Published:Updated:

நாடி துதிப்போர்க்கு நல்வழி காட்டும் பெரியபாளையம் பவானி அம்மன்! #VikatanPhotoStory

நாடி துதிப்போர்க்கு நல்வழி காட்டும் பெரியபாளையம் பவானி அம்மன்! #VikatanPhotoStory

பெரிய பாளையம் கோயில் வழிபாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மங்கள நிகழ்வுக்குமான இடம்!

நாடி துதிப்போர்க்கு நல்வழி காட்டும் பெரியபாளையம் பவானி அம்மன்! #VikatanPhotoStory

பெரிய பாளையம் கோயில் வழிபாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மங்கள நிகழ்வுக்குமான இடம்!

Published:Updated:
நாடி துதிப்போர்க்கு நல்வழி காட்டும் பெரியபாளையம் பவானி அம்மன்! #VikatanPhotoStory

பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலின் நுழைவு வாயில். கருவறைக்குள் நுழையும் அம்மனின் குழந்தைகள். `ஆயன் சோதரியே; ஆஸ்தான மாரிமுத்தே; அம்மா பவானி ஆதரிக்க வேணுமம்மா...' என்று வேண்டிக்கொண்டு செல்கிறார்கள்.

பெரியபாளையம் திருச்சுற்றில் இருக்கும் சுப்பிரமணிய ஸ்வாமியின் சந்நிதி. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் திருக்காட்சி.

கருடாழ்வாரும் ஆஞ்சநேயரும் துவார பாலகராகக் காட்சிதரும் ஸ்ரீவேங்கடேச பெருமாள் சந்நிதி. சந்நிதியின் மேலே தசாவதார சுதைச் சிற்பங்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோஷங்கள் விலக, அச்சங்கள் அகல பெரிய பாளையத்து அம்மனை வேண்டிக்கொண்டு கோழி சுற்றிவிட்டுக்கொள்ளும் பக்தை. தீராத வினைகளைத் தீர்த்துவைக்கும் பவானி அம்மன் திக்கற்றவர்களின் தேவி.

திருவிளக்கிட்டவரை தெய்வம் அறிந்துகொள்ளும்! விளக்கிட்டு அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் கூட்டம். அக இருளை நீக்க, ஜொலிக்கும் அகல் விளக்கு வரிசைகள்!

தான் செய்த பாவங்கள் நீங்க, தரை மீது உருளும் பக்தர். பெரிய பாளையத்தில் அடியெடுத்துவைத்தாலே பாவங்கள் போகும். அங்கப்பிரதட்சணம் செய்தால் விலகாதா என்ன?

நோய்நொடிகள் அணுகாமல் காக்க, அங்கமெல்லாம் வேப்பிலையால் சுற்றிக்கொண்டு திருவலம் வரும் பக்தை. வேப்பஞ்சேலை கட்டியவருக்கு வேதனைகள் அணுகாது என்பது நம்பிக்கை.

கருவறை முன்னேயிருக்கும் சக்தி சூலத்துக்கு வழிபாடுசெய்யும் பக்தர்கள். எந்தக் கொடுமைகள் சூழ்ந்தாலும், அதைச் சுக்கு நூறாக்கும் தேவியின் திரிசூலமும் அம்மனின் அம்சம்தான்.

கருவறை முன்னே பொங்கல்வைத்து, தேங்காய் உடைத்து வழிபடும் பெண்கள் கூட்டம். முப்போதும் தொழுவாரை எப்போதும் காக்கும் பவானி அம்மன் எல்லோரையும் காப்பாள்!

பிள்ளையில்லாத பெண்களின் பெருந்துயரை நீக்கும் வேப்பமரம். இங்கு தொட்டில்கட்டி வழிபட்டால், சந்தான செல்வம் கிட்டும் என்பது ஐதீகம். நாடி துதிப்போர்க்கு நல்லவழி காட்டிடுவாள். அவள்தான் பாளையத்து பவானி! 

திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இங்கு வந்து திருமண பாக்கியம் பெற வேண்டிக்கொள்வார்கள். திருமணம் நிச்சயம் ஆனதும் மீண்டும் இங்கு வந்து குடத்தாலான கரகம் சுமந்து பிராகாரத்தைச் சுற்றிவருவார்கள். இது, `குடக் கல்யாணம்’ என்று போற்றப்படுகிறது. 

வேப்பிலையால் மந்திரித்துக்கொள்ளும் பக்தை. வேம்பின் வடிவான வித்தகியாம் பவானி அம்மன், வந்த நோய்களைத் தீர்ப்பவள். வரக்கூடிய நோய்களையும் தடுப்பவள்.

மழலை வரம்வேண்டி வேப்பமரத்தைச் சுற்றும் தம்பதி. கண்ணனுக்குத் தங்கையாக மாயப் பிறப்பெடுத்து மண்ணுக்கு வந்த தேவி... மழலை வரமருளும் மகாசக்தி.

பெரிய பாளையம் திருச்சுற்றில் உள்ள மாதங்கி அம்மன் சந்நிதி. `அபயம் கேட்டு ஓடி வந்த ரேணுகா தேவிக்கு அடைக்கலம் தந்த தியாக தேவி இவள்’ என்று போற்றப்படுகிறாள். 

பெரிய பாளையம் கோயில் வழிபாட்டுக்கு மட்டுமல்ல, எல்லா மங்கள நிகழ்வுக்குமான இடமாக உள்ளது. மாமன் மடியில் காது குத்திக்கொள்ளும் குழந்தை. 

அம்மனைத் தரிசித்துவிட்டு வெளியே வரும் பக்தர்கள் அருட் பிரசாதம் பெற்றுக்கொள்ளும் காட்சி. குங்குமமும் மஞ்சளும் வேப்பிலை கலந்த தீர்த்தமும் இங்கு பிரசாதம். இவை தீராத நோய்களைத் தீர்ப்பவை. 

உயிர் கொடுத்து மக்களைக் காக்கும் மகமாயிக்கு தங்கள் கேசத்தை அளித்து நன்றி கூறுவது இங்கு வழக்கம். முடி காணிக்கை செலுத்தும் குழந்தை.

சக்தி மண்டபத்தில் அருட்காட்சி அளிக்கும் பவானி அம்மன். சிரித்த முகமும், அகன்ற அருள் வீசும் கண்களும் காண்பவரை மெய்சிலிர்க்க வைத்துவிடும். பாளைய நாயகியே, பரமசிவன் பத்தினியே காத்திடம்மா!

பெரிய பாளையம் கோயிலின் திருக்காட்சி. கம்சனுக்குக் காளியானாள்; சரண் புகுந்தவருக்குத் தாயும் ஆனாள். சங்குச் சக்கரம் ஏந்தி கருவறையில் காட்சிதரும் பவானி சகலருக்கும் நல்வாழ்வு அளிக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism