Published:Updated:

`உன் சட்டைப் பையில் என்ன இருக்கு?'

மனிதனும் தெய்வமாகலாம் - 15பி.என்.பரசுராமன்

`உன் சட்டைப் பையில் என்ன இருக்கு?'

ருவன் அடுத்தவன் மேல் இல்லாததும் பொல்லாததும் சொல்லித் தூற்றிக் கொண்டிருப்பான். அப்போது அங்கு வரும் கலைவாணர், சட்டென்று அவனது சட்டைப் பையை தன் கைகளால் பற்றி மூடிக்கொண்டு, 'தம்பி, அவனைச் சொல்றியே... உன் சட்டைப்பையில் என்ன இருக்குது, சொல்லு பார்க்கலாம்?' என்பார். சட்டென்று நினைவுக்கு வராமல், தூற்றிய வன் அசடுவழிவான். 

''முதலில் நீ உன்னைப் பார்த்துக்கோ. உன்னைப் பத்தித் தெரிஞ்சுக்கோ. அப்புறமா அடுத்தவங்களைக் குத்தம் சொல்லலாம்' என்று முடிப்பார் கலைவாணர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையே கொஞ்சம் வேடிக்கையாகச் சொல்வார் திருமுருக கிருபானந்த வாரியார்.

'இரவு நேரத்தில் வியாபாரிகள் எல்லாம் கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குப் போவார்கள். பூட்டியவுடன் பூட்டை இருமுறை இழுத்துப் பார்ப்பார்கள். ஒரு வியாபாரி என்ன செய்தார் என்றால், தன் கடையைப் பூட்டிவிட்டுப் பக்கத்துக் கடைப் பூட்டை இழுத்துப் பார்த்தார். காவல் துறையினர் இதைப் பார்த்துவிட்டு, 'அடுத்தவங்க கடைப் பூட்டை நீ ஏன் இழுத்துப் பார்க்கிறாய்? திருட வந்தாயா?’ என்று சொல்லிச் சிறையில் அடைத்துவிட்டார்கள்.

அதுபோல, நாம் நம்மைத் தெரிந்துகொண்டு, சரிசெய்துகொள்ள வேண்டுமே தவிர, எப்போதும் அடுத்தவர்களைக் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடாது. அப்படிச் சொன்னால் துயரம் நமக்குத்தான்' என்பார் வாரியார் சுவாமிகள்.

ஆகையால், முதலில் நம்மை நாமே அறிய வேண்டும். தன்னைத் தெரியாத நிலையே அஞ்ஞானம். இந்த முதல் நிலையில் இருக்கும் நாம், அப்படியே ஒரே தாவாகத் தாவி ஏழாவது நிலையை அடையத் துடிக்கிறோம். அதாவது, தடையற்ற ஆனந்தத்தை அடைய விரும்புகி றோம். பிரச்னைகள் வராமல் என்ன செய்யும்?

இதை நமக்கு அறிவுறுத்துவதைப்போல, கைவல்லிய நவநீதத்தில், சீடன் குருநாதரிடம் கேட்கிறான். அதாவது, படிப்படியாக ஏற விரும்புகிறான். குருநாதரும் பக்குவமாகச் சொல்லத் தொடங்குகிறார். அன்னப் பிராசனம் செய்யும் குழந்தைக்கு, அன்னத்தை நன்றாகக் குழைத்து மசித்து ஊட்டுவோம் அல்லவா? அதுபோலப் பக்குவமாக, படிப்படியாக விளக்கத் தொடங்குகிறார். குழந்தைக்கு அனா, ஆவன்னா... ஏ, பி, சி, டி... இதெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டுப் பின்புதானே மேல் படிப்புகளைச் சொல்லித் தரவேண்டும்? அது போல, சீடனுடைய பக்குவம் அறிந்து படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கத் தொடங்குகிறார் குருநாதர்.

`உன் சட்டைப் பையில் என்ன இருக்கு?'

அவர் அந்தப் பத்து முட்டாள்கள் கதையை விவரித்து முடித்ததும், அவரிடம் சீடன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

தச புமான் தனைக் கண்டாற் போல்

தேசிக மூர்த்தியே என்

நிச வடிவினை யான் காண

நீர் காட்டல் வேண்டும் என்றான்    

(கைந: 57)

''குருநாதா! அந்தப் பத்தாவது ஆள் தன்னைக் கண்டதைப்போல, நானும் எனது தத்துவாதீதமான பிரம்மத்தைத் தரிசிக்கும்படியாக தாங்கள்தான் எனக்கு அருள்செய்ய வேண்டும்!' என வேண்டினான்.

அப்படி ஆர்வத்துடன் கேட்ட சீடனுக்கு குருநாதர் உபதேசிக்கத் தொடங்கினார். மிக முக்கியமான உபதேசம் அது!

தொடரும்