திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

எதுவும் சொந்தம் இல்லை!

எதுவும் சொந்தம் இல்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
எதுவும் சொந்தம் இல்லை! ( எதுவும் சொந்தம் இல்லை! )

அதில் லயித்து குற்றவாளிகள் மெய்ம்மறந்திருக்கும் வேளையில், தண்டனையை நிறைவேற்றி விடுவான்.

வேத சாஸ்திரங்களில் தேர்ந்தவரும் தவசீலருமான அந்த வயதான மகானுக்கு காசிக்குச் சென்று தன் சரீரத்தை விட வேண்டும் என்று ஆசை எழுந்தது. அதற்கிணங்க சீடர்கள் அவரைப் பல்லக்கில் சுமந்து கொண்டு காசியை நோக்கிப் புறப்பட்டனர். வழியில் தென்படும் ஊர்களைப் பற்றி சீடர்களிடம் விசாரித்தபடி இருந்தார் மகான். அன்று, அவர்கள் ஓர் ஊரை அடைந்தனர். வழக்கம்போல அந்த மகான், ``இது எந்த ஊர்?’’ என்று கேட்டார். அந்த ஊர் பெயரைச் சொல்லும் தருணத்தில் அந்த மகானின் ஜீவன் பிரிந்தது.

அதன் பலனால் அந்த சேரியிலேயே மறுபிறவி எடுத்தார் அவர். இரவில், காசி மகா ராஜாவின் கோட்டை வாயிலைக் காக்கும் காவலாளி ஒருவனுக்கு மகனாகப் பிறந்தார் அந்த மகான்.

ஒரு நாள் அவன் தந்தை வெளியூர் சென்றதால் அவருக்கு பதிலாக காவல் காக்க கோட்டை வாயிலுக்கு விரைந்தான் சிறுவன். காசி மகா ராஜாவின் காதுகளில் பாடும் சிறுவனின் குரலும் கேட்டது!

‘மாதா நாஸ்தி பிதா நாஸ்தி நாஸ்தி பந்து ஸஹோதர
அர்த்தோ நாஸ்தி க்ருஹம் நாஸ்தி தஸ்மாத் ஜாக்ரத ஜாக்ரத"


பொருள் - ஏ ஜீவனே... தாய்- தந்தை, உறவினர், சகோதரர்கள், பணம், வீடு ஆகிய எதுவும் உனக்குச் சொந்தம் இல்லை. எனவே, இவற்றை முக்கியமாகக் கருதி, காலத்தை வீணாக்காதே. அஞ்ஞான நித்திரையில் இருந்து விழித்துக் கொள், விழித்துக் கொள்! - ‘எதிலும் அதிகம் பற்று வைக்காதே!’ என்ற உபதேசமே இது!

எதுவும் சொந்தம் இல்லை!

இதைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் சிறுவனை அழைத்துப் பாராட்டி ``உன்னை அரண்மனையில் பணியமர்த்த விரும்புகிறேன்... என்ன வேலை வேண்டும்?’’ என்றும் வினவினான். ‘’மரண தண்டனையை நிறைவேற்றும் பணியைத் தாருங்கள்!’’ என்றான் சிறுவன்.

பணியில் சேர்ந்த சிறுவன், கொலை களத்தில் தண்டனைக்காக குற்றவாளிகள் வரும்போது அவர்களை ஸ்வாமி சித்திரங்களின் முன் நிறுத்தி, இனிமையான குரலில் பஜனைப் பாடல்கள் பாடுவான். அதில் லயித்து குற்றவாளிகள் மெய்ம்மறந்திருக்கும் வேளையில், தண்டனையை நிறைவேற்றி விடுவான்.

இப்படி, தெய்வ சிந்தையில் மூழ்கியிருக்கும் வேளையில் உயிர் நீத்ததால், குற்றவாளிகளின் உயிர் சொர்க்கத்தை அடைந்தன. இதனால், நரகத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. கவலை அடைந்த யமதர்மன் மும்மூர்த்திகளிடமும் சென்று சிறுவனின் செயல்பாடு குறித்து முறையிட்டான்.

அவர்களும் எமதர்மனுடன் வந்து, சிறுவனிடம் காரணம் கேட்டனர். அதற்கு, ``முற்பிறப்பில் தவசீலனாக திகழ்ந்த நான் புண்ணியங்கள் பல செய்திருந்தாலும், மரண தறுவாயில் இறை சிந்தனை இல்லாமல் ஊரின் பெயரைக் கேட்டபடி இறந்ததால், அந்த இடத்திலேயே பிறக்க நேர்ந்தது.

‘எனது நிலை இவர்களுக்கு வேண்டாம். பாவங்கள் பல செய்திருந்தாலும், மரணத் தறுவாயில் இறை நாமம் கேட்டு நற்கதி அடையட்டுமே’ என்றுதான் இப்படிச் செய்தேன்!’’ என்று பதிலளித்தான் சிறுவன்.

இதைக் கேட்டு மகிழ்ந்த மும்மூர்த்தியரும் அவனுக்கு மோட்சப்பேறு அளித்தனர்.

- எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33