Published:Updated:

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் - குளிர்கால அதிசயம்!

நாமக்கல் ஆஞ்சநேயர்
News
நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் வெகு சிறப்பாகச் செய்யப்பட்டது. அப்போது, திரளாகப் பக்தர்கள் கலந்துகொண்டு, பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Published:Updated:

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் - குளிர்கால அதிசயம்!

நாமக்கல்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிக்கு இந்த ஆண்டின் முதல் வெண்ணெய் காப்பு அலங்காரம் வெகு சிறப்பாகச் செய்யப்பட்டது. அப்போது, திரளாகப் பக்தர்கள் கலந்துகொண்டு, பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர்
News
நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு அருகே அமைந்திருக்கும் இந்த ஆஞ்சநேயருக்கு, தமிழகம் முழுக்க பக்தர்கள் உள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை ஒரே கல்லினால் 18 அடி உயரத்துக்கு உருவாக்கப்பட்டது. சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆஞ்சநேயருக்கு, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இது தவிர, கட்டளை தாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், நாள்தோறும் காலையில் வடைமாலை அலங்காரம், தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். இதனையடுத்து, சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

அதேபோல், மாலையில் சுவாமிக்குத் தங்கத்தேர் உலா. பக்தர்களின் வேண்டுதல் மூலம் வெண்ணெய் காப்பு அலங்காரம், சந்தனக்காப்பு அலங்காரம், மலர் அங்கி அலங்காரம், முத்து அங்கி அலங்காரம் போன்றவை நடைபெறும்.

பங்குனி மாதத்தில் வருடாவருடம் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயருக்கு முப்பெரும் தேர்த்திருவிழா நடைபெறும். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் துவங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும்.

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அலங்காரம்
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் அலங்காரம்

அந்த வகையில், இந்த ஆண்டின் (2022) முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் கார்த்திகை மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையான 4.12.22 அன்று ஏகாதேசியை முன்னிட்டு நடைபெற்றது. 120 கிலோ வெண்ணெய்யைக் கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி, பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஆஞ்சநேயருக்கு இந்த அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்னர், திரை விலக்கப்பட்டு, சுவாமிக்குத் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து தங்கத் தேர், திருக்கோயில் உட்பிராகாரத்தில் உலா வந்தது. அப்போதும், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.