வாழ்க்கைப் பாதையில் சக பயணிகள் அநேகம்பேரைச் சந்திக்கிறோம். எவரோடு பழகுவது, எவரோடு பழகக்கூடாது என்பது பற்றிய பகுத்தறிவு மிக முக்கியம்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும் என்று பாடிய வள்