Published:Updated:

‘இந்த எருது உங்களுக்குப் பாடம் நடத்தும்!’

ஸ்ரீமத்வர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமத்வர்

‘பீமா நதிக்கரையில் ஒருவரைச் சந்திப்பீர். குதிரை யில் இருந்து இறங்காமல், ஒரு பிராணியைப் போல தண்ணீர் அருந்தும் அவரே உம் சிஷ்யர்!’

‘இந்த எருது உங்களுக்குப் பாடம் நடத்தும்!’

‘பீமா நதிக்கரையில் ஒருவரைச் சந்திப்பீர். குதிரை யில் இருந்து இறங்காமல், ஒரு பிராணியைப் போல தண்ணீர் அருந்தும் அவரே உம் சிஷ்யர்!’

Published:Updated:
ஸ்ரீமத்வர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமத்வர்
பொதுவாக... ஆசார்யர்களின் கிரந்தங்களை, வடமொழியில் புலமை பெற்றவர்களால் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள முடியும். ஸ்ரீஜயதீர்த்தர், பாமரருக்கும் புரியும் வகையில் ஸ்ரீமத்வரின் நூல்களுக்குச் சிறப்பான ‘டீகை’ (உரை)களை எழுதி, ‘டீக்காச்சார்யர்’ எனும் பட்டத்தைப் பெற்றார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்திரனின் அம்சமாகக் கருதப்படும் ஸ்ரீஜய தீர்த்தர், முற்பிறவியில் ஸ்ரீமத்வரின் நூல்களைச் சுமக்கும் எருதாக இருந்தாராம். ஸ்ரீமத்வரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இதை மெய்ப்பிக்கிறது.

ஸ்ரீமத்வர் தன் சீடர்களுக்கு உபதேசிக்கும்போது இந்த எருதும் உன்னிப்பாகக் கவனிக்குமாம். ஒரு நாள் உபதேசம் முடிந்ததும், ‘`ஸ்வாமி... தங்களுக்குப் பிறகு, இவ்வளவு சிறப்பாக எங்களுக்கு உபதேசிக்கவும், பொருள் விளக்கி பாடம் நடத்தவும் தகுந்த நபர் யார் இருக்கிறார்கள்?’’ என்று ஸ்ரீமத்வரிடம் கேட்டனர் சீடர்கள்.

அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த ஸ்ரீமத்வர், ‘`இதோ இந்த எருது உங் களுக்குப் பாடம் நடத்தும்!’’ என்றார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆம்... இந்த எருது மறு பிறவியில், ஸ்ரீஜயதீர்த்தராக அவதரிக்கும் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது!

மறுபிறவியில் ஸ்ரீஅசேப்பிய தீர்த்தர் ‘தனக்குப் பிறகு தனது ஆசிரமப் பொறுப்புகளை எவரிடம் அளிப்பது, ஸ்ரீமூல ராமரை பூஜிக்கும் புண்ணியவான் யார்?’ என்ற சிந்தனையில் மூழ்கியிருந்தார். அவர் மனத்தில் எழுந்த கேள்விகளுக்கு அன்று இரவே பதில் கிடைத்தது.

அவர் கனவில் ஒலித்த குரல், ‘பீமா நதிக்கரையில் ஒருவரைச் சந்திப்பீர். குதிரை யில் இருந்து இறங்காமல், ஒரு பிராணியைப் போல தண்ணீர் அருந்தும் அவரே உம் சிஷ்யர்!’ என்றது.

மறுநாள் காலையில் அவர் பீமா நதிக்கரைக்குச் சென்றார். அங்கு நதியின் நடுவில், குதிரையின் மீது அமர்ந்தவாறு நீர் பருகிக் கொண்டிருக்கும் தோண்டுராவைக் கண்டார்.

அவரிடம் ‘`யாரப்பா நீ. பிராணிகளைப் போல நீர் அருந்துகிறாயே?’’ என்று கேட்டார் ஸ்ரீஅசேப்பியதீர்த்தர்.

இவரை தரிசித்ததும் ஞானோதயம் கிடைத்ததாக உணர்ந்தார் தோண்டுராவ்; முற்பிறவியில், தான் எருதாகப் பிறந்திருந்ததை அறிந்தார். தன்னைச் சீடராக ஏற்குமாறு ஸ்ரீஅசேப்பிய தீர்த்தரிடம் வேண்டினார். அந்த இடத்திலேயே தோண்டுராவுக்கு ‘ஸ்ரீஜயதீர்த்தர்’ என்று நாமம் சூட்டி, சீடராக ஏற்றார் ஸ்ரீஅசேப்பியதீர்த்தர்.

ஆனால், ஸ்ரீஜயதீர்த்தர் சந்நியாசிரமம் ஏற்பதில் அவரின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. திருமணமான அவருக்கு, முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர்.

‘இந்த எருது உங்களுக்குப் பாடம்  நடத்தும்!’

ஆனால், ஏழு தலை நாகம் குடை பிடிக்க... தெய்வகடாட்சத்துடன் காட்சியளித்தார் ஸ்ரீஜய தீர்த்தர். தெய்வாம்சம் பொருந்திய மகானாகக் காட்சி தரும் ஸ்ரீஜயதீர்த்தரைக் கண்ட பெற்றோர், ‘இவன் சாதாரணமானவன் இல்லை!’ என்று உணர்ந்தனர். ஸ்ரீஜய தீர்த்தரை அழைத்து வந்து, ஸ்ரீஅசேப்பியதீர்த்தரிடம் ஒப்படைத்தனர்!

ஸ்ரீமத்வரின் அனுபாஷ்யத்துக்கு ஜயதீர்த்தர் எழுதிய டீகை (உரை), ‘ஸ்ரீமந் நியாயசுதா’ எனப்படும். இதைப் படித்தறிந்தவர்கள், மாத்வ சமூகத்தில் மிகப் பெரிய பண்டிதர்களாக மதிக்கப் படுகிறார்கள். மேலும் வாதாவளி, பிரமாண பத்ததி, பத்ய மாலா முதலான நூல்களையும் ஸ்ரீஜயதீர்த்தர் இயற்றியுள்ளார்.

ஸ்ரீஜயதீர்த்தர் கி.பி.1388-ல் பிருந்தாவனஸ்தரானார். இவரின் பிருந்தாவனம்... கர்நாடக மாநிலம், குல்பர்கா நகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில், காகினி நதிக்கரையில்- ‘மல்கேடா’ எனும் இடத்தில் அமைந்துள்ளது.

- ஆர். பத்மநாபன், சென்னை-28