Published:Updated:

அமெரிக்கா டு தஞ்சாவூர்: 45 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு!

அமெரிக்காவிலிரூந்து மீட்கப்பட்ட சிலை
News
அமெரிக்காவிலிரூந்து மீட்கப்பட்ட சிலை

"கடந்த 9 ஆண்டுகளில் 22 சிலைகள் மட்டுமே வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளன. நிகழாண்டு, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 10 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது."

Published:Updated:

அமெரிக்கா டு தஞ்சாவூர்: 45 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு உற்சாக வரவேற்பு!

"கடந்த 9 ஆண்டுகளில் 22 சிலைகள் மட்டுமே வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளன. நிகழாண்டு, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 10 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது."

அமெரிக்காவிலிரூந்து மீட்கப்பட்ட சிலை
News
அமெரிக்காவிலிரூந்து மீட்கப்பட்ட சிலை
அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலிருந்த தமிழக கோயில்களுக்குச் சொந்தமான பழைமையான சிலைகளை, மீட்டுக் கொண்டு வந்த சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்த நிலையில், தஞ்சாவூரில் வைத்து சிலைகள் உரிய கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போது வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து ஒரே நேரத்தில் பத்து சிலைகள் மீட்டுக் கொண்டு வந்திருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் டிஜிபி ஜெயந்த் முரளி தெரிவித்தார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்கப்பட்ட சிலைகளுடன்
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மீட்கப்பட்ட சிலைகளுடன்

தஞ்சாவூர், நாகை, அரியலூர், தென்காசி மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்குச் சொந்தமான பழைமையான ஐம்பொன் சிலைகள் மற்றும் கற்சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன் காணாமல் போயின. அந்தச் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் காணாமல் போன 10 சிலைகள் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதைத் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பெரும் முயற்சிக்குப் பின் அந்தச் சிலைகளை மீட்டு முறைப்படி இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டன. மேலும் கடந்த 1-ம் தேதி புதுடெல்லியில் வைத்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

இதையடுத்து சிலைகள் டெல்லியிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. பின் அங்கிருந்து அவற்றைப் பலத்த பாதுகாப்புடன் சிலை கடத்தல் வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் நீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்தக் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிலை
கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிலை

இதனைத் தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி தலைமையில், ஐ.ஜி.தினகரன், எஸ்பி.ராஜாராமன், ஏடிஎஸ்பி மலைச்சாமி ஆகியோர் கொண்ட குழுவினர் முதற்கட்டமாக மூன்று ஐம்பொன் சிலைகளை தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள கைலாசநாதர் கோயிலுக்குக் கொண்டு சென்றனர்.

கைலாசநாதர் கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் நடராஜர் சிலை காணாமல் போய் 45 ஆண்டுகளுக்கு பின் கோயிலுக்குக் கொண்டு வரப்படும் தகவல் அறிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கோயில் முன்பு திரண்டனர். இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து மேல, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா உள்ளிட்டவர்கள் முன்னிலையில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன.

சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு
சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு

இது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கூறுகையில், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்த ஐம்பொன் நடராஜர் சிலை கடந்த 1966 - 1977-ம் ஆண்டுகளுக்குபட்ட காலகட்டத்தில் காணாமல் போனது. இந்தச் சிலை காணவில்லை எனத் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீஸார் தேடி வந்த நிலையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள ஏசியா சொசைட்டி மியூசியத்தில் சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டதட்ட 45 ஆண்டுகளுக்குப் பிறகு நடராஜர் சிலை மீட்க்கப்பட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் அம்மாபேட்டை அருகே தீபாம்பாள்புரம் வான்மீகநாதர் கோயிலிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிவன், பார்வதி ஐம்பொன் சிலை, அமெரிக்காவில் உள்ள டேவிட் ஹஸ்லி மியூசியத்திலிருந்து மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் நாகப்பட்டினம் சாயவனேஸ்வரர் கோயிலிலிருந்து 1965-ம் ஆண்டு மாயமான குழந்தை சம்பந்தர் ஐம்பொன் சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் கேலரியிலிருந்து மீட்டு, அந்தச் சிலையும் கோயில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

சிலை
சிலை

இதுகுறித்துத் தமிழகச் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஜிபி ஜெயந்த்முரளி கூறியதாவது, "கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை 22 சிலைகள் மட்டுமே வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளன. நிகழாண்டு, தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வரலாற்றில் ஒரே நேரத்தில் 10 சிலைகளை மீட்டுக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது. இதில் மூன்று சிலைகள் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவை 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டம் சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான விஷ்ணு, ஸ்ரீதேவி ஐம்பொன் சிலைகளையும் ஒப்படைக்க உள்ளோம்.

மேலும் தென்காசி முன்றீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இரண்டு துவாரபாலகர் கற்சிலைகளும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன" என்று தெரிவித்தார்.