Published:Updated:

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம். குதிரைக்காரன் ஒருவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போன தன் தம்பிகளை மீட்க தருமர் விரைந்தார்.

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம். குதிரைக்காரன் ஒருவன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போன தன் தம்பிகளை மீட்க தருமர் விரைந்தார்.

Published:Updated:
குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!
பிரீமியம் ஸ்டோரி
குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

அரண்மனை வாயிலில், பரிதாபமாக நிற்கும் சகோதரர்களைக் கண்டு மனம் கலங்கினார் தருமர். தன் சகோதரர்களை விடுவிக்குமாறு குதிரைக்காரனிடம் வேண்டினார். அவனோ, ‘`என்னுடைய நான்கு கேள்விகளுக்கு பதில் கூறினால் விடுவிக் கிறேன்’’ என்றான். தருமரும் ஒப்புக்கொண்டார்.

குதிரைக்காரன் முதல் கேள்வியைக் கேட்டான் ‘`நான் வரும் வழியில் பெரிய கிணறு ஒன்றைக் கண்டேன். அதன் விளிம்பில் காசு ஒன்று தொங்கியது. அந்தக் காசைப் பற்றியபடி மிகப் பெரிய குன்று (மலை) ஒன்று தொங்கியது. என்ன அதிசயம்... இத்தனை பளுவிலும் காசு கிணற்றுக்குள் விழவில்லை. எப்படி?’’

உடனே தருமர், ‘`கலிகாலம் வந்துவிட்டதன் அடையாளம் இது. மக்கள் அறநெறிகளிலிருந்து விலகுவார்கள். சிறிய காசு அளவுக்கே தர்மம் செய்வர். பெரிய மலையளவு பாவச் செயல்கள் புரிவர். அதனால் பாவச் சுமையை சுமந்தபடி நரகில் விழுந்து உழல்வர்’’ என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘`சரியான பதில்’’ என்ற குதிரைக்காரன் பீமனை விடுவித்தான். அடுத்த கேள்வியைக் கேட்டான்: `‘வழியில் ஐந்து கிணறுகளைப் பார்த்தேன். நடுவில் ஒன்றும் அதைச் சுற்றி நான்குமாக அமைந்திருந்த அந்தக் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்தது. மற்ற நான்கு கிணறுகளில் நீர் குறைந்தால், நடுவில் இருக்கும் கிணறு தன்னிடம் உள்ள நீரால் அந்தக் கிணறுகளை நிரப்பும். ஆனால் நடுவில் இருக்கும் கிணற்றில் நீர் குறைந்தால், மற்றக் கிணறுகள் நீர் கொடுக்காது. இதன் பொருள் என்ன?’’

குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

தருமர், ‘`இதுவும் கலியின் கோலமே! நடுவில் உள்ள கிணறு தந்தை; சுற்றி இருக்கும் கிணறுகள் மகன்கள். மகன்களைப் பாடுபட்டுக் காப்பாற்றுவார் தந்தை. ஆனால், தந்தை தளர்வுற்ற பிறகு, மகன்கள் அவரைப் புறக்கணிப்பர்’’ என்றார். இப்போது அர்ஜுனனை விடுவித்தான்.

அடுத்து மூன்றாவது கேள்வியைக் கேட்டான். ‘`ஓரிடத்தில்... பசுமாடு, கன்றிடம் பால் குடிக்கும் அதிசயத்தைக் கண்டேன். இதன் கருத்து?’’

‘`கலி யுகத்தில் பெற்றோர் செய்யும் இழிச்செயல் இது. ஒரு குழந்தை பிறந் தால், அதைக் காரணம் கூறி, உற்றார் - உறவினரிடம் பணம் பறிப்பர். இன்னும் சிலர், காசுக்காகக் குழந்தையைத் தகாதவர் களிடம் விற்பார்கள்!’’

‘`அருமையான விளக்கம்!’’ என்றபடி நகுலனை விடுவித்தான். நான்காவது கேள்வி யையும் கேட்டான். ‘`வழியில் மற்றோர் இடத்தில் விசித்திரமான ஒரு மிருகம் ஒன்று கண்டேன். அது மூக்குத் துவாரம் வழியே உணவு உட்கொண்டது. இந்த விபரீதம் உணர்த்துவது என்ன?’’ என்று கேட்டான்.இதைக் கேட்டதும் குதிரைக்காரனாக வந்திருப்பது கலி புருஷனே என்பதை உணர்ந்துகொண்டார் தருமர்.

‘`இனி, இந்த உலகில் உனது ஆட்சிதான். நல்லவர்களும் அறநெறியைப் புறக்கணிப்பர். பொய், களவு, வஞ்சகம், கொலை... என்று பாதகங்கள் பெருகும். பேராசையும், பொறாமையும், போர்

வெறியும் தலைவிரித்தாடும். மழை பொய்க்கும். பஞ்சமும் வறுமையும் பெருகும். கொடிய நோய்கள் பரவும்.’’ என்று வேதனையுடன் கூறினார்.

அவரை வணங்கிய கலிபுருஷன், சகாதேவனையும் விடுவித்து. அங்கிருந்து மறைந்தான்.

- தங்கம் கிருஷ்ணமூர்த்தி

(9.4.2009 இதழிலிருந்து...)