவை அரும் பணிகள். வேதாந்த நெறிக்கு காவிய நடையில் மெருகூட்டி. ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற தத்துவ தரிசனத்தை உலகுக்கு ஈந்ததுடன், ஸ்ரீ பாஷ்யம் முதலான ஒன்பது நூல்களை இயற்றியவருமான ஸ்ரீராமானுஜரே அந்த அற்புதமான சீடன்!

கோபப்பட்ட குருநாதர்!