Published:Updated:

"நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும்!"- தத்துவ ஞானி கன்பூசியஸ் பிறந்த நாள் இன்று!

கன்பூசியஸ் பிறந்த நாளில் அவரின் பொன்மொழிகள் சிலவற்றை அறிவோமா...

கிமு 551-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் பிறந்த கன்பூசியஸ் தத்துவ ஞானிகளில் பிதாமகர் என்று போற்றப்படுபவர். இவரது பிறந்த நாளில் இவரது பொன்மொழிகள் சில...
 • நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.

 • ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சமே வராது.

 • உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்தததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!

 • ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.

கன்பூசியஸ்
கன்பூசியஸ்
 • கடவுள் நன்மை மற்றும் தீமை என்ற இரண்டையுமே மக்களுக்கு தருகிறார்! நல்ல மனிதர்கள் சரியானதைத் தேர்வு செய்வர்.

 • உங்களுக்கு எது விருப்பமில்லையோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்ய வேண்டாம்.

 • ஏழையின் செல்வம் அவனது திறமைதான்.

 • எல்லாமே அழகுதான், ஆனால் எல்லோர் கண்களும் அதைக் காண்பதில்லை.

 • புகழில் மயங்கிவிடாதீர்கள், ஆனால் புகழ் பெறுவதற்கானத் தகுதியை வளர்த்துக் கொண்டே இருங்கள்!

வழி காட்டும் கருட புராணம்... மகாளய பட்ச நாள்களில் செய்ய வேண்டிய 30 நன்மைகள் என்னென்ன?!
 • கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தியுங்கள். கோபம் குறையும்!

 • புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.

 • எங்கோ யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்தவன் வெற்றியாளன் ஆகிறான்.

 • நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்!

கன்பூசியஸ்
கன்பூசியஸ்
 • லட்சியங்களை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையைத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர லட்சியங்களை சரி செய்யக்கூடாது.

 • அறிவால் உழைப்பவர்கள் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர்.

 • வாழ்க்கை மிகவும் எளிதானது, நாம் தான் சிக்கலாக சிந்தித்து அதை சிக்கலானதாக மாற்றுகிறோம்.

 • துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.

 • ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!

 • எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும்!

 • எங்கு சென்றாலும், உங்கள் முழு இருதயத்தோடு போங்கள்!

 • நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு