Published:Updated:

பூம்புகார் நகரத்தை கருணாநிதி அமைக்கக் காரணமாக இருந்த சம்பவம்!

பூம்புகார் நகரத்தை கருணாநிதி அமைக்கக் காரணமாக இருந்த சம்பவம்!

திரைப்படத்தோடு நிறைவடையாமல் நாகை மாவட்டத்திலுள்ள காவிரிப்பூம்பட்டினத்தைப் சுற்றுலா நகராக உருவாக்கினார்.

பூம்புகார் நகரத்தை கருணாநிதி அமைக்கக் காரணமாக இருந்த சம்பவம்!

திரைப்படத்தோடு நிறைவடையாமல் நாகை மாவட்டத்திலுள்ள காவிரிப்பூம்பட்டினத்தைப் சுற்றுலா நகராக உருவாக்கினார்.

Published:Updated:
பூம்புகார் நகரத்தை கருணாநிதி அமைக்கக் காரணமாக இருந்த சம்பவம்!

ம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் மேல் கருணாநிதிக்கு அதீதக் காதல் இருந்தது. அதனால்தான் கோவலன்-கண்ணகி கதையைக் காலத்தால் அழியாத `பூம்புகார்` என்ற திரைக்காவியமாகத் தீட்டினார். இந்தப் படம்தான் கருணாநிதியின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.  

திரைப்படத்தோடு நிறைவடையாமல் நாகை மாவட்டத்திலுள்ள காவிரிப்பூம்பட்டினத்தைப் சுற்றுலா நகராக உருவாக்கினார். ஆர்ப்பரிக்கும் கடற்கரை அருகில், கண் கவரும் சிலப்பதிகாரக் கலைக்கூடம், வண்ண மலர்ப் பூங்கா, நீச்சல் குளம், பார்த்து மகிழ, பாவை மன்றம், உயர்ந்து நிற்கும் நெடுங்கால் மன்றம், ஓய்வெடுக்க கிளிஞ்சல் வீடுகள் இவற்றின் நடுவே நடுநாயகமாக வீற்றிருக்கும் கண்ணகி சிலை என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துக் கலைநயத்துடன் படைத்தார்.  

கருணாதிக்குப் பூம்புகார் நகர் குறித்த எண்ணம் உதித்தது எப்படி? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்பகுதி தி.மு.க. பிரமுகர் ஞானவேலன் சொல்கிறார், 

``அண்ணா அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பூம்புகார் அருகே நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய எங்க தாத்தா சம்பந்தம் பிள்ளை, ``கோவலன்-கண்ணகி வாழ்ந்த ஊரை உலகறியச் செய்யுங்களேன்” என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், கலைஞர் பதில் ஏதும் சொல்லாமல் போய்விட்டார். அடுத்து, சில மாதங்கள் கழித்து தஞ்சாவூரில் நடந்த விவசாயிகள் கூட்டத்திலும் இதே கோரிக்கையைத் தாத்தா கூறியிருக்கிறார். ``நிச்சயம் செய்வேன்'' என்று அச்சமயம் உறுதிகொடுத்தார் கலைஞர். இதை மனதில் வைத்து, 1971ல் கலைஞர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் பூம்புகார் நகரை உருவாக்கத் திட்டம் தீட்டினார். 1973-ல் பூம்புகார் சுற்றுலா நகரை மக்கள் பார்த்து மகிழ திறந்துவைத்தார். திறப்பு விழாவுக்காகப் பூம்புகார் நகருக்கு வந்த கலைஞருக்கு, அதன்பிறகு அந்த நகருக்கு வர வாய்ப்பே கிடைக்கவில்லை. கலைஞருக்குப் பின் ஆண்ட ஆட்சியாளர்கள் பூம்புகாரைப் பராமரிக்க தவறியதால் இன்று பொலிவிழந்து கிடக்கிறது. என்றாலும் கலைஞர் புகழ்சாற்றியே நிற்கிறது’ என்றார்.  

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குத்தாலம் கல்யாணத்திடம் பேசினோம், ``கலைஞர் மண் பற்று மிக்கவர். நாகை, திருவாரூர் அடங்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை மிகவும் நேசித்தார். அதனால்தான்

பண்டைய தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றை எக்காலமும் எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் பூம்புகாரில் கலைக்கூடம் அமைத்தார். சிலப்பதிகாரத்தில்கூட கண்ணகியின் கால் சிலம்பைப் பொற்கொல்லர் திருடினார் என்று சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால், கலைஞர் எழுதிய பூம்புகார் திரைப்படத்தில், `பொற்கொல்லர் சமூகத்துக்கு இழிவு ஏற்பட்டுவிடக் கூடாது` என்பதற்காகக் கண்ணகியின் கால் சிலம்பை எடுத்துவரும் காவலன் திருடியதுபோல் மாற்றம் செய்திருப்பார். ஒரு குலத்தின் மீதிருந்த பழியைத் தனது கலைப்படைப்பால் துடைத்த பெருமை கலைஞருக்கு உண்டு. பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் இவர்களெல்லாம் எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள். ஆனால், வெறும் 10 ம் வகுப்பு மட்டுமே படித்தவர் கலைஞர். இதைப்பற்றி பேராசிரியர் அன்பழகன் ஒரு விழாவில் பேசும்போது, ``ஒரு கல்லூரிப் பேராசிரியர் பெற்றிருக்கும் தமிழ் அறிவைவிட கலைஞர் அதிகம் பெற்றிருக்கிறார். அவர் படித்தவை, உணர்ந்தவை இவை அனைத்துமே தொல்காப்பியப் பூங்காவாக, குறளோவியமாக, ரோமாபுரிப் பாண்டியனாக, பாயும் புலி பண்டாரக வன்னியனாக, இன்னும் பலவாகத் தமிழர்களின் கரங்களில் தவழ்ந்துகொண்டிருக்கின்றன” என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை கலைஞர் அவர்கள் தமிழாகவே வாழ்ந்த தலைவர் ” என்றார்.  

எத்தனையோ காட்டாறுகள், எண்ணற்ற நெருப்பாறுகள், கணக்கிலடங்கா துரோகங்கள், எதிர்கொள்ள முடியாத நெருக்கடிகள், அதிசயிக்கத்தக்க வெற்றிகள், அதல பாதாளத்தில் தள்ளிய தோல்விகள் என இவை அனைத்தையும் கடந்து 50 ஆண்டுகளாக தி.மு.க.வை தலைமையேற்று நடத்தி வரும் கருணாநிதி ஒரு சகாப்தம். அவரின் கலைத்திறனுக்கும், இலக்கிய ஈடுபாட்டுக்கும் உதாரணம், பூம்புகார் கலைநகரம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism