Published:Updated:

புதிய பாதையை உருவாக்கித்தரப்போகும் ராகு - கேது ... மிதுன ராசிக்கான 2021 புத்தாண்டு ராசிபலன்கள்!

மிதுனம் புத்தாண்டு ராசிபலன்கள்
மிதுனம் புத்தாண்டு ராசிபலன்கள்

ராசிக்கு 6 - ம் வீட்டில் கேது பகவான் சாதகமாக இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும்.

எந்தக் காரியத்தை எடுத்தாலும் அதில் ஒன்றுக்கு இரண்டாகப் பலன் பார்ப்பது எப்படி என்னும் திறமையைக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே...

இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு இரண்டாவது ராசியில் பிறப்பதால் பொருளாதாரத் தேவைகள் நிறைவேறும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும். குடும்பத்தில் அன்பும் அமைதியும் பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அனுபவப் பூர்வமாகவும் அதேவேளையில் யதார்த்தமாகவும் பேசுவீர்கள். தடைப்பட்ட பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீண் சந்தேகம் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்தப் பாடுபடுவீர்கள்.

மிதுனம்
மிதுனம்

குருபகவான் அருளும் பலன்கள்

ஏப்ரல் 5ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 8 - ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். அதேவேளையில் திடீர் பணவரவும் உண்டாகி நிம்மதி தரும். சொந்த - பந்தங்களுக்காக அலைச்சலை மேற்கொள்ள வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியைத் தவிர்ப்பது நல்லது.

6.4.2021 முதல் 14.9.2021 வரை குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பணவரவு திருப்தி தரும்.

செவ்வாயின் அருளால் சொத்துகள் சேரலாம்

ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். புதிய சொத்துகள் வாங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

அஷ்டம சனி

வருடப்பிறப்பு முதல் வருடம் முடியும் வரை அஷ்டம சனி தொடர்வதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஏமாற்றங்கள், ஈகோ பிரச்னை, பணயிழப்பு, வீண் பழி, ஆகியன வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எனவே தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டு பலன்கள்
புத்தாண்டு பலன்கள்

சாதக பலன்கள் தரும் ராகு - கேது

ராசிக்கு 6 - ம் வீட்டில் கேது பகவான் சாதகமாக இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். காற்றோட்டம், குடிநீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். அரைகுறையாக நின்றுபோன பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய சொத்து வாங்குவீர்கள். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகள் உதவுவார்கள். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். வெளிவட்டாரத்தில் விலகிச் சென்றவர்கள் இனி வலிய வந்துப் பேசுவார்கள். ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். ராகு 12 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

ராசிக்கு 6 - ம் வீட்டில் சுக்கிரன் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சளித்தொந்தரவு இருக்கும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்

வியாபாரிகளே!

பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புது திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. பழைய சரக்குகள் விற்றுத்தீரும். தொல்லை கொடுத்த வேலையாள்கள் மாற்றிவிட்டு அனுபவம் மிகுந்தவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷ்னரி, பப்ளிக்கேஷன், உணவு, எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

புதிய பாதையை உருவாக்கித்தரப்போகும் ராகு - கேது ... மிதுன ராசிக்கான 2021 புத்தாண்டு ராசிபலன்கள்!

உத்தியோகஸ்தர்களே!

வருட முற்பகுதியில் வேலைச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றங்களும் வரும். அலுவலகத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சக ஊழியர்களுடன் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மத்திமப் பகுதியில் மன நிம்மதியுண்டு. சம்பள பாக்கியைப் போராடி பெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும்.

மொத்தத்தில் பல்வேறு சிக்கல்களால் தடுமாறிக்கொண்டிருந்த உங்களை உத்வேகத்துடன் செயலாற்ற வைப்பதோடு புதிய பாதையையும் அமைத்துத் தருவதாக இந்தப் புத்தாண்டு அமையும்.

பரிகாரம்:

கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு துர்கை அம்மனை பௌர்ணமி திதியில் சென்று வணங்குங்கள். துப்புரவு தொழிலாளிக்கு உதவுங்கள். எதிர்ப்புகள் விலகும்.

அடுத்த கட்டுரைக்கு