Published:Updated:

விவேகானந்தர் சிகாகோ உரை : மதத்தால் துன்புறத்தப்பட்டவர்களுக்குப் புகலிடம் அளித்த இந்தியா

பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்

எனது அருமை அமெரிக்க‍ சகோதர, சகோதரிகளே! நீங்கள் நேசத்துடன் என்னை வரவேற்ற பண்பு என் மனதை நிறைத்துவிட்டது என்று தொடங்கிய விவேகானந்தரின் உரை உலக நாடுகள் அனைத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அவர்,“உலகின் மிகப்பழைமை வாய்ந்த துறவியர் பரம்பரை மற்றும் அனைத்து மதங்களின் அன்னையின் சார்பாக நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் சார்பாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன்,” என அவரது உரை நீண்டது.

அவரது உரையில் தென் இந்தியாவைக் குறிப்பிட்டு இருந்தார்.

தென் இந்தியாவும் இஸ்ரேலும்

“உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.” என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

விவேகானந்தர்
விவேகானந்தர்

மேலும் அவர், “ரோமானியரின் கொடுமையால், மதத்தளங்கள் அழிக்கப்பட்டு, பின்னர் தென்னிந்தியாவிற்குத் தஞ்சம் கோரி வந்த இஸ்ரேலிய மரபினர்களுக்குப் புகலிடம் கொடுத்த புனித நினைவுகளைக் கொண்டவர்கள் நாங்கள் என்று பெருமைப்படுகிறேன்,” என்றார் அவர்.

எல்லா மதங்களும் உண்மை என நம்புகிறவர்கள் நாங்கள் என்ற அவர், “பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதிப்பது, அவற்றை ஏற்றுக் கொள்ளும் பண்புகளை உலகத்திற்குக் கற்பித்த மதத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமையடைகிறேன்.” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இனவாதமும் மதசார்பும்

இனவாதம், மதச்சார்பு இவற்றால் உருவான கொடூர விளைவுகள், அழகிய இந்த உலகை நெடுங்காலமாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை வன்முறையால் நிரப்பியுள்ளன. உலகம் ரத்த வெள்ளத்தால் சிவந்துவிட்டது என்றார்.

“எத்தனை நாகரிகங்கள், எத்தனை நாடுகள் அழிக்கப்பட்டன என்பதையும் சரியாகச் சொல்லிவிடமுடியாது. இதுபோன்ற ஆபத்தான அரக்கர்கள் இல்லை என்றால், மனித சமுதாயம் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவற்றிற்கான காலம் முடிந்துவிட்டது. இந்த மாநாட்டின் குரலானது அனைத்து விதமான மத வெறிகளுக்கும், வெறித்தனமான கொள்கைகளையும், துயரங்களையும் அழிக்கும் என்று நான் நம்புகிறேன்,”என்று குறிப்பிட்டார்.

Vikatan

விவேகானந்தர் கூறிய கதை

தனது உரையில் ஒரு கதையைக் குறிப்பிட்டார் விவேகானந்தர்.

அவர், “ஒரு கிணற்றிலே ஒரு தவளை, காலம் காலமாக இருந்தது. அதற்குத் தெரிந்த உலகமெல்லாம் அந்தக் கிணறு தான். ஒரு நாள் சுனாமியை போல் வேகமாக அலைவீச, கடல்நீரோடு ஒரு தவளையும் தாவி வந்து அந்தக் கிணற்றிலே விழுந்தது. அந்த புதிதாய் வந்த தவளையினை, நீ எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டது கிணற்றுத் தவளை. நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது. ஒரு தாவு தாவி, உனது கடல் இதைவிடப் பெரிதா? என்றது. அதற்குக் கடல் தவளை கடலானது உனது கிணற்றைவிடப் பலமடங்கு பெரியது என்றது. அதைக் கேட்டதும் கோபமான கிணற்றுத் தவளை, சத்தியமாய் கிணற்றைவிடப் பெரியதாய் கடல் இருக்க முடியாது என்றது. அது அதன் அறியாமை. அதுபோல தங்கள் மதம்தான் உலகம் என்று நினைப்பவர்களின் எண்ணங்களை இந்த மாநாடு தகர்த்தெறியும்,” என்றார்.

" உற்சாகமாகத் தொடங்குவதுதான் எதிலும் வெற்றி பெற முதல் படி " - விவேகானந்தர் பொன்மொழிகள் #SwamiVivekananda

Posted by Ananda Vikatan on Monday, January 11, 2021

அனைவரையும் நான் அடைகிறேன்

யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர், சிக்கல்களில் உழல்கின்றனர், ஆனால் இறுதியில் என்னையே அடைகின்றனர் என்கிறது கீதை. இந்த அற்புதமான உண்மையை உலகத்திற்கு இந்த மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

“நிலத்தில் விதை விதைக்கின்றோம். விதை வளர்வதற்கு மண்ணும், நீரும், காற்றும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த விதை விதைக்கிறபோதும், வளர்கிறபோதும் தான் எடுத்துக்கொண்ட மண்ணாகவோ, நீராகவோ, இல்லை காற்றாகவோ வளர்வதில்லை. மாறாக அது செடியாகத்தான் வளர்கிறது. அதேபோல்தான் ஒவ்வொரு மனிதத்துக்குள்ளேயும் உள்ள வளர்ச்சியானது பல மதங்களிலிருந்து ஏற்படுகின்ற கோட்பாடுகளை ஒன்றிணைத்தாலும் கூட அது கடைசியில் மனிதத்தன்மை கொண்டு வளர்கின்ற போதுதான் அந்த மனிதன் சிறப்புப் பெறுகிறான்,” என்றார்.

இது விவேகனாந்தர் ஆற்றிய உரையின் சாரம் மட்டுமே. முழுமையான உரை அல்ல
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு