Published:Updated:

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

யூ த்ஃபுல்... யூஸ்ஃபுல்!சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

ஏ... இளைஞனே! ஏன் சோர்ந்து படுத்திருக்கிறாய்? துள்ளி எழு! ஓடு! குதி! நீந்து! இந்தியாவின் எதிர்காலம் உன் கையில்! இந்தியாவை வல்லரசாக்குவது உன் பொறுப்பு! 'நூறு துடிப்பான இளைஞர்களை என்னிடம் கொடுங்கள்; இந்த உலகத்தை மாற்றிக் காட்டுகிறேன்’ என்றாரே சுவாமி விவேகானந்தர்; அந்த நூறு பேர் பட்டியலில் உன் பெயரும் இருக்கிறதா? 'கனவு காணுங்கள்’ என்றாரே மக்கள் நாயகன் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்; நீ என்ன கனவு கண்டாய்? நேற்று நடந்த துயரங்களை அசை போட்டுக் கவலை கொள்கிறாய்; நாளை என்ன நடக்குமோ என்று கவலைப்பட்டுத் துயரம் அடைகிறாய்! நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கும் இன்றை கோட்டை விடுகிறாயே! தளராதே! துவளாதே! நிமிர்ந்து நில்; நேர்படப் பேசுஞ் என்ன பிரதர்ஞ் இதை இப்படியே மூடி வெச்சுட்டு பேசாம 'டைம்பாஸ்’ படிக்கப் போயிரலாம்னு தோணுதா?

பயப்படாதீங்க சகோ! உங்களுக்கு அட்வைஸ் பண்ண நான் இங்க வரல. அட்வைஸ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் 'சித்தப்பா’வும் இல்ல! உங்கள்ல ஒருத்தன். உங்களுக்கு இருக்கிற அதே பிரச்னைங்கதான் என் மண்டையையும் பிறாண்டிக்கிட்டு இருக்கு. அதனால, நம்ம அனுபவங்களை ஷேர் பண்ணிக்கிட்டு, அதன்மூலம் ஏதாச்சும் தீர்வு கிடைக்குமான்னு தேடற ஒரு முயற்சிதான் இது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

நம்ம எல்லாருக்கும் அடுத்தவங்க எப்படி நடந்துக்கணும், எப்படிப் பழகணும், எப்படி வாழணும்னு வக்கணையா யோசனை சொல்லத் தெரியுது. ஆனா, நாம எப்படி வாழணும்கிறதுதான் நமக்குப் புரியாத புதிரா இருக்கு. அந்தப் புதிருக்கு விடை காணும் முயற்சின்னும் இதைச் சொல்லலாம்.

சரி, எந்தப் புதிருக்கு நமக்கு உடனடியா விடை தெரிஞ்சாகணும்?

சந்தோஷம்... மகிழ்ச்சிஞ் ஆனந்தம்ஞ் நிம்மதி

எல்லாம் ஒரே அர்த்தம் தானேங்கறீங்களா? அதான் இல்லை. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கு! சரி, அதை விடுங்க; அது பத்தி இங்கே பேச ஆரம்பிச்சா, சப்ஜெக்ட் திசை மாறிப் போயிடும். அதனால, சந்தோஷமும் நிம்மதியுமா இருக்கணும்; அதுதான் இப்ப நம்மோட டாப்பிக்கல் பிரச்னைன்னு வெச்சுக்கிட்டு, மேலே தொடரலாம்.

எப்பெல்லாம் நம்ம சந்தோஷம் காணாம போகுது, எப்பெல்லாம் நாம மூஞ்சியை உம்முனு வெச்சிட்டிருக்கோம்னு நீங்க எப்பவாச்சும் யோசிச்சதுண்டா?

பாருங்க, என்னையும் அறியாம 'காணாம போகுது’ன்னு வார்த்தை வருது. அதாவது, சந்தோஷம் கிறது புதுசா வெளியிலேர்ந்து வரலை; அது எப்பவும் நம்மகிட்டயேதான் இருக்கு; நாமதான் அடிக்கடி அதைத் தொலைச்சுட்டுப் படாத பாடு படறோம்! கரெக்டா?

சந்தேகமே வேணாம். ஹண்ட்ரட் பர்சென்ட் கரெக்ட்! எங்கேயும் எப்போதும் நிறைஞ்சிருக்கிறது வெளிச்சம் தான்; வெளிச்சம் விழாம தடுக்கப்பட்ட பகுதிதான் இருட்டுன்னு சயின்ஸ் சொல்லுது. இருக்கிற ஒண்ணைத்தான் நம்மளால கூட்டவோ, குறைக்கவோ, ஒரேயடியா இல்லாம பண்ணவோ முடியும். குறைஞ்ச வெளிச்சம், அதிக வெளிச்சம், பளீரிடும் பிரகாசமான வெளிச்சம்னெல்லாம் உண்டு. ஆனா, இருட்டுன்னா ஒரே இருட்டுதான். அதைக் கூட்டவோ குறைக்கவோ முடியாது! அது மாதிரிதான் சந்தோஷமும் துக்கமும்!

வெளிச்சத்தைத் தடுக்கிற பொருள் மாதிரி, உங்க சந்தோஷத்தைத் தடுக்கிற சங்கதிகளை லிஸ்ட் போடச் சொன்னா, இயலாமை, பயம், ஏமாற்றம், கவலை, துரோகம்னு சொல்லிட்டே போவீங்க, இல்லியா? ஆனா, என் லிஸ்ட்ல ஒண்ணே ஒண்ணுதாங்க இருக்கு. அது மனசு!

கொஞ்ச நாள் முன்னாடி, ரோட்டோரமா இருந்த ஒரு டீக்கடைல நாயரை ஒரு இஞ்சி டீ போடச் சொல்லிட்டுக் காத்திட்டிருந்தேன். அப்ப ஒருத்தரு தன் கையில இருந்த கிளாஸ் டீயில ஒரு பன்னு துண்டை நனைச்சு, சாப்பிடலாம்னு எடுத்தாரு. டீயில நனைஞ்ச பாகம் சொதசொதத்து டீக்குள்ளேயே விழுந்துடுச்சு. அவர் மூஞ்சியைப் பார்க்கணுமே! யாரும் இதைக் கவனிச்சாங்களான்னு சுத்துமுத்தும் பார்த்துட்டு, இன்னொரு பன் துண்டை டீயில நனைச்சு எடுத்தாரு. அவர் வாய் கிட்டே போறதுக்குள்ளே அதுவும் சொத்துனு கீழே விழுந்துடுச்சு. அவ்வளவுதான்ஞ் மனுஷன் டென்ஷனாயிட்டாரு. 'சட்ஞ் என்ன டீ, என்ன பன்னு இது!'ன்னு கையில் மிச்சமிருந்த பன்னை விட்டெறிஞ்சாரு. டீயைத் தரையில ஊத்தினாரு. கிளாஸையும் டீக்குண்டான காசையும் வெச்சுட்டு, பைக்கை எடுத்துட்டுப் போயே போயிட்டாரு. எது எதுக்குத்தான் டென்ஷன் ஆகுறதுன்னு விவஸ்தையே இல்லியா?

'தீப்பெட்டி கேட்டுத் தராததால போட்டுத் தள்ளிட்டான்’னு ஒரு நியூஸை கொஞ்ச நாள் முன்னாடி பேப்பர்ல பார்த்தேன். எங்கேங்க போயிட்டிருக்கோம் நாம?

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும். அவர் ஒருமுறை தன் நண்பர்களோடு கார்ல போயிட்டிருந்தப்போ ஹைவேஸ்ல ஆக்ஸிடென்ட் ஆகி, கார் உருண்டு புரண்டு, ஒரு மரத்துல மோதி நின்னுடுச்சு. நல்லவேளையா யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லே. கொஞ்ச நேரத்துல அந்தப் பக்கமா போனவங்க, என்னவோ ஏதோனு பதறி ஓடி வந்து விசாரிச்சாங்க. என்.எஸ்.கே. அலட்டிக்கவே இல்லையே! 'அதுவாஞ் ரொம்ப தூரம் பிரயாணம் செஞ்சதுல எல்லாருக்கும் களைப்பா இருந்துச்சாஞ் அதான், வண்டியை அப்படிப் புளியமரத்துல சாத்தி வெச்சுப்புட்டு ரெஸ்ட் எடுத்துட்டிருக்கோம்!''னு நிதானமா பதில் சொன்னாராம். அதான் கலைவாணர்!

நம்மளால கலைவாணர் மாதிரி அவ்வளவு பெரிய விஷயத்தை டேக் இட் ஈஸியா எடுத்துக்க முடியலேன்னாலும் பரவாயில்லை; அட்லீஸ்ட், அந்த 'பைக்’காரர் மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் மெர்சல் ஆகாம இருக்கலாமில்லையா?

 - இன்னும் பேசலாம்...

சந்தோஷம்கிறது புதுசா வெளியிலேர்ந்து வரலை; அது எப்பவும் நம்ம கிட்டயேதான் இருக்கு; நாமதான் அடிக்கடி அதைத் தொலைச்சுட்டுப் படாத பாடு படறோம்! கரெக்டா?

495

6174

இங்கே கொடுக்கப்பட்டுள்ள மூன்று இலக்க எண்ணுக்கும், நான்கு இலக்க எண்ணுக்கும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு. தெரிந்தவர்கள்

04466802923 என்ற எண்ணுக்கு டயல் செய்து, 'ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு’ என்று சொல்லிவிட்டு, உங்கள் பதிலைப் பதிவு செய்யவும். பரிசு பெறும் வாய்ப்பு உண்டு!

இளைஞர்களுக்கு எழுத்தாளர் சுஜாதா சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே

1) ஏதாவது ஒன்றின்மேல் தீவிர நம்பிக்கை வையுங்கள்; கடவுள், இயற்கை, உழைப்பு இப்படி

ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு!

ஏதாவது. நம்பிக்கை என்றால், கேள்வி கேட்காத நம்பிக்கை.

2) அப்பா, அம்மா சொல்லும் வேலையைச் செய்யக் கடுப்பாகத்தான் இருக்கும். இருந்தாலும், ஒரு மாறுதலுக்கு, ஒரு நாளைக்குத் தட்டாமல் செய்துதான் பாருங்களேன். ரொம்பச் சின்ன வேலையாகத்தான் இருக்கும், ரேஷன் கடைக்குப் போவது, பொடி நடையாகக் கடைக்குப் போய் காபி பொடி வாங்கி வருவது இப்படி.

3) பொது விஷயம் ஏதாவது நான்கு பக்கம் படியுங்கள். காதல் கதை, சினிமா கதை எதுவும் இல்லாமல், யோக்கியமான செய்தித்தாள், சமூக அக்கறை கொண்ட கட்டுரை இப்படி ஏதாவது.

4) காலையில் எழுந்து தேகப் பயிற்சி செய்யவும். சுறுசுறுப்பாக வாக்கிங், ஜாகிங் போகவும். எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடி, நெற்றி வியர்வை அரும்பினால் உத்தமம்.  

5) இரவு படுக்கப் போகும் முன் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என யாருடனாவது ஒரு பத்து நிமிஷம் மனம் விட்டுப் பேசவும். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்!