நல்ல குருநாதர் அமைவதும், நல்ல சீடன் அமைவதும் பற்பலப் பிறவிகளில் புண்ணியம் செய்து இருந்தாலொழிய அமையாது.

அப்படிப்பட்ட குருநாதரும் சீடனும் சேர்வதே பிரம்மானந்தத் தின் திறவு கோல். உத்தமமான குருநாதர் உபதேசித்து வழி காட்டியபடியே சீடன், அப்படியே அனுபவத்தில் கொண்டு வந்து தன்நிலை மறந்தான். விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடைந்தான்.

குருநாதரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, 'குருநாதா! தங்களுக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்ய முடியும்? தங்களின் திருவடிகளைத் துதிக்கிறேன்' என்றான்.

சிட்டன் இவ்வாறு சொல்லத்

தேசிகர் மகிழ்ந்து நோக்கிக்

கிட்ட வா என இருத்திக்

கிருபையோடு அருளிச் செய்வார்

துட்டமாம் தடைகள் மூன்றும்

தொடராமல் சொரூப ஞான

நிட்டனாய் இருப்பாய் ஆகில்

நீ செய்யும் உதவி ஆமே. (கைவல்லிய நவநீதம் 80)

சீடன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதும் குருநாதர் மகிழ்ச்சியோடு அவனைப் பார்த்து, 'என் அருகில் வா!' என அழைத்து, 'மூன்று விதமான தடைகள் தொடராமல், நீ சொரூப ஞான நிலையிலேயே இருந்தால், அதுவே நீ எனக்குச் செய்யும் பேருதவியாகும்' என்று கருணையோடு சொன்னார்.

அவர் சொன்னதைப் பொறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்த சீடன், 'குருநாதா! அனுபவ பூர்வமாக அனைத்தையும் நா(தா)னாகவே கண்ட அந்த அத்வைத ஞானம், 'தடைகளினால் நழுவிப் போய் விடுமா?' எனக் கேட்டான்.

சீடன் பக்குவப் பட்டவன், அனுபவசாலி என்பது இங்கே புலனாகிறது.

மூன்று விதமான தடைகள் என குரு நாதர் சொன்னவுடன், 'அந்தத் தடைகள் என்னென்ன?' என்று கேட்காமல், 'அனுபவம் ஆன பிரம்ம ஞானம் நழுவிப் போகுமோ?' எனக் கேட்டதன் மூலம், அச்சீடனின் ஆர்வமும் ஆதங்கமும் வெளியாகின்றன.குருநாதரும் அவன் கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொன்னார்.

'குருநாதருடைய உபதேசத்தினாலும், வேதாந்த சாஸ்திரங்களாலும் பிரம்ம பாவம் உண்டானாலும், தடைகள் ஏற்பட்டால் அந்தப் பிரம்ம அனுபவம் நிலையாக இருக்காது' என்றார். அடுத்ததாக, சீடன் கேட்காமலேயே அந்தத் தடைகள் மூன்றைப் பற்றியும் விவரித்தார்.

அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம் என்பவையே அத்தடைகள்.

தடைகள் ஏதெனில் அஞ்ஞானம்

சந்தேகம் விபரீதங்கள்

படர் செயும் இந்த மூன்றும்

பல சன்மப் பழக்கத்தாலே

உடனுடன் வரும் வந்தக்கால்

உயர் ஞானம் கெடும் இவற்றைத்

திடமுடன் கெடுப்பாய் கேட்டல்

சிந்தித்தல் தெளிதலாலே (கைவல்லிய நவநீதம் 82)

இந்தப் பாடல் ஒன்று போதுமே! தெய்வ நிலையை உணர்ந்து, பிறகு அனுபவத்தில் கொண்டு வந்து, தெய்வ நிலையை அடைகி றோமோ இல்லையோ, மனிதனாகப் பிறந்த நாம் மனிதனாகவே வாழ்வதற்காகவாவது நினைக்க வேண்டும். அப்படி நினைப்பவர்களுக்கு 'கைவல்லிய நவநீதம்’ குரு. குரு உபதேசம் இப் பாடல். முதலில், லௌகிகமாக (உலக இயலை ஒட்டி) இப்பாடலைப் பார்க்கலாம்...

