Published:Updated:

வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம் - ஏன் இந்தப் பயணம் முக்கியமானது? ஓர் எளிய விளக்கம்!

வீராணம் ஏரி

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்: ஏற்கெனவே 3 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது 2022 ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம் - ஏன் இந்தப் பயணம் முக்கியமானது? ஓர் எளிய விளக்கம்!

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்: ஏற்கெனவே 3 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை 2 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது 2022 ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

Published:Updated:
வீராணம் ஏரி
காலங்கள் கடந்தும் தமிழ் இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டு வரும் புதினம் பொன்னியின் செல்வன். பிற்காலச் சோழப் பேரரசை வலிமையுறச் செய்த ராஜராஜனின் ஆரம்ப கால வரலாற்றை வந்தியத்தேவனின் பார்வையில் இருந்து அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி 1950-ம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். நான்கு ஆண்டுகள் தொடர்ந்த இந்தப் புதினம் இன்றுவரை எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தக வடிவைத் தாண்டி, ஆடியோ, வீடியோ, காமிக்ஸ், வெப் சீரிஸ், மேடை நாடகம், கிராஃபிக் சினிமா என விரிவடைந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட சினிமாவாகவும் இப்போது வெளிவர உள்ளது.

அப்படி என்ன இந்தப் புதினத்தின் மீது தமிழ் மக்களுக்கு ஆர்வம் என்றால், அந்தக் கதை சொல்லப்பட்ட விதம் அப்படி. அந்தப் புதினத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் மக்களோடு இணைந்துவிட்ட உயிருள்ள மாந்தர்களாகப் பொருந்திவிட்டனர் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அசகாய வீரனான வந்தியத்தேவன் அறிமுகத்தோடு தொடங்கும் புதினத்தில் நகைச்சுவைக்கு ஆழ்வார்க்கடியான், கம்பீரம் கொண்ட குந்தவை, மர்மம் விலகாத நந்தினி, கோடியக்கரை பூங்குழலி என ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொருவித ரசனைக்குரியன.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.

அதேபோல் இந்தப் புதினத்தின் சம்பவங்கள் நடைபெறும் ஒவ்வொரு இடங்களையும் கல்கி வர்ணிக்கும்விதமே அலாதி! கடம்பூர், பழையாறை, அரசிலாற்றங்கரை, வீராணம் ஏரி, ஈழம், தஞ்சாவூர், உடையாளூர், கோடியக்கரை, நாகை என விரிந்துகொண்டே செல்லும் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த இடங்கள் இன்னும் பல அடையாளங்களை தன்னுள் வைத்துக் கொண்டு காத்துக் கொண்டே இருக்கின்றன. வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள், பொன்னியின் செல்வன் புதினத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்கள் இன்னும் இந்த இடங்களை தரிசுத்தவாறே உள்ளனர். உதாரணமாக ஆழிக்கடல் போல விரிந்திருக்கும் வீராணம் ஏரி சோழர்களின் நீர் மேலாண்மைக்கு ஒரு அற்புதமான சான்று எனலாம்.

"ஆகா! இது எவ்வளவு பிரமாண்டமான ஏரி? எத்தனை நீளம்? எவ்வளவு அகலம்? தொண்டை நாட்டில் பல்லவப் பேரரசர்களின் காலத்தில் அமைத்த ஏரிகளையெல்லாம் இந்த ஏரிக்கு முன்னால் சிறிய குளங்குட்டைகள் என்றே சொல்லத் தோன்றும் அல்லவா? வட காவேரியில் வீணாகச் சென்று கடலில் விழும் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக மதுரை கொண்ட பராந்தகரின் புதல்வர் இளவரசர் இராஜாதித்தர் இந்தக் கடல் போன்ற ஏரியை அமைக்க வேண்டுமென்று எண்ணினாரே? எண்ணி அதைச் செயலிலும் நிறைவேற்றினாரே? அவர் எப்பேர்ப்பட்ட அறிவாளியாய் இருந்திருக்க வேண்டும்? மேற்குத் திசையிலிருந்து விர்ரென்று அடித்த காற்றினால் வீர நாராயண ஏரித் தண்ணீர் அலைமோதிக் கொண்டு கரையைத் தாக்கியதுபோல் அவனுடைய உள்ளமும் பெருமிதத்தினால் பொங்கித் ததும்பிற்று..." என்று வீராணம் ஏரியை வர்ணிக்கும் கல்கியின் வரிகளுக்கு சாகாவரம் கிட்டிவிட்டது என்றே சொல்லலாம்.
வீர நாராயண ஏரி
வீர நாராயண ஏரி

வீரநாராயண ஏரி என்பதே தற்போது வீராணம் என்று சுருங்கிவிட்டது. விஜயாலய சோழனின் பேரனான பராந்தகச் சோழனின் பட்டப்பெயரே வீர நாராயணன். இவன் காலத்தில் வடக்கே ராஷ்டிரகூடர்கள் வலிமை பெற்றதால், அவர்கள் சோழர்கள் மீது படையெடுக்கலாம் என்று சிந்தித்த பராந்தகன், தன் மகன் ராஜாதித்தனை பெரும்படையோடு வடக்கு நோக்கி அனுப்பி வைத்தான்.

அவர்கள் காட்டுமன்னார்கோவில் பகுதியில் படை வீடு அமைத்து தங்கியிருந்த காலத்தில் வெட்டப்பட்டதுதான் இந்த வீராணம் ஏரி. காவிரியின் கொள்ளிடத்தின் கீழணையிலிருந்து வடவாறு வழியாக இந்த ஏரிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது. வெள்ளக்காலத்தில் வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை இங்கே திருப்பி பெரும் ஏரியாக உருவாக்கிய சோழர்களின் திறமைக்கு ஆயிரம் வணக்கங்கள் வைக்கலாம். தஞ்சை டெல்டா பகுதிக்கு அடுத்து தமிழகத்திலேயே அதிக விளைச்சல் பெரும் பகுதியாக இன்றும் இந்த வீராணம் ஏரிப்பகுதிகள் உள்ளன. முறையானத் திட்டமிடலுடன் பிரமாண்டமாக வெட்டப்பட்ட இந்த வீராணம் ஏரியே நமது 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணத்தின்' முதல் பகுதியாக உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நின்று இருக்கும் இதுபோன்ற பல இடங்களை இந்தப் பயணத்தில் ஆழமாகச் சிந்தித்து அளவளாவ இருக்கிறோம். பயணத்தின் இறுதி இடமாக கோடியக்கரை கடற்கரையில் கூடுவோம். அலையோசையை மிஞ்சும் பூங்குழலியின் அந்த கானத்தை நாமும் செவிமடுக்க வேண்டும் இல்லையா! வாருங்கள்...

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்
விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்...
நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.