Published:Updated:

மதுரையில் 48 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்த பூர்ணத்தம்மாள் மறைவு!

மதுரையில் 48 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்த பூர்ணத்தம்மாள் மறைவு!
மதுரையில் 48 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்த பூர்ணத்தம்மாள் மறைவு!

மதுரையில் 48 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்த பூர்ணத்தம்மாள் மறைவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை: மதுரையில் மிகக்  குறைந்த விலைக்கு ஏழைகளுக்குக் கடந்த 48 ஆண்டுகளாக உணவு வழங்கி சேவை செய்துவந்த மதுரை  பூர்ணத்தம்மாள்  இயற்கை எய்தினார். 

மதுரையில் 48 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்த பூர்ணத்தம்மாள் மறைவு!

கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில், மிகக் குறைந்த விலைக்கு சாப்பாடு மற்றும் உணவு வகைகளை வழங்கி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் பூர்ணத்தம்மாள். தனது கணவர் ராமு சேர்வையுடன் இணைந்து, உணவுச் சேவை செய்து வந்த பூர்ணத்தம்மாள் மிகவும் விரும்பியே மக்களுக்கு குறைந்த விலையில் உணவளித்து வந்தார்.

ஏழைகளுக்கு உணவளிக்கும் சமூக நலன் சார்ந்த யோசனையை, கடந்த 1967 ஆம் ஆண்டு கணவர் ராமு சேர்வை அவரிடம் கூறியிருக்கிறார். அதற்கு எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் ஒப்புக் கொண்ட பூர்ணத்தம்மாள், ஓய்வு இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து அன்னலட்சுமியானர்.

கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர்,  இரண்டு நாட்களுக்கு முன்னர் இயற்கை எய்தினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு