Published:Updated:

மனம் முழுவதும் அருள் நிரம்பி வழிய செய்த `மகா ஸ்கந்த ஹோமம்’!

மகாஸ்கந்த ஹோமம்

தட்டினால்தான் கதவு திறக்கும். பேசாமல் இருந்தால் எதுவும் நிகழாது. இறைவனிடம் மனமுருகி வேண்டிக் கேட்க வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஹோமங்கள் பிரதானமானது என்று குறிப்பிட்டு பல்வேறு ஹோமங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

மனம் முழுவதும் அருள் நிரம்பி வழிய செய்த `மகா ஸ்கந்த ஹோமம்’!

தட்டினால்தான் கதவு திறக்கும். பேசாமல் இருந்தால் எதுவும் நிகழாது. இறைவனிடம் மனமுருகி வேண்டிக் கேட்க வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஹோமங்கள் பிரதானமானது என்று குறிப்பிட்டு பல்வேறு ஹோமங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

Published:Updated:
மகாஸ்கந்த ஹோமம்

யாகம் என்றால் அர்ப்பணித்தல் என்று சொல்வார்கள். இறைவனுக்கு புனிதமாகக் கருதப்படும் பொருட்களை அர்ப்பணித்தல் யாகமாக கருதப்படும். நான்கு வேதங்களில் ஒன்றான யஜுர் வேதத்தில் பல்வேறு யாகங்கள் பற்றியும் அவற்றை நிகழ்த்தும் முறைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது..

யாகங்கள் பற்றிய செய்திகள் புறநானூற்றில் உள்ளது. சேர, சோழ பாண்டிய மன்னர்கள் செய்த யாகங்கள் பற்றிய தகவல்கள் சங்ககால நூல்களில் உள்ளன. யாகம் ஹோமம் இரண்டும் பல்வேறு நன்மைகளை அடைய செய்யப்படுவதாக இருந்தாலும் இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. உலக நலன் காக்க பெரிய அளவில் யாகம் செய்யலாம். தனி நபருக்காக குடும்ப பிரச்சனைகளுக்காக திருமண பிரச்சனைகளுக்காக செய்தால் அது ஹோமம்.

கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் அதில் முக்கியமானவைகள். ஹோமங்கள் பற்றி எழுத்தாளர் சுப்ரமணிய சாஸ்த்ரி அவர்கள் எழுதிய விரிவான தகவல்களை 'அர்த்தமுள்ள ஹோமங்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. தட்டினால்தான் கதவு திறக்கும். பேசாமல் இருந்தால் எதுவும் நிகழாது. இறைவனிடம் மனமுருகி வேண்டிக் கேட்க வழிமுறைகள் இருக்கின்றன. அதில் ஹோமங்கள் பிரதானமானது என்று குறிப்பிட்டு பல்வேறு ஹோமங்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

தொலைக்காட்சிகள் ஆன்மீக பத்திரிக்கைகள் வந்த பிறகு ஹோமம், யாகங்கள் அதிகளவில் நடைபெற ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக சக்தி விகடன் மூலமாக விகடன் வாசகர்களுக்காக இது போன்ற ஆன்மீக நிகழ்வுகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

12-06-2022 ஞாயிற்று கிழமை அன்று வைகாசி விசாகம். இந்த நாள் முருகன் அவதரித்த தினம் ஆகும். இத்தினத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் நல்லது நடக்கும் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் எல்லா பக்தர்களிடமும் இருக்கும். பராசரர் என்ற முனிவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு நாள் அருகில் உள்ள ஒரு குளத்துக்கு சென்று அதை அசுத்தம் செய்யும் வண்ணம் நடந்துகொண்டார்கள். அதில் வாழ்ந்த மீன்கள் மிகவும் வேதனைக்குள்ளாயின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவ்வாறு செய்யவேண்டாம் என்று முனிவர் எச்சரித்தும் அவர்கள் சேட்டைகளை நிறுத்தாமல் தொடர தன் பிள்ளைகள் என்றும் பாராமல் அவர்களை மீன்களாக மாறும்படி சாபமிட்டார். பின்னர் ஒரு சமயம் கைலாயத்திலிருந்து முருகனுக்காக ஊட்டப்பட்ட ஞானப்பாலில் ஒரு சொட்டு அக்குளத்தில் விழ அவர்கள் அனைவரும் முனிவர்களாக மாறி பிறகு சிவபெருமான் அசரீரியாய் வந்து சொன்ன தகவலின் படி திருச்செந்தூரில் தவமிருந்து வைகாசி விசாக தினத்தில் சாபவிமோசனம் பெற்றார்கள். முருகப்பெருமானை இத்தினத்தில் வழிபட்டால் நம் முன்வினைப் பயனால் ஏற்பட்ட துன்பங்கள் விலகும் என்பது அனைவரின் நம்பிக்கை.

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

அப்படிப்பட்ட ஒரு நாளில் திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலம் அருகே உள்ள உச்சிவாடி கிராமத்தில் இருக்கும் பிரம்மகுந்தளாம்பிகை சமேத பிரம்மரந்தீஸ்வரர் திருக்கோயிலில் சக்தி விகடன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் இணைந்து வாசகர்கள் நலனுக்காக 'மகாஸ்கந்த ஹோமம்' நடத்தினர்.

ஸ்‌கந்தா என்றால் சிவன் மகன் என்று பொருள். பலரால் விரும்பப்படும் பெயர். அந்த கந்தனின் அருளை முழுமையாக அனைவரும் பெறவே நடத்தப்பட்டது மகா ஸ்கந்த ஹோமம்.

பிரம்மரந்திரம் என்றால் சிரசுவின் உச்சியில் இருக்கும் ஒரு துளை. பிரம = ஆன்மா ரந்திரம் = ஓட்டை துளை. பிரமம் ஆகிய ஆன்மா இருக்கும் துவாரம்தான் பிரமரந்திரம். இதை சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கிலத்தில் 'BRAHMARANDHRA - the passage through which life enters and can exit என்று சொல்லி இருக்கிறார். யோகக்கலையில் பிரமரந்திரம் என்றால் சகஸ்ராராவை குறிக்கும். இங்குள்ள சிவன் யோகக்கலைகளை ஸித்திக்கும் ஆதி குருவாக இருக்கிறார். இத்தலத்தில்தான் தந்தையிடம் யோகக்கலை வர்மக்கலைகளை முருகன் கற்றுக்கொண்டார் என்று தலபுராணம் சொல்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த விஷேசமான ஞாயிறு மாலை 6.00 மணிக்கு மேல் பால தண்டாயுதபாணி சன்னிதியில் ஆரம்பமானது மகாஸ்கந்த ஹோமம். ராம்நாத் சிவாச்சாரியார் அவர்கள் சிறப்பாக நடத்தித் தந்தார். நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். அனைவரும் தங்கள் பெயர் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் மற்றும் நட்சத்திரங்களை எழுதிக் கொடுக்க அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜை முடிந்ததும் சங்கல்பம் தொடங்கியது. சுமார் 9.00 அளவில் பூர்ணாஹூதி முடிந்ததும். ஆலய அர்ச்சகர் திரு.அசோக் அவர்கள் புனித நீர் நிறைந்த கடத்தை சுமந்து கொண்டு ஆலயத்தை வலம் வந்து பின்னர் அதை முருகனுக்கு அபிஷேகம் செய்தார். எல்லாவிதமான அபிஷேகங்களும் முடிந்து அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஹோமத்தின் இடையிடையே திருக்கயிலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. திரு.ராஜா என்கிற சிங்காரவேலன் தலைமையிலான இசைக்குழு வாசித்தார்கள்.

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

சிவபெருமானுக்காக மட்டுமே சிவனடியார்களால் இசைக்கப்படுகிறது. இவ்வாத்தியங்கள் நம் இறையுணர்வை மேம்படுத்தும். இந்த இசைக்குழுவில் அனைவரும் இளைஞர்களே. ஒரு சிலர் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹோமம் முடிந்ததும் அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கினார்கள். மனசுக்கான நிகழ்வு முடிந்ததும் வயிற்றுக்கான நிகழ்வு தொடங்கியது. வேறென்ன அன்னதானம்தான்.

வந்திருந்த அனைவரின் கோரிக்கைகளை முருகப்பெருமான் விரைவில் நிறைவேற்றி வைப்பான். மனம் முழுவதும் அருள் நிரம்பி வழிய இரவின் இருள் கூட வெளிச்சமாக மாறி வழிகாட்டியது. இது போன்ற ஹோமங்கள் தொடரும். வைரஸ் தாக்குதலில் இருந்து விடுபட்ட நாம் நம்நாடு மேலும் மேலும் உச்சிக்கு போக உச்சிவாடி ஈசன் துணையாய் இருப்பார்.

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்

மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

-என்று கந்தர் அனுபூதியில் அருணகிரியார் பாடியதை சொல்லி கட்டுரையை முடிக்கும் முன்பு கூடுதலாய் ஒரு தகவல். சிறப்பான விருந்துக்கு பிறகு ஐஸ்கிரீம் போல...

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

இந்த உச்சிவாடி கிராமத்தில் பிறந்த திரு.முத்துசாமி ஐயர் அவர்கள்தான் சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவியேற்ற முதல் இந்தியர் (1878 ஆம் ஆண்டு) என்ற பெருமையை பெற்றவர். இவருக்கு விரைவில் மணிமண்டபம் கட்ட இருப்பதாக திரு.ராஜா அவர்கள் சொன்னார்கள்.. சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் இவருக்கு சிலை உள்ளது.

இத்தகைய சிறப்புகளைப் பெற்ற இவ்வூருக்கு ஒரு முறை சென்று வழிபட்டு வாருங்கள்.. மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மனம் வளமாகும். மனம் மணம் வீசினால் வாழ்கையில் எப்போதும் தென்றல்தான் வீசும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism