Published:Updated:

மாங்கல்ய பலம் அளிக்கும் காரடையான் நோன்பு.. என்ன செய்ய வேண்டும்? - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
News
Representational Image

பொதுவாக இந்த நோன்பு மாசிமாதம் முடியும் நேரம் பங்குனி மாதம் பிறப்பு என்ற சங்கிரமண காலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளோடு தேக ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். தாம் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று நூற்கும் நோன்பே காரடையான் நோன்பு. இந்த நோன்பு சாவித்திரி நோன்பு என்றும் வழங்கப்படுகிறது.

பொதுவாக இந்த நோன்பு மாசிமாதம் முடியும் நேரம் பங்குனி மாதம் பிறப்பு என்ற சங்கிரமண காலத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. கணவனை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரியின் கதையை அறிந்திருப்பீர்கள். அவளுடைய பக்தி சிரத்தையும் கணவன் பால் கொண்ட அன்பும் முழு ஈடுபாடும் கணவனின் ஆயுளை விருத்தியடையச்செய்து எமனிடமிருந்து விடுதலையடைய வைத்தது.

பொதுவாக காரடையான் நோன்பு அன்று கார் அடை என்னும் ஒரு கொழுக்கட்டையை படைத்து விரதம் இருப்பதால் காரடையான் நோன்பு என்று சொன்னாலும் காரடையான் நோன்பின் தத்துவம் வேறு. கார் என்றால் இருள். இருள் சூழ்ந்திருக்கும் எமப்பட்டினத்தை அடையாதவன் கார்- அடையான். இந்த விரதத்தை சுமங்கலிகள் அனுஷ்டித்தால் அவர்களுடைய கணவன்மார்கள் எமப்பட்டினத்தை அடையார் என்பதே இந்த நோன்பின் பெயர்க்காரணமாகும்.

Representational Image
Representational Image

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காரடையான் நோன்பு அன்று காலை சுமங்கலிகள் வீட்டை கழுவி பசுஞ்சாணத்தால் வாசலை மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு காவி வண்ணம் தீட்டி வாயில்களில் மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைத் தோரணங்களைக் கட்டி அலங்கரிக்க வேண்டும். பூஜை அறையில் ஒரு மரப்பலகையில் கோலமிட்டு குத்துவிளக்கு ஐந்து முகம் ஏற்றி அதில் சாவித்திரி தேவியை ஆவாகணித்து வழிபட வேண்டும். மஞ்சள் சரடை பூஜித்து திருமாங்கல்யத்துடன் சேர்த்து அணிதல் வேண்டும்.

சாவித்திரி தேவி காட்டில் விரதமிருக்கையில் கார் அரிசியில் காராமணிப் பயறு சேர்த்து வெண்ணெய் கலந்து தயாரித்த வெல்ல அடை மற்றும் கார அடைகளை நிவேதனம் செய்ததின் நினைவாக இன்றும் கார அடையும் வெல்ல அடையும் நிவேதனம் செய்யப்படுகிறது. நிவேதனம் செய்து கற்பூர ஆரத்தி முடிந்ததும் மஞ்சள் சரடை மாங்கல்ய சரடுடன் அணிந்து கணவரை நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் மாமனார்- மாமியாரை நமஸ்கரித்து கணவருக்கும் மாமனார் மாமியாருக்கு காரடைகளைப் பிரசாதமாக அளிக்க வேண்டும். வீட்டிலுள்ள மற்ற பெரியோர்களை நமஸ்கரித்தபின் சுமங்கலிப்பெண்கள் காரடை உண்டு நோன்பை முடிக்க வேண்டும். சில அடைகளை வைத்திருந்து மறுநாள் காலை அவற்றை பசு மாட்டுக்குக் கொடுக்க வேண்டும் . அடைகளைப் படைக்க வாழை இலை கிடைக்காவிடில் பலா இலைகளைச் சேர்த்து முடைந்து அதில் படைப்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

இந்த நோன்பை அனுசரித்தால் கணவரின் ஆயுள் விருத்தியாகும். ஆரோக்கியம் பெருகும். கல்யாணமாகாத கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும். பிரிந்த தம்பதியர் கூடுவர். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம்.

மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு, காரடையும் வெண்ணெய்யும் கையில் வைத்துக்கொண்டு கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.

Representational Image
Representational Image

சங்கல்ப ஸ்லோகம்மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம்

மம பர்த்துச்ச அன்யோன்யப்ரீதி

அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம்

ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

தியானம்

ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம்

புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே

தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

காமாக்ஷீம் ஆவாஹயாமி.

"மங்களே மங்களாதாரே

மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி

மாங்கல்யம் தேஹிமே ஸதா"

நோன்புச்சரடு மந்திரம்

தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம்

பர்துஹு ஆயுஷ்ய ஸித்யர்த்தம் சுப்ரீதா பவ ஸர்வதா

'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்

ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்'

பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் உப்பில்லாத சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது.

இன்று 14-3-2020 காரடையான் நோன்பு. நோன்பு அனுஷ்டிக்க வேண்டிய நேரம் காலை 10-45- முதல் 11-30 மணி வரை.

மாசிக்கயிறு பாசி படியும் என்ற சொலவடை உண்டு. எனவே இந்த நாளில் புதிய மாங்கல்ய சரடு அணியும் வழக்கமும் உண்டு. தீர்க்க சுமங்கலி வரம் அருளும் இந்த காரடையான் நோன்பினை பக்தி சிரத்தையோடு அனுசரித்து பலன் பெறுவோமாக!

-நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/