Published:Updated:

``வெற்றி பெறும்வரை போராடிக்கொண்டே இருக்கவேண்டும்!'' - `லொள்ளு சபா' மனோகர் #Motivation

`லொள்ளு சபா' மனோகர்
News
`லொள்ளு சபா' மனோகர் ( படம்: சொ.பாலசுப்பிரமணியன் / விகடன் )

``அன்றைக்கு அவர் கொடுத்த வாய்ப்பு இன்னைக்கு ஒரு நடிகனாக உங்க முன்னால் நிறுத்தி இருக்கு. ஆனா இந்த வெற்றி, அவ்வளவு சாதாரணமாகக் கிடைக்கலை."

லொள்ளு சபா மனோகருக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. `இன்னா சொல்றே?' என்றாலே அவரின் உருட்டும் முழியும் மிரட்சியான முகமும் நம் கண்முன்னே வந்து போகும். பல படங்களில் நடித்திருந்தாலும் `லொள்ளு சபா'தான் இன்றளவும் அடையாளம். அவரை `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காகச் சந்தித்தோம்.

Lollu sabha Manohar
Lollu sabha Manohar

`நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ராயபுரம். அடிக்கடி மெரினா பீச்சுக்குப் போவேன். கடற்கரைக் காற்றை வாங்கிக்கிட்டு காலாற நடக்கிறதுனா யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி நான் பீச்சுக்குப் போயிருந்தப்போ ஒரு சமயம் பிரசிடென்சி காலேஜை தாண்டி நடந்து போனவன், விவேகானந்தர் இல்லத்துக்கு வந்துட்டேன். விவேகானந்தர் இல்லத்திலிருக்கிற சுவர்கள்ல முக்கியமான வாக்கியங்களை எழுதிப் போட்டிருப்பாங்க. அப்போது நான் ஒரு வாசகத்தைப் பார்த்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``வாழ்க்கையில் நீ வெற்றிபெற வேண்டுமென்றால் போராட வேண்டும். வெற்றி என்பது சாதாரண போராட்டத்தில் கிடைத்துவிடாது. நீ வெற்றி பெறும்வரை போராடிக்கொண்டே இருக்க வேண்டும்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விவேகானந்தரின் அந்த வாக்கியத்தை வைத்துதான் என் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பிச்சேன். எங்கெங்கேயோ போய் கஷ்டப்பட்டேன். மூட்டை தூக்கினேன். ஹார்பரில் வேலை செஞ்சேன்.

ஹைகோர்ட், ஸ்டேட் பேங்க்னு பல இடங்கள்ல வேலைபார்த்தேன். அங்கெல்லாம் 90 நாள்களுக்குத்தான் வேலை கொடுத்தாங்க. அதுக்கப்புறம் கொடுக்கலை.

அப்புறம் கார்ப்பரேஷன் பேங்க்ல எனக்கு அட்டெண்டர் வேலை கிடைச்சது. அங்கே உள்ளவங்க சொல்கிற வேலைகளை முகங்கோணாமல் செய்து சீக்கிரமே அவர்களிடம் நல்ல பெயர் எடுத்தேன். அங்கு இருந்தப்போதான் ஆபீஸ்ல பர்மிஷன் வாங்கிக்கிட்டு நடிக்கப் போவேன்.

Lollu sabha Manohar
Lollu sabha Manohar

நடிக்கிற வாய்ப்பு அவ்வளவு ஈஸியா எனக்குக் கிடைச்சிடலை. போராடித்தான் கிடைச்சது. சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்தான் கிடைச்சது. அதுக்கு முன்னாடி... நடிப்பில் ஆர்வம் வந்த கதையைச் சொல்றேன்.

நான் படிச்ச கார்ப்பரேஷன் ஸ்கூல்ல எனக்குத் தமிழாசிரியர், கவிஞர் பொன்னிவளவன். தமிழ் பண்டிட்.

மாணவர்களுக்கு யாப்பிலக்கணம், அணியிலக்கணம், சொல்லிலக்கணம்னு எல்லா இலக்கணத்தையும் நல்லமுறையில் சொல்லிக்கொடுப்பார். தமிழ்ப் பாடத்தை சிறப்பா நடத்துவார். வேற வகுப்புல அவர் பாடம் நடத்தினால்கூட நான் அங்கு போய் உட்கார்ந்துக்குவேன். அவரும் அதற்கு ஒண்ணும் சொல்ல மாட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாரத்தில் ஒருநாள் பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி எல்லாம் நடத்தி மாணவர்களை ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார்.