ஏதாவது தவறான செயல்களில் ஈடுபடும் போது தடைகள் வரும். ஆனால் அவற்றை அடைய வேண்டிய முயற்சியில் தெளிவாக சந்தேகப் படாமல், விபரீதங்களையும் தாண்டி ஈடுபடுவோம். அதே சமயம், நற்செயல்களில் ஈடுபடும்போது தடைகள் குறுக்கிட்டால், '’என்னவோ தெரியல, இதுல தெரியாத் தனமா எறங்கிட்டேன். இது, நல்லபடியா நடக்குமான்னு சந்தேகமா இருக்கு. விபரீதமா கூட, புத்தியில தோனுது' என்று சொல்லி, தொடங்கிய நற்செயலை அப்படியே விட்டு விடுவோம்.

கைவல்லிய நவநீதம் இப்பாடலில் சொல்லும் அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம் எனும் மூன்றும் குறுக்கிட்டாலும், கெட்டதைச் செய்து முடித்து விடுவோம்; செய்யத் தொடங்கிய நல்லதையோ, தொடக்க நிலையிலேயே, சன்னியாசம் கொடுத்து விடுவோம்.

இதற்கெல்லாம் காரணம்? அதையும் இப்பாடல் சொல்கிறது.

பலப்பலப் பிறவிகளில் தொடர்ந்த, பழக்கத்தா லேயே இப்படி நடக்கிறது. அத்தடைகளைத் தாண்டி நன்னிலை பெற வேண்டுமென்றால்...

நல்லவைகளையே கேட்பது;

நல்லவைகளையே சிந்திப்பது;

நல்லவைகளையே தெளிவுபெற்றுச் செயல்படுத்துவது;

என இருக்க வேண்டும். இதை விட்டால், மானுடம் அமைதியாக வாழ, ஆனந்தமாக வாழ வேறு வழியே கிடையாது.

இனி இப்பாடலுக்கு நூல் முறைப்படியே வேதாந்த பரமாகவே விளக்கம் பார்க்கலாம்.

அனுபவம் ஆன பிரம்ம ஞானம் நழுவிப் போகுமா? எனச் சீடன் கேட்க, குருநாதர் மூன்று தடைகளைச் சொன்னார். அந்தத் தடைகள் அஞ்ஞானம், சந்தேகம், விபரீதம் என்பவையே ஆகும்.

பிரம்ம பாவனையை மறைத்து, நான் பிரம்மம் அல்ல எனப் பேதம் காட்டுவது; அதாவது பிரம்மத்தைப் பற்றி அறியாமல் இருப்பது (அறியாமை) அஞ்ஞானம்.

குருநாதர் உபதேசித்த 'நீ பிரம்மம் என்ற’ ஞான உபதேசத்தை நம்பாமல், 'நான் பிரம்மமா? இல்லையா?’ என குழம்புவது சந்தேகம்.

நிலையில்லாதவற்றை நிலையானவை யென்றும் உடம்பே நான் என்றும் உள்ளத்தில் பரவிய மோகமே விபரீதம். அதாவது, நான் பிரம்மம் தான் என்பது புரிந்த பின்னும், நீண்ட காலமாக, பலப்பலப் பிறவிகளில் இருந்து வந்த வாசனையான உடம்பின் மீது இருந்து அந்த அபிமானம் நீங்காமல் இருப்பது, உடம்பே நான் என்று இருப்பது விபரீதம்.

பிரம்ம பாவனையை மூடிப்

பேதம் காட்டுவது அஞ்ஞானம்

குரவன் வாக்கியம் நம்பாமல்

குழம்பின மனம் சந்தேகம்

திரம் அறு சகம் மெய் என்றும்

தேகம் நான் என்றும் உள்ளே

விரவிய மோகம் தானே

விபரீதம் என்பர் மேலோர் (கைவல்லிய நவநீதம் 84)

அருமையான விளக்கத்தைத் தெளிவாகச் சொல்லி விட்டு, குருநாதர் என்ன சொல்கிறார் பாருங்கள்!

'என்பர் மேலோர்’ என்கிறார் குரு. இவர், தானே சொல்வதாகச் சொல்லியிருந்தாலும் சீடன் ஏற்றுக் கொள்ளத் தான் செய்வான்; மறுக்கப் போவதில்லை.

ஆனால் குருநாதரோ, அவ்வா றெல்லாம் மகான்கள் சொல்வார்கள்’ என்கிறார். அதாவது, அறிவிலும் ஞானத்திலும் அனுபவத்திலும் உயர்ந்தவர்கள் சொல்வார்கள் என்பது பொருள். எவ்வளவு உத்தமமான குரு!

இவ்வாறு மூன்று தடைகளை விவரித்த குரு, அத்தடைகளைத் தாண்டும் வழிமுறைகளையும் சொல்லத் தொடங்கினார்.

- தொடரும்