Published:Updated:

பிட்ஸ்

பிட்ஸ்

பொன்மொழிகள்!
பிட்ஸ்
 


‘கடவுளை ஏமாற்ற முடியாதே!’

பிட்ஸ்

ரசர் ஒருவர் மாறுவேடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவனைக் கண்டு அவனிடம் பேச்சுக் கொடுத்தார்.

‘‘தம்பி, மந்தையில் இவ்வளவு ஆடுகள் இருக்கின்றன. ஓர் ஆட்டை எனக்குக் கொடு. முதலாளி கேட்டால், ஓநாய் அடித்து எடுத்துச் சென்றுவிட்டது என்று சொல்’’ என்றார். ஆனால், சிறுவன் மறுத்துவிட்டான். அதற்கு அரசர், ‘‘ஒரு ஆடுதானேப்பா! முதலாளிக்கு ஏதாவது சமாதானம் சொல்லிவிடு. நிறைய பணம் தருகிறேன்!’’ என்று ஆசை காட்டிப் பார்த்தார்.

சிறுவன் சொன்னான். ‘‘என் முதலா ளிக்குத் தெரியாமல் தரலாம். ஏன், அரசனுக்குக்கூடத் தெரியாமல் தரலாம். ஆனால், கடவுளுக்கு உண்மை தெரியுமே? அவரை ஏமாற்ற முடியாதே?’’ என்றான். அவன் சொன்ன பதிலைக் கேட்ட அரசர் மகிழ்ந்து அவனுக்குப் பரிசளித்தார்.

- க.சு.மணியன், பெரணமல்லூர்

அபிஷேகப் பிரியர்!

பிட்ஸ்

பா ற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் வெளிப் பட்டது. தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவபெருமான் அதை உட்கொண்டார். இதனால் ஈசனின் மேனி முழுவதும் வெப்பம் பரவியது.

கோபமான நெற்றிக்கண் பெற்ற தனால் வெப்பம் அதிகரித்து ஜடா முடியில் கங்கை மற்றும் நிலவைச் சூடியும் உஷ்ணம் தணியவில்லை. அனலென தகித்த ஈசனின் வெப்பத்தைத் தணிக்க தேவாதி தேவர்கள் தொடர்ச்சியாக அபிஷேகங்கள் செய்தனர். அதன் பின்னரே ஈசன் குளிர்ந்து சாந்தமடைய ஆரம்பித்தார். இதனால் இவர் அபிஷேகப் பிரியரானார்.

சிவலிங்கத்தின் மேல்புறம் தாரா பாத்திரம் கட்டப்பட்டு தொடர்ந்து அபிஷேகம் நிகழ்வதும் இந்தக் காரணத்தினால்தான்!

- ஏ.லக்ஷ்மி பிரபா, சென்னை-44.

பிட்ஸ்

கோபத்தை வெல்ல ரமணர் சொன்ன வழி!

பிட்ஸ்

மண மகரிஷியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் ஒரு நாள் அவரிடம் வந்து, தன்னை ஒருவர் அடிக்கடி திட்டுவதாகவும், அதனால் தனக்குக் கோபம் வருவதாகவும், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டான். ரமணர் அதற்கு, ‘‘நீயும் அவனோடு சேர்ந்து உன்னையே திட்டிக் கொள்!’’ என்றார். வாலிபன் திகைத்தான்.

அதற்கு பகவான் அவனைப் பார்த்து, ‘‘உன்னைத் திட்டுபவன் உன் உடம்பைப் பார்த்துத்தானே திட்டுகிறான். கோப தாபங்களுக்கு இடமான இந்த உடலை விட நமக்குப் பெரிய விரோதிகள் யார் இருக்கிறார்கள்?! ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார், உஷார்படுத்துகிறார் என்று அர்த்தம். அப்போது நாமும் அவருடன் சேர்ந்து கொண்டு இந்த உடம்பைத் திட்டித் தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு திட்டியவரை நாம் திருப்பித் திட்டுவதால் என்ன பயன்?

