Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பொன்மொழிகள்!
பிட்ஸ்
 


மடிசார் கட்டிய அம்பாள்!

லா ல்குடி சப்தரிஷீஸ்வரர் கோயிலின் அம்பிகை ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி (ஸ்ரீபெருந்திரு பிராட்டி) என்று அழைக்கப்படுகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள். சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். நித்தியகல்யாணி யாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி தரும் அம்பாள் தன் காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந்திருக்கிறாள்.

- ஆர்.மீனாட்சி, நெல்லை

அசைவம் சாப்பிடும் சைவர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பிட்ஸ்

பு லவர் ஒருவர் தன் நண்பரிடம், ‘‘நான் சுத்த சைவம். ஆனால், ஆனையும் பூனை யும் தின்பேன்!’’ என்றார்.

‘‘ஆனையையும் பூனையையும் தின்னும் நீங்கள், எப்படி சைவமாக இருக்க முடியும்?’’ என்று குழப்பத்துடன் கேட்டார் நண்பர். அதற்குப் புலவர், ‘‘உமக்குப் புரியும் என்று நினைத்தேன். சரி, விளக்கமாகவே சொல்கிறேன்!’’ என்றவர் தொடர்ந்தார்: ‘‘ஆனை= ஆ+நெய்: பசுவின் நெய்; பூனை= பூ+நெய்: தேன். இப்போது புரிந்ததா?’’ என்றார் புலவர்.

விளக்கம் கேட்ட நண்பர் புலவரின் திறன் அறிந்து வியந்தார்.

- மு.ஜெகந்நாதன், சென்னை-64.

பக்தைக்காக பாடல் எழுதிய பகவான்!

பிட்ஸ்

னாபாய், வட இந்தியாவில் ஸ்ரீபாண்டுரங்கனின் தீவிர பக்தை. ஒவ்வொரு நாளும் பகவத் சேவை மற்றும் பாகவத சேவை புரிந்து வந்தாள். அதோடு, பக்தி மேலீட்டால் ஸ்ரீபாண்டுரங்கன் மீது ‘அபங்கங்கள்’ என்ற மிகச் சிறந்த பக்திப் பாடலைப் பாடினாள்.

பண்டரிபுர ஆலயத்தில் ஒரு நாள் பகவான் ஸ்ரீபாண்டுரங்கன் எதையோ எழுதிக் கொண்டிருந்தார். ஞானேஸ்வரர் என்பவர் குருவாயூர் பட்டத்திரி போல பகவானுடன் நேரில் உரையாடக் கூடியவர். அவர் அப்போது அங்கு வந்தார். ஞானேஸ்வரரைப் பார்த்ததும் ஓலையையும் எழுத்தாணியையும் மறைத்துக் கொண்டார் பகவான். இதை ஞானேஸ்வரர் கவனித்து விட்டார். ‘நம்மிடம் பகவானுக்கு நம்பிக்கை போய்விட்டதோ?’ என்று வருத்தமுற்றார். பகவான், ‘‘வா, ஞானேஸ்வரா... ஏன் உன் முகம் வாடி இருக்கிறது?’’ என்று கேட்டார்.

உடனே ஞானேஸ்வரர், ‘‘சுவாமி, மிகவும் பிரியமான வன் என்று நீங்கள் என்னைத்தானே குறிப்பிடுவீர்கள்? பிரியமானவர்களிடம் யாராவது எதையாவது மறைப் பார்களா?’’ என்று கேட்டார். அதற்கு பகவான், ‘‘ஓ... இந்த ஓலையை மறைத்ததைக் கவனித்து விட்டாயா?அது ஒன்றுமில்லை. உனக்கோ நாமதேவருக்கோ சீடர்கள் பலர் உண்டு. உங்களது அபங்கங்களை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். ஆனால், ஜனாபாயின் அபங்கங்களை எழுதிக் கொள்ள யாருமில்லை. ஓய்வே இல்லாமல் அவள் பகவத் சேவை செய்து கொண்டிருக்கிறாள். அதனால் நானே அதைச் செய்கிறேன். ‘என்ன ஜனாபாய்... பகவானுக்கே நீ வேலை வைக்கிறாயா?’ என்று பக்தி மேலிட நீ அவளிடம் போய் வருத்தப்படக் கூடாதல்லவா... அதனால்தான் ஓலையை மறைத்தேன்!’’ என்றார்.