அவர் கற்றுக்கொடுத்ததை வெச்சு மேடைகளில் ரொம்ப சரளமாகப் பேச முடிஞ்சது. மேடைப் பேச்சாளரானேன். ஸ்டேஜ் பயம்னு சொல்லக்கூடிய மேடைக் கூச்சம் எனக்கு இல்லாமல் போச்சு. இது நான் நாடகத்துக்கும் சினிமாவுக்கும் வரும்போது பெரும் உதவியாக அமைந்தது.

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்

நான் இருந்த ஏரியாவுல கபூர்னு ஒருவர் டெய்லர் கடை வெச்சிருந்தார். அவர் அப்பப்போ நாடகமும் நடத்துவார். ஒரு முறை `தெய்வம் தந்த வீடு' நாடகத்துக்கு நடிகர்கள் தேவைனு போர்டுல எழுதிப்போட்டிருந்தார். நடிக்கிறதுக்கு வாய்ப்பு கேட்டு அவர்கிட்ட போனேன். அவரோ, `நீ டிக்கெட் விற்றுக் கொடு. உனக்கு நான் வாய்ப்புத் தர்றேன்'னு சொன்னார்.

நானும் ரெண்டு ரூபாய் டிக்கெட் நிறைய விற்றுக்கொடுத்தேன். அந்த நாடகத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த அனுபவத்தில், `பரிசுத்த யோபு', 'பரிசுத்த பவுல்', 'சிலுவை என்கிற சிங்காசனம்' போன்ற கிறிஸ்துவ நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன்.

வேறு சில நாடகங்களில் ரவுடி கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. மெட்ராஸ்லேயே பொறந்து வளர்ந்தவன்கிறதால மெட்ராஸ் பாஷையை ஈஸியா பேச முடிஞ்சது. பேங்க்ல வேலைபார்த்துக்கிட்டே சாயங்கால நேரத்துல நாடகங்கள்ல நடிச்சேன்.

கார்ப்பரேஷன் பேங்க் ஸ்டேட்மென்ட் எடுக்கிறதுக்காக ஸ்டேட் பாங்குக்கு அடிக்கடி போவேன். அங்கதான் பாலாஜியைப் பார்த்தேன். பேச்சுக்குப் பேச்சு டைமிங்கோட ஜோக் அடிப்பார். அப்போ அவர் விஜய் டிவியில் `சூப்பர் 10' லைவ் புரொகிராம் பண்ணிகிட்டு இருந்தார்.

அவர்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டு அடிக்கடி போவேன். ஒரு நாளில் ரெண்டு தடவைகூட போய் கேட்டிருக்கேன். ஒரு நாள் சாயந்தரம் போகும்போது அவர் சீக்கிரமே கிளம்பிப் போய்ட்டார்னாங்க. உடனே அவருக்கு போன் பண்ணினேன். `காலையில் ஷூட்டிங்குக்கு வந்துடு'னு சொல்லிட்டார்.

மறுநாள் விடியற்காலையிலேயே நான் கிளம்பி, ஒரு பையில பேன்ட், சட்டை, வேஷ்டியை எடுத்துக்கிட்டுப்போனேன். அவர் குரூப்லதான் சந்தானம், லொள்ளு சபா சுவாமிநாதன், நான் எல்லோரும் இருந்தோம். இன்னிக்கு பாலாஜி இல்ல. ஆனால், அவரை நினைக்காத நாள் இல்லை.

அன்றைக்கு அவர் கொடுத்த வாய்ப்பு இன்னைக்கு ஒரு நடிகனாக உங்க முன்னால் நிறுத்தி இருக்கு. ஆனா இந்த வெற்றி, அவ்வளவு சாதாரணமாகக் கிடைக்கலை.

விவேகானந்தர் சொன்ன மாதிரி, `போராடு... போராடு... வெற்றி கிடைக்கும்வரை போராடு' என்கிற வாக்கியம்தான் என் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்துகிட்டே இருக்கு. மறக்க முடியாத வாக்கியம். கார்ப்பரேஷன் பேங்க்லேயே தொடர்ந்து வேலைபார்த்து ரிட்டயர்டாகி இப்போ நான் பென்ஷன் வாங்கிட்டு சந்தோஷமா இருக்கேன்'' என்று புன்னகைக்கிறார் லொள்ளு சபா மனோகர்.