நம்மைத் திட்டுபவர்கள் நமது நண்பர்களே. திட்டுபவர்களின் மத்தியில் நாம் இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் நம்மைப் புகழ்பவர்கள் மத்தியில் இருந்தால், நாம் ஏமாந்துதான் போக வேண்டும்!’’ என்று கோபத்தை வெல்லும் வழியை அவனுக்குக் கூறினார் பகவான் ரமணர்.

பகவான் அனுப்பிய பிரசாதம்!

பிட்ஸ்

டை பயணமாகத் திருத்தல யாத்திரை வந்த கூரத்தாழ்வாரும் அவர் மனைவியும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்கினர். சில காலம் அங்கேயே தங்கினர். தினமும் பகவானின் புகழை வீதியில் பாடியபடி சென்று பிட்சை வாங்கிச் சாப்பிட்டு (உஞ்சவிருத்தி) நாட்களைக் கழித்து வந்தனர்.

ஒரு நாள் அடைமழை பெய்தது. எனவே, அன்று கூரத்தாழ்வாரால் உஞ்சவிருத்திக்குச் செல்ல முடியவில்லை. ‘இதுவும் பகவான் செயலே’ என்று எண்ணி வெறும் தண்ணீரைக் குடித்து அன்றைய பொழுதைக் கழித்தனர். இரவு நேரம். ரங்கநாதருக்கு வழிபாடு நடைபெறுவதன் அடையாளமாக ஆலயத்தில் மணி ஒலித்தது. உடனே ஆழ்வாரின் மனைவி, ‘ரங்கா, உமக்கு மட்டும் வேளை தவறாமல் நைவேத்தியம் கிடைக்கிறது. இன்று நானும் என் கணவரும் பட்டினி!’ என்று மனதில் நினைத்தபடி ரங்கனை வழிபட்டாள்.

உடனே, தனக்குப் படைக்கப்பட்ட நைவேத்தி யத்தை கூரத்தாழ்வார் இருக்கும் இடத்துக்கு அனுப்ப உத்தரவிட்டார் ஸ்ரீரங்கநாதர். அப்படியே பிரசாதமும் போய்ச் சேர்ந்தது. வியந்துபோனார் கூரத்தாழ்வார். அவர் தன் மனைவியிடம், ‘‘நாம் இன்று பட்டினியாக இருக்கிறோம் என்று பகவானிடம் குறைப்பட்டுக் கொண்டாயா?’’ என்றார். ‘‘ஆமாம்’’ என்றாள் அவள். ஸ்ரீரங்கனின் பேரருளை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்தார் கூரத்தாழ்வார். ஆலயம் இருக்கும் திசை நோக்கிக் கைகூப்பித் தொழுதார்.

அடியார் பசியை ஆண்டவன் பொறுப்பானோ!

- எம்.வி.குமார், மதுராந்தகம்

தர்மமே வெல்லும்!

பிட்ஸ்

ர்மத்தைக் கடைப்பிடிப்பது பற்றி குரு ஒருவர் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சீடன், ‘‘குருவே, தர்மத்தை கடைப் பிடித்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்கிறீர்கள். ஆனால், சிலர் அதர்மத்தை மட்டுமே செய்தும் நன்றாக வாழ்கிறார்களே, எப்படி?’’ என்று கேட்டான்.

குரு, ‘‘சீடனே, மரத்தில் இருக்கும் வரைதான் இலை செழித்து இருக்கும். அது தர்மம். அதே இலை, மரத்திலிருந்து உதிர்ந்து விட்டால் அதன் உயிர் உடனே போகாது. சில நாட்கள் கழித்துதான் அது வாடும். அதுபோல அதர்மத்தைப் பின்பற்றுபவர்கள் சில காலம் நன்றாக வாழ்வர். பின்னர் அழிந்து போவர். அதர்மம் செய்பவர்கள் திருந்துவதற்குக் கடவுள் சிறிது அவகாசம் கொடுப்பார். புரிந்து கொள்ளாதவர்கள் அழிவர். இதைத்தான் ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷத:’ என்று கூறுவர். நாம் தர்மத்தைக் காத்தால், அது நம்மைக் காக்கும்’’ என்றார்.

சொன்னவர்: புலவர் எஸ். ராதாகிருஷ்ணன்.

_ எஸ். லலிதா, சென்னை-91

அடுத்த கட்டுரைக்கு