Published:Updated:

மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்; தை அமாவாசை பித்ரு பூஜை ஸ்பெஷல்!

காசி
News
காசி

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி உட்பட அனைத்து சேவைகளுக்கும் சேர்த்து ஒருவருக்கு ரூ 21,500 கட்டணம்.

மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்; தை அமாவாசை பித்ரு பூஜை ஸ்பெஷல்!

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி உட்பட அனைத்து சேவைகளுக்கும் சேர்த்து ஒருவருக்கு ரூ 21,500 கட்டணம்.

Published:Updated:
காசி
News
காசி

தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்ய தமிழக மக்கள் காசிக்குச் செல்வது பாரம்பர்ய வழக்கம். இதற்கென தென் மாவட்ட மக்களுக்கு உதவும் வகையில் தெற்கு ரயில்வே மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்க உள்ளது.

பித்ரு காரியங்கள்
பித்ரு காரியங்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய மதுரை ரயில்வே கோட்ட ஊடக தொடர்பாளர், "ஜனவரி 16 அன்று மதுரையிலிருந்து புறப்படும் இந்த ரயில், ஜனவரி 19 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் முடித்து மாலை ஆரத்தியில் பங்கேற்பது.

ஜனவரி 21 அன்று கயாவில் முன்னோர்களுக்குப் பிண்ட பூஜை செய்து மங்கள கௌரி சக்தி பீட தரிசனம்., ஜனவரி 23 அன்று காமாக்கியா தேவி சக்தி பீட தரிசனம். ஜனவரி 25 அன்று கொல்கத்தா காளி தேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேஸ்வரர் தரிசனம் முடித்து, ஜனவரி 26 அன்று ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜகந்நாதர், பிமலா தேவி சக்தி பீடம் தரிசனம் முடித்து ஜனவரி 28 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேருகிறது.

மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம்

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி ரயில் பெட்டிக்கான கட்டணம், தங்குமிடம், உணவு, உள்ளூர் பேருந்து வசதி உட்பட நபர் ஒருவருக்கு ரூ 21,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டியில் பயணம் செய்யக் கட்டணம் ரூ 27,800 வசூலிக்கப்படுகிறது.

ரயில்
ரயில்

பயணச் சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7305858585 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.