Published:Updated:

காத்திருந்த புத்தர்!

Vikatan Correspondent
சிறுகதை

காத்திருந்த புத்தர்!

 

காத்திருந்த புத்தர்!

பு த்தர் உபதேசம் செய்வதற்காக ஓர் ஊருக்குப் பயணமாகிக் கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கும் சிறுமி ஒருத்தி எதிர்ப்பட்டாள். அவள் புத்தரிடம், ‘‘ஐயா, இந்த ஆடுகளை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன். தயவுசெய்து அதுவரை காத்திருங்கள். இல்லாவிட்டால் உங்களது உபதேசத்தை நான் கேட்க முடியாது!’’ என்று கூறினாள். புத்தர் அதற்குச் சம்மதித்தார்.

புத்தருக்கு முன்பாக பெரும் கூட்டம் கூடியிருந்தது. ஆனால், அவர் உபதேசம் தொடங்கவில்லை. ஊர்ப் பிரமுகர்கள், மன்னர் மற்றும் மந்திரி பிரதானிகள் என்று முக்கியமானவர்கள் வந்து சேர்ந்த பிறகும் உபதேசம் ஆரம்பமாகவில்லை.

‘புத்தர் இன்னும் ஏன் உபதேசம் தொடங்க வில்லை?’ என்று ஜனங்கள் எதுவும் புரியாமல் குழப்பமடைந்தனர்.

அப்போது ஆட்டுக்காரச் சிறுமி ஒருத்தி வேக வேகமாக ஓடி வந்தாள். அவள் முதல் வரிசையில் அமர்ந்ததும் புத்தர் உடனே உபதேசத்தைத் தொடங் கினார். அதைக் கேட்டு அந்தச் சிறுமி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ‘‘எனது நீண்ட நாள் ஆசை இன்றுதான் நிறைவேறியது!’’ என்று கூறி மகிழ்ந்தாள்.

ஆடு மேய்க்கும் சிறுமி ஒருத்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து புத்தர் நடந்து கொண்டது கூட்டத்தாரை வியப்படையச் செய்தது!