Published:Updated:

ராஜேந்திர சோழன் பிறந்த ஆடித் திருவாதிரைப் பெருவிழா! - களைகட்டியது கங்கைகொண்ட சோழபுரம்

ராஜேந்திர சோழன்
News
ராஜேந்திர சோழன்

தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா, சுமத்ரா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவன்...

தமிழ்ப் பெருநிலத்தின் தன்னிகரில்லா பெருவேந்தன் ராஜேந்திர சோழன். வாளின் வலிமையால் எதிரிகள் அனைவரையும் அடக்கித் தன் ஆட்சிப்பரப்பில் பேரமைதியை நிலைநாட்டிப் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியவன். தற்போதைய இந்தியாவைவிடவும் நான்கு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பை ஆட்சி புரிந்த பேரரசன். கடல் கடந்து அயல்நாட்டைக் கைப்பற்றிய முதல் இந்திய மன்னன் இவனே. தன் ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதோடு, கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீ விஜயம், மலேயா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவன்.

ராஜேந்திர சோழன்
ராஜேந்திர சோழன்

ஒரு பேரரசின் தலைநகரத்துக்கு எப்போதுமே படைவீரர்கள், தளவாடங்கள், யானைகள், குதிரைகள் ஆகியவை வந்துகொண்டேஇருக்கும். தஞ்சாவூர், வயல்வெளிகளால் சூழப்பட்ட விவசாய பூமி. 'படை நகர்வதால் விளைநிலங்கள் சேதமாகக் கூடாது' என்ற உயரிய சிந்தனையுடன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கொள்ளிடத்தின் வடகரைக்கு மாற்றியவன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வீரத்துக்காக மட்டுமன்றி நிர்வாகத் திறனுக்காகவும் கொண்டாடப்பட வேண்டியவன் ராஜேந்திரன். சிறந்த நிர்வாகம், திட்டமிடல், ஆட்சித்திறன் ஆகியவற்றின் மூலம் பொற்கால ஆட்சி வழங்கிய ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் 'ஆடிமாத திருவாதிரை’ நட்சத்திரத்தன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்படுகிறது.

இன்றும் ஊருக்கு 10 பேர் ‘ராஜேந்திரன்’ என்று பெயர் சூட்டியிருப்பதைப் பார்க்க முடியும். 1,000 ஆண்டுகள் கடந்தும் மக்கள் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி ராஜேந்திரனைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்ப் பெருநிலத்தில் கொண்டாடப்பட்ட வேந்தன் ராஜேந்திரன். அவனுக்கு 2014-ம் ஆண்டிலிருந்து பெருவிழா எடுத்துக் கொண்டாடிவருகிறோம்.
- கோமகன்

இன்று (30.7.2019) ராஜேந்திர சோழனின் ஆடித் திருவாதிரைப் பெருவிழாவை முன்னிட்டு கங்கைகொண்ட சோழீச்சுவரத்தில் மகா அபிஷேகம், ஆராதனைகள், பண்பாட்டுப் பெருவிழா, ராஜேந்திரன் பெயரில் விருது வழங்கும் விழா ஆகியவை நடைபெற்று வருகின்றன. இது குறித்து கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகனிடம் பேசினோம்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஆடித் திருவாதிரை தினத்தை ஒவ்வொரு வருடமும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடி வருகிறோம். ஆடித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம். ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம் 2014-க்கு முன்புவரை தவறுதலாக `மார்கழித் திருவாதிரை’ என்றே கொண்டாடப்பட்டு வந்தது. சதாசிவ பண்டாரத்தார், திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டு ஒன்றைச் சான்றுகாட்டி, 'மார்கழித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்' என்று எழுதினார்.

ஆடித் திருவாதிரைப் பெருவிழா
ஆடித் திருவாதிரைப் பெருவிழா

அதை அடிப்படையாகக்கொண்டே மார்கழித் திருவாதிரை கொண்டாடப்பட்டது. 'ராஜேந்திரனுக்குப் பிறந்த நட்சத்திர விழா எடுக்க வேண்டும்' என்று 2012-ல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பம் செய்தோம். அதற்கு ஏற்படுத்தப்பட்ட கமிட்டியில் பேராசிரியர் இல.தியாகராஜன், குடவாயில் பாலசுப்ரமணியம் ஆகியோரோடு நானும் உறுப்பினராக இருந்தேன். மாவட்ட ஆட்சியர், ’எந்தத் திருவாதிரை, ராஜேந்திரனின் பிறந்தநாள் என்பதை வரலாற்றுத் தகவல்களுடன் உறுதி செய்யுங்கள். கொண்டாடலாம்...’ என்றார்.

உடனே குடவாயில் பாலசுப்ரமணியம், திருவாரூர் தியாகராஜர் கோயில் சந்நிதியில் மேற்குப் புறச் சுவரில் உள்ள குமுதப்படையில் இருந்த கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கூறி 'ஆடித் திருவாதிரைதான் ராஜேந்திரனின் பிறந்த நட்சத்திரம்' என்றார். உடனே சென்று குறிப்பிட்டக் கல்வெட்டைப் படியெடுத்து வெளியிட்டோம். ராஜேந்திரன் நேரடியாக வெளியிட்ட அரசு ஆணைதான் அந்தக் கல்வெட்டு. `கோனேரின்மை கொண்டான்’ என்று தொடங்கும் அந்த அரசு ஆணையில் 'யாம் பிறந்த ஆடித் திருவாதிரையும் ஐயனின் ஐப்பசி சதயமும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வாளின் வலிமையால் எதிரிகள் அனைவரையும் அடக்கித் தன் ஆட்சிப்பரப்பில் பேரமைதியை நிலைநாட்டிப் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியவன். தற்போதைய இந்தியாவைவிடவும் நான்கு லட்சம் சதுர கி.மீ நிலப்பரப்பை ஆட்சி புரிந்த பேரரசன். கடல் கடந்து அயல்நாட்டைக் கைப்பற்றிய முதல் இந்திய மன்னன் இவனே.
ராஜேந்திர சோழன்

ராஜேந்திரனே தன் ஆணையில் தன் பிறந்த நாளைக் குறிப்பிட்ட கல்வெட்டு இது.

அதன்பிறகு ராஜேந்திரன் ஆட்சியேற்ற ஆ1,000 ஆண்டு விழாவைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து 2014-ம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் அவனது பிறந்த நட்சத்திரத்தோடு சேர்த்துப் பெருவிழா எடுத்துக் கொண்டாடினோம். அவன் பிறந்த ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்தன்றும் விழா எடுத்துக் கொண்டாடப்பட்ட குறிப்புகள் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன. பொதுவாக குலசாமி, முன்னோர்கள், தாத்தா- பாட்டி, தெய்வங்கள், கொண்டாடப்பட்ட பெரிய மனிதர்கள் என்றுதான் நம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவோம்.

இன்றும் ஊருக்குப் பத்துபேர் ‘ராஜேந்திரன்’ என்று பெயர் சூட்டியிருப்பதைப் பார்க்க முடியும். 1,000 ஆண்டுகள் கடந்தும் மக்கள் தம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி ராஜேந்திரனைக் கொண்டாடுகிறார்கள். தமிழ்ப் பெருநிலத்தில் கொண்டாடப்பட்ட வேந்தன் ராஜேந்திரன். அவனுக்கு 2014-ம் ஆண்டிலிருந்து பெருவிழா எடுத்துக் கொண்டாடிவருகிறோம்.

ஆடித் திருவாதிரைப் பெருவிழா
ஆடித் திருவாதிரைப் பெருவிழா

ராஜேந்திரன் நட்சத்திர விழா எப்படி, அந்தக்காலத்தில் கொண்டாடப்பட்டதோ அப்படியே கங்கை கொண்ட சோழீச்சுவரருக்கு மகா அபிஷேகம், ஆராதனைகள் செய்து, அன்னதானம் படைத்து கொண்டாடுகிறோம். இதுமட்டுமல்லாமல் பண்பாட்டுப் பெருவிழா, கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இரண்டு நாள் (29.7.19 & 30.7.19) திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஆடித் திருவாதிரை திருவிழாவின் முதல் நாளான நேற்று 'தமிழ் மொழிச் சிதைவும் தற்காப்பும்’ எனும் பெயரில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பரத நாட்டியம், பறை முழக்கம், பறையும் பரதமும், துடும்பாட்டம், சிலம்பாட்டம், மண்மேளம், பெருஞ்சலங்கை ஆட்டம், களரி உள்ளிட்ட தமிழர்ப் பண்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

ஆடித் திருவாதிரைப் பெருவிழா
ஆடித் திருவாதிரைப் பெருவிழா

இன்று, கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் படத்தை மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் திறந்து வைக்கிறார். ராஜேந்திர சோழனின் உருவப் படத்தை வரைந்த ஓவியர் ராஜேந்திரன், அரியலூர் மாவட்டக் கல்வெட்டுகளைத் தொகுத்த பேராசிரியர் இல.தியாகராஜன், தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தைச் சிங்கப்பூரில் நிறுவி ஆண்டுதோறும் ராஜேந்திரனுக்கு விழா எடுத்துவரும் புருஷோத்தமன் ஆகிய மூவருக்கும் ‘ராஜேந்திரன்’ விருதை மத்திய அமைச்சர் வழங்கிச் சிறப்புசெய்கிறார்.

மேலும் விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன் மற்றும் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரம்

ராஜேந்திர சோழன் ஆடித் திருவாதிரை பெருவிழாவால் கங்கை கொண்ட சோழபுரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தமிழனின் வீரத்தைக் கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, ஜாவா வரை நிலைநாட்டிய தமிழ்ப் பெருவேந்தன் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுவோம்!