Published:Updated:

புத்தாண்டு சபதங்களைக் கடைப்பிடிக்க முடியவில்லையா... இதோ உங்களுக்கு உதவும் 5 டிப்ஸ்!

2022 புத்தாண்டு சபதம்
News
2022 புத்தாண்டு சபதம்

இந்த ஆண்டிலிருந்து என் எடையை குறைத்துக் கொள்வேன் என்பதைத் தெளிவான புத்தாண்டு சபதமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல ‘இந்த ஆண்டிலிருந்து நான் நல்லவனாக இருப்பேன்’ என்பதும் ஒரு குழப்பமான தீர்மானம்தான்.

மேலும் ஒரு புத்தாண்டு நெருங்கிவிட்டது. வரும் ஆண்டில் இருந்து ‘என்னை இப்படி எல்லாம் மாற்றிக் கொள்ளப் போகிறேன்’ என்பதுபோல் நீங்கள் தீர்மானிக்க வாய்ப்பு உண்டு. இதைப் போன்று பலரும் எடுத்துக்கொள்ளும் இந்த புத்தாண்டு சபதங்கள் பெரும்பாலும் நீர்த்துப் போகின்றன. கொஞ்ச நாள் கடைப்பிடித்து விட்டு பிறகு இவற்றைக் கைவிட்டு விடுவார்கள். எடுத்த தீர்மானங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க, நாம் சிலவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

புத்தாண்டு சபதம் தெளிவாகவும் குறிப்பாகவும் இருக்க வேண்டும்

இந்த ஆண்டிலிருந்து என் எடையை குறைத்துக் கொள்வேன் என்பதைத் தெளிவான புத்தாண்டு சபதமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேபோல ‘இந்த ஆண்டிலிருந்து நான் நல்லவனாக இருப்பேன்’ என்பதும் ஒரு குழப்பமான தீர்மானம்தான். 'ஒவ்வொரு மாதமும் இரண்டு கிலோ எடை குறைப்பபேன்’. ‘தினமும் காலையில் ஒரு கிலோமீட்டர் வேகமான நடைப் பயிற்சி செய்வேன்’. ‘ஒவ்வொரு மாதமும் ஓர் அறப் பணிக்கு ஐ​நூறு ரூபாய் கொடுப்பேன்’. ‘ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுத் தருவேன்’. இப்படிப்பட்ட தெளிவான சபதங்கள் நிறைவேற வாய்ப்பு அதிகம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நேர்மறையான தீர்மானங்கள்

கடந்தகாலக் கசப்பு நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கவே மாட்டேன் என்பது போன்ற சபதங்கள் நிறைவேறக் கூடியவை அல்ல. ஒன்றை மறக்க வேண்டுமென்றால்தான் அதை அதிகம் நினைப்போம். உற்சாகமான எந்தெந்த நிகழ்ச்சிகளில் புத்தாண்டில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். அவற்றை நிறைவேற்றும் போது கசப்புகள் தானாக பின்னுக்குச் சென்று விடும். துரித உணவுகளை உட்கொள்ள மாட்டேன் என்பதைவிட ஆரோக்கியமான சில குறிப்பிட்ட உணவுகளை மனதில் பட்டியலிட்டுக் கொண்டு அவற்றைத் தினமும் உட்கொள்வேன் என்பது சாத்தியமாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஓட்டம்
ஓட்டம்

ஒரே அடியாக உச்சத்துக்குச் செல்லாதீர்கள்

நம் குறிக்கோள் உயர்ந்ததாக இருப்பது நல்லதுதான். ஆனால் பத்தாண்டுகளில் எட்டக்கூடிய உயரத்தை வரும் புத்தாண்டில் ஒரேயடியாக எட்டிவிட வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டால் எப்படி? இப்போதுதான் கவிதைகள் எழுதத் தொடங்கி இருக்கிறீர்கள் என்றால் வரும் ஆண்டே அதற்கு தேசிய அங்கீகாரம் கிடைத்து விடுமா? ‘வரும் ஆண்டில் என்னுடைய சில கவிதைகள் பிரசுரமாக வேண்டும். வரும் ஆண்டில் எனக்குப் பிடித்த கவிஞர்களை சந்தித்து உரையாட வேண்டும்’ என்பதிலிருந்து தொடங்குங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றுத் தீர்மானம்

‘நிச்சயம் வரும் புத்தாண்டில் இதைச் செய்வேன்’ என்று தீர்மானிக்கும்போது ‘நான் நினைக்கும் சூழல்கள் அமையாத போது அதற்கு மாறாக இதைச் செய்வேன்’ என்று ஒரு மாற்றுச் செயலையும் தீர்மானித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நம் சபதங்கள் நிறைவேறுவது நம் கையில் மட்டும் இல்லாமல் சூழல்களும் தீர்மானிக்கலாம் (கொரோனா பலரின் வாழ்க்கைகளைப் புரட்டிப்போட்டது மறந்து விடுமா என்ன?). புத்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் உங்களுடைய முதல் தீர்மானம் நிறைவேறவில்லை என்றால் ஒன்றும் செய்யாமல் முடங்கிப் போகாமல் இரண்டாவது தீர்மானத்தை நிறைவேற்றலாம்.

2022
2022

வருங்காலம் குறித்த தெளிவு இருக்கட்டும்

அடுத்த பத்தாண்டுகளில் என்னென்ன சாதனைகள் நிகழ்த்த விருப்பம்? இதை மனதில் ஆழமாக கொண்டால் உங்கள் உள்மனம் அதை நோக்கி வேலை செய்யத் தொடங்கும். இப்படி வேலை செய்யும் போது எவற்றையெல்லாம் புத்தாண்டு சபதமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதில் மேலும் ஒரு தெளிவு கிடைக்கும்.