Published:Updated:

சுயம்வர பார்வதி ஹோமம்: நீண்ட காலமாகத் தடைபடும் உங்கள் திருமணம் கைகூடும் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுயம்வர பார்வதி ஹோமம்

வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.

சுயம்வர பார்வதி ஹோமம்: நீண்ட காலமாகத் தடைபடும் உங்கள் திருமணம் கைகூடும் - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.

Published:Updated:
சுயம்வர பார்வதி ஹோமம்
சகல வசதிகள், அம்சங்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ ஜாதக குறைபாடுகள், தோஷங்கள், கிரக நிலை குறைபாடுகள், பித்ரு தோஷங்கள், குலதெய்வ வழிபாட்டை மறந்துபோனது போன்ற பல காரணங்களால் திருமணம் தடைபடுவது உண்டு. இதை சரி செய்து திருமண வரத்தைப் பெற நமது சாஸ்திரங்கள் பல உபாயங்களையும் கூறுகின்றன. அதில் சிறப்பானது சுயம்வர பார்வதி ஹோமம்.

இது அன்னை பார்வதி ஈசனை அடைய செய்த வழிபாடு என்றும், இந்த மூல மந்திரங்களை பிரம்மன் உபதேசிக்க, வசிஷ்டரால் ஹோமத்தில் உச்சாடனம் செய்யப்பட்டது என்றும் கூறுவார்கள். கணபதி தொடங்கி வருணன், அஷ்ட திக் பாலகர்கள், பஞ்ச சாத்குன்ய தேவதைகள், சுயம்வர பார்வதி என பல தெய்வங்களை ஆவாஹனப்படுத்தி செய்யும் அற்புத வழிபாடு இது. இந்த வழிபட்டால் உங்கள் பித்ருக்களும், குலதெய்வமும் மகிழ்ந்து உங்களுக்கு திருமண வரத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

வெள்ளிமேடுப்பேட்டை ஆலயம்
வெள்ளிமேடுப்பேட்டை ஆலயம்
KURUZ THANAM A

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

சுயம்வர பார்வதி ஹோமத்தில் உச்சரிக்கப்படும் மூல மந்திரமானது காயத்ரி மந்திரத்திற்கு இணையானது என்பர். காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களால் ஆனது. சுயம்வர பார்வதி ஹோம மந்திரம் 48 அட்சரங்களால் ஆனது. இது உங்களின் அனைத்துத் திருமண தடைகளையும் தகர்த்து, உங்களுக்கான வாழக்கைத் துணையைப் பெற்று தரும் என்பதும் உறுதி.

ஒரு வரனுக்குத் திருமணம் தாமதமாகிறது என்றால், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், குரு பலன் இல்லை எனப் பல காரணங்கள் ஜோதிடர்களால் கூறப்படுகிறது. ஒரு வரனுக்குத் திருமண வயது ஏற்படும் வேளையில் நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலன்களாலும் திருமணம் தாமதம் ஆகக்கூடும் என்கிறது ஜோதிடம். மேலும் லக்னம் அல்லது ராசியை பாப கிரகங்கள் நோக்கினாலும், லக்னாதிபதி மற்றும் ராசியாதிபதியைப் பாப கிரகங்கள் பார்த்தாலும், திருமணம் தாமதமாகும் என்கிறார்கள். இதற்கெல்லாம் தீர்வாக அமைவதுதான் இந்த சுயம்வர பார்வதி ஹோமம்.

இந்த அற்புதமான மங்கல வேள்வியை திண்டிவனம் வெள்ளிமேடுப்பேட்டையில் உள்ள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தில் நடத்தவிருக்கிறோம். ஈசனுக்கும் சக்திக்கும் பூலோக ப்ரதிக்ஷ விவாஹம் நடைபெற்ற தலம் இது என்பதால் இங்கு இந்த வேள்வி நடத்த சிறப்பானது எனலாம். ஈசனார்-அன்னை கௌரியை இங்கு கரம் பற்றினார், அப்போது ஈசன் சகலமானவர்களுக்கும் 'இங்கு வந்து பூஜித்தால், திருமணம் தொடர்பான சகல தோஷங்களும் விலகி, நல்ல வரன் அமைந்து, அவர்களுக்கு மங்கல வாழ்வு கிட்டும்' என்று வரம் அருளினார் என்கிறது தலபுராணம்.

திரிபுரசுந்தரி அம்மன்
திரிபுரசுந்தரி அம்மன்
KURUZ THANAM A
'புத்தனந்தல்’ என்று முன்னர் அழைக்கப்பட்ட வெள்ளிமேடுப்பேட்டையில் உள்ள இந்த ஆலயம் 2500 ஆண்டுகள் பழைமையானது. முற்காலப் பாண்டியர்களின் காலத்தில் உருவானது என்பதற்குச் சான்றாக மண்டப விதானங்களில் ஆங்காங்கே மீன் லட்சினை காணப்படுகிறது. கல்யாண வரம் அருளும் ஸ்ரீநாகேஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மனும் இங்கு அமர்ந்து ஆட்சி புரிகிறார்கள்.

சுக்கிரன் வழிபட்டு உயர்வு பெற்ற தலம் இது என்பதால் இது சுக்கிர பலம் ஸித்திக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. சுக்கிரன் எனும் வெள்ளி வழிபட்ட மேடான ஊர் என்பதால் வெள்ளிமேடுபேட்டை என்றானது. இங்குள்ள மூலவரான லிங்கத்தின் மீது நாகத்தின் செதில்கள் போன்ற அமைப்பு இருப்பதால் இந்த நாகேஸ்வர ஸ்வாமியை வழிபட்டால், நாகதோஷம் உள்ளிட்ட சகல தோஷங்களும் நீங்கும், திருமண வரம் கிட்டும் என்கிறார்கள் பக்தர்கள். ஈசனின் சந்நிதிக்கு அருகில் தெற்கு நோக்கி திருபுரசுந்தரி அருள்பாலிக்கிறாள். இவள் மங்கல வாழ்வும், மாங்கல்ய பலமும் அளிக்கும் தேவி என்கிறார்கள்.

திருக்காளத்திக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் இடையில் அமைந்த மத்திய ராகு - கேது தலமாக வெள்ளிமேடுபேட்டை அமைந்திருப்பதால், இது ராகு - கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இதனால் இது காளத்தியைப் போல திருமண வரம் அருளும் கோயிலாகவும் உள்ளது. இங்கே ஈசனை மேற்கு நோக்கியபடி சனிபகவான் அருள்கிறார். ஆகவே, இது சனிபகவானுக்கு உரிய பரிகாரத்தலமாகவும் விளங்குகிறது (திருநள்ளாருக்கும் தெள்ளாறுக்கும் இடையே அமைந்த மத்திய சனீஸ்வரம் என்றும் கூறுகிறார்கள்). இப்படி ஒரே தலம் சனி, ராகு-கேது, சுக்கிரன் என்று பல கிரகங்களுக்கானப் பரிகாரத் தலமாக இருப்பதால் இங்கு வழிபட நிச்சயம் திருமண வரம் கிட்டும் என்பது ஆழமான நம்பிக்கை.

வெள்ளிமேடுப்பேட்டை முருகன்
வெள்ளிமேடுப்பேட்டை முருகன்

மகாலட்சுமி தாயார் திருமாலை எண்ணித் தவமிருந்த தலங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் பெரியோர்கள். மங்கல வாழ்வு அளிக்கும் ஊர் என்பதால் காஞ்சி மகாபெரியவர் இந்த ஊருக்கு வந்து தங்கி நாகேஸ்வரப் பெருமானைப் பூசித்து மகிழ்ந்திருக்கிறார் என்பதும் ஒரு விசேஷத் தகவல். இப்படி பல பெருமைகள் கொண்ட இந்த திருமணத் தலத்தில் வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. காளஹஸ்தி, ராமேஸ்வரம், திருநள்ளாறு, கஞ்சனூர் உள்ளிட்ட தலங்களில் செய்யப்படும் அனைத்து திருமணப் பரிகார சடங்குகளையும் இங்கு ஒருசேர செய்வது சிறப்பினும் சிறப்பானது என்கிறார்கள்.

சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள். இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் பதிவு செய்து கொண்டு மானஸீகமாக வேண்டிக்கொண்டாலே திருமணம் வரம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஹோமத்துக்குப் பிறகு அளிக்கப்படும் பஸ்பம், குங்குமத்தை ஒரு மண்டல காலத்துக்கு தினமும் தினமும் இட்டு வந்தால், திருமணத் தடை நீங்கி சீக்கிரமே நல்ல துணை கிடைக்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.
சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.