Published:Updated:

வீட்டு வாசலில் குரோட்டன்ஸ் செடியை வளர்க்கலாமா? - ஆன்மிக பதில்

வீட்டில் சாமி விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா என்பது பற்றியும் அதற்கான வழிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள்

குரோட்டன்ஸ்
குரோட்டன்ஸ்

? வீட்டு வாசலில் குரோட்டன்ஸ் செடியை வளர்க்கலாமா?

- ஆர்.பிரேமா, சென்னை - 91

செடிகள், மரங்கள் போன்றவை வாசனை உள்ளதாகவே இருக்கவேண்டும். கடவுளுக் குச் சமர்ப்பிப்பதாக இருந்தாலும், நமக்குப் பயன்படுத்திக்கொள்வதாக இருந் தாலும் வாசனையுள்ள மலர்களையே பயன்படுத்த வேண்டும். எனினும், வெறும் அழகுக்காக செடிகளையோ மரங்களையோ வளர்ப்பவர் களுக்கு இந்த நியமம் இல்லை. எனவே, குரோட்டன்ஸ் போன்ற செடிகளை வெறும் அழகுக்காக வளர்ப்பதில் தவறில்லை.

இயன்றவரையிலும் நாம் செய்யும் காரியம் பயனுள்ளதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு, வாசனையுள்ள செடி கொடிகளை வளர்த்தால், அதன் ஆற்றல் நம்முடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் எழுச்சி தரக்கூடியதாக அமையும். விருட்ச சாஸ்திரம் என்ற நூலில் இதுபோன்ற மரங்கள், செடிகொடிகள் அதன் பயன்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.

குரோட்டன்ஸ்
குரோட்டன்ஸ்

? பெரும்பாலான கடவுள் அவதாரங்கள் அசுரர்களைக் கொல்வதாகவே உள்ளன. கொலை செய்வது பாவம் இல்லையா?

- தி.க.வேல்முருகன், திட்டக்குடி

நாம் ஏதேனும் தொற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், நல்ல மருத்துவரிடம் சென்று அந்தத் தொற்றினைப் போக்கிக்கொள்வது முக்கியமானது. இல்லையெனில், அந்தத் தொற்று நம் உடலை அழித்துவிடும். அதேபோன்று அசுரர்கள் என்பவர்கள் தங்களின் தீய செயல்களால் மனித வாழ்வுக்கு தீங்கு விளைவிப்பவர்களாக செயல்பட்டவர்கள். அவர்களை அழிப்பது அத்தியாவசியமாகிறது. அவர்களில் சிலரை அழிப்பதால் நல்லோர் பலருக்கு நன்மை உண்டாகிறது. தீமைகள் அழிக்கப்படுவதில் தவறு இல்லை.

அப்படித்தான் தெய்வ சக்தி நம்முடைய நன்மையைக் கருதி தீய சக்திகளை அழிப்பது கொலையாகாது. அதர்மத்தை அழித்தல் போற்றப் படவேண்டியது. சண்டிகாதேவியை ஜய ஜய என்று தேவர்கள் போற்றினார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. ராணுவ வீரரானவர் எப்படி பயங்கரவாதிகளைக் கொன்று நாட்டைக் காப்பாற்றுகிறாரோ, அப்படியே தெய்வ அவதாரங்களின் திருக் கதைகளையும் அவர்கள் நிகழ்த்தும் அசுர வதத்தையும் நாம் பார்க்கவேண்டும்.

வீட்டில் சாமி விக்கிரகங்களை வைத்து வழிபடலாமா என்பது பற்றியும் அதற்கான வழிமுறைகள், கடைப்பிடிக்க வேண்டிய நியதிகள் பற்றியும் விளக்குங்களேன்.

- என்.பாஸ்கரன், வந்தவாசி

நம் வீடுகளில் தெய்வ ஆற்றலை அளிக்கும் திவ்ய விக்கிரகங்களை வைத்து வழிபடலாம். ஆலயங் களில், உலக நன்மையைக் கருத்தில்கொண்டு நடைபெறும் வழிபாட்டை 'பரார்த்த பூஜை' என்றும், நம்முடைய வீடுகளில் நம் நன்மையைக் கருதி செய்யப்படும் பூஜையை 'ஆத்மார்த்த பூஜை' என்றும் ஆகமங்கள் வகுத்துள்ளன.

வீட்டு வாசலில் குரோட்டன்ஸ் செடியை வளர்க்கலாமா? - ஆன்மிக பதில்

எனினும், நம் வீடுகளில் செய்யும் பூஜைக்குரிய தெய்வ வடிவங்கள் 12 அங்குல அளவுக்கு மிகாமல் இருப்பது நல்லது. விக்கிரகங்களின் அளவு அதிகமானால், அதற்குரிய பூஜை முறைகளும் விஸ்தாரமாக இருப்பது அவசியமாகிறது. எனவே, தாங்கள் வழிபட விரும்பும் தெய்வத் திருவுருவத்தை நல்ல அமைப்புடன் செய்து, தங்களால் இயன்ற வகையில் வழிபட்டு வருவது, நல்ல பலன்களை நல்கும்.

- ஆன்மிகம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் தருகிறார், சென்னை 'காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீசண்முக சிவாசார்யர். சக்தி விகடன் இதழின் கேள்வி - பதில் பகுதிக்கு > பிரணவத்தின் தத்துவம் என்ன? https://www.vikatan.com/spiritual/temples/spiritual-questions-and-answers-nov-19

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > 'ஈஸி - நியூஸி' மாதாந்திர பேக் ரூ.99 மட்டுமே. > சப்ஸ்க்ரைப் செய்ய> https://bit.ly/2KccySR |