‘‘பிரபு... அடியார்க்கு அடியாராகத் திகழும் உங்கள் கருணையே கருணை. ஜனாபாய் எத்தனை பாக்கியசாலி!’’ என்றார் ஞானேஸ்வரர் பவ்யமாக.

- சத்யா, கும்பகோணம்-1.

இறைவனில் இறைவி!

ள்ளக்குறிச்சியிலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியிலுள்ளது ரிஷிவந்தியம். இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், சுவாமிக்கு தேனால் அபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் இறைவியின் திருவுருவம் தெரியும். தேனை வழித்து விட்டால், உருவம் மறைந்துவிடும். இந்திரன் அமைத்து வழிபட்ட லிங்கம். இங்கு அர்த்த ஜாம பூஜையில் இந்திரன் வழிபடுவதாக ஐதீகம்.

| எம்.வி.குமார், மதுராந்தகம்.

சிறுமி காட்டும் அற்புத வழி!

பிட்ஸ்

சி றுமியும் அவள் தந்தையும் ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தனர். பாலத்தின் கீழ் வெள்ளம் பாய்ந்து ஓடிக் கொண்டிருந்தது. ‘‘என் இனிய மகளே, என் கையைப் பிடித்துக் கொள். அப்போதுதான் நீ நதியில் விழமாட்டாய்’’ என்றார் தந்தை.

அந்தச் சிறுமி பதில் சொன்னாள்: ‘‘இல்லை. நான் பிடிக்க மாட்டேன்!’’

‘‘ஏன்?’’

‘‘நீங்கள் என் கையைப் பிடித்துக் கூட்டிச் செல்லுங்கள்!’’

தந்தைக்குப் புரியவில்லை. ‘‘என்னம்மா வித்தியாசம்?’’ என்று கேட்டார்.

‘‘உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு வரும்போது ஏதேனும் நடந்தால், நான் உங்கள் கைகளை ஒருவேளை நழுவ விட்டு விடுவேன். ஆனால், நீங்கள் என்னைப் பற்றினால் ஒருபோதும் நழுவவிட மாட்டீர்கள்!’’

கடவுளின் கரங்களால் வழி நடத்தப்பட விரும்பும் பக்தனின் தூய இதயமும் இவ் வுலகில் இப்படி ஒரு பாதையைத்தான் நாடுகிறது, அந்தச் சிறுமியைப் போல!

- பா.சத்தியமோகன், வடலூர்.

நம்மாழ்வாரின் புதுமையான ஆசை!

பிட்ஸ்

ஞா னக் கண்ணால் பகவானை கண்டுவிட்ட நம்மாழ் வாருக்கு, ஊனக் கண்ணாலும் அவரைக் காண ஆசை வந் தது. ஆனால், அவர் நெஞ்சம் உருகப் பல முறை அழைத்தும் பகவான் அவருக்குக் காட்சி தரவில்லை.

உடன், பகவானிடம் வேறு மாதிரி வேண்டினார் ஆழ்வார். ‘‘பகவானே! என் ஊனக் கண்களுக்கு நீ காட்சி தர விரும்பவில்லையா? பரவாயில்லை. ‘அவ்வாறு காட்சி தர விருப்பம் இல்லை’ என்பதையாவது என் முன் தோன்றிக் கூறிவிடு. ‘நீ ஒரு மகாபாவி. அதனால் உனக்குக் காட்சி தர மாட்டேன்! என்று உன் குரலால் நேரில் வந்து கூறிச் சென்றுவிடு. இவ்வாறு நீ விருப்பமுடன் கூறினாலும் சரி; வெறுப்புடன் கூறினா லும் சரி... அதை நான் பொருட்படுத்தவில்லை. உன்னை எப்படியேனும் காண வேண்டும். உன் சொல் கேட்க வேண்டும். இவையே என் ஆசை!’’ என்கிறார் நம்மாழ்வார்.

கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண் பனி சோர நின்றால்
பாவி நீ’ என்று ஒன்று சொல்லாய் பாவியென் காண வந்தே’

- என்பது அந்தப் பாசுரம்.

பகவானை ஆழ்வார்கள் அனுபவிக்கும் பாங்கே தனிச்சுவைதான்!

- எஸ்.திருமலை, கோவை-9