Published:Updated:

குற்றால அருவியும் காய்ச்சிய பாலும்!

குருவருள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருவருள்

மகா பெரியவர் அருளுரை

குற்றால அருவியும் காய்ச்சிய பாலும்!

மகா பெரியவர் அருளுரை

Published:Updated:
குருவருள்
பிரீமியம் ஸ்டோரி
News
குருவருள்

குருவருள் இருந்தால் திருவருள் கைகூடும். முழுமையான ஞானத்தை ஆனந்த அனுபவத்தைப் பெற குருவின் அனுக்கிரகம் வழிகாட்டும். அதற்கு நாம் குருவிடம் பக்தி செலுத்தவேண்டும் என்று வழிகாட்டுகிறார் காஞ்சி மகாபெரியவர். குருவின் மீதான நமது பக்தி எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? அதை அவரே விளக்குகிறார்...

குற்றால அருவியும் 
காய்ச்சிய பாலும்!

`ஞானம் எனும் சொத்தை நமக்கு அளிப்பவர் குரு. மற்ற சொத்து எதுவானாலும் அதனால் கிடைக்கும் எல்லா சுகங்களும் தற்காலிகம்தான். நித்யானந்தம் எனச் சொல்லப்படுவதான சாச்வத சுகத்தைத் தருவது, குரு அனுக்கிரஹம் செய்யும் ஞானம் ஒன்றுதான்.

இப்படிப்பட்ட உபகாரம் பண்ணும் குருவிடத்தில் ஈஸ்வரனிடம் எவ்வளவு பக்தி வைக்கிறோமோ அவ்வளவு பக்தியை வைக்கவேண்டும். இம்மாதிரி ஈஸ்வரனிடத்தில் பக்தி வைத்து, அதே அளவு குருவிடமும் பக்தி வைக்கும் சீடனுக்குத்தான் உபதேசிக்கப்படும் விஷயத்தின் உள்ளார்த்தம் அனைத்தும் முழுவதுமாக வெளிப்படுமாம்.

இப்படிப்பட்ட சீடனுக்கு தத்வார்த்தங்கள் எல்லாம் பிரகாசிக்கும் என்று (ஞானநூல்களில்) சொல்லியிருக்கிறது. `பிரகாசிக்கும்’ என்றால்...? உபதேசத்தின் சாரமாக எந்த அனுபவம் இருக்கிறதோ, அது அந்த சிஷ்யனின் இதயத்தில் பிரகாசிக்கும்.

அனுபவம் வாய்த்தால்தான் முழுமையான ஆனந்தம் வாய்க்கும்.அறிவு அனுபவத்துக்கு வராதவரையிலும் ஒன்றைப்பற்றிய ஞானம் அதன் பிரயோசனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரகசிய மாக வைத்துக்கொண்டிருக்கிறது என்றே கருதவேண்டியுள்ளது.

குற்றாலம் அருவியைப் பற்றிப் பக்கம் பக்கமாகப் படிக்கிறோம். போய்விட்டு வந்தவர்கள் அதைப்பற்றி மணிக்கணக்காக வர்ணிப்பதைக் கேட்கிறோம். ஆனாலும், அந்த அருவியில் குளித்த அனுபவ ஆனந்தம் நமக்குக் கிட்டிவிடுமா?

பால் ருசியாக இருக்கிற வஸ்து; வெல்லமும் ருசியான வஸ்து என்பது நமக்குத் தெரியும். பாலையும் வெல்லத்தையும் போட்டு நன்றாக ஸாரம் திரண்டு வரும்படி இறுகக் காய்ச்சினால் அந்தத் திரட்டுப் பால் படுருசியாகத்தான் இருந்தாக வேண்டும் என்று மூளைக்குத் தெரிகிறது. ஆனாலும் ருசியானுபவம் கிடைக்குமா? திரட்டுப் பாலின் பலனான அந்த இன்பத்தை அடைய என்ன செய்ய வேண்டும். பருகிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நிஜமான அனுபவம் உண்டாகிறது.

அனுபவம்தான் முக்கியம். ஆணி வேர். உபதேசம் மூளையோடு நிற்காமல் அனுபவமாக பழுக்கவேண்டும். அதற்கு ஈஸ்வர பக்தியும் அதற்குக் கொஞ்சம்கூடக் குறைச்சலில்லாத குருபக்தியும் மிகவும் அவசியம்!’

தொகுப்பு: நமசிவாயம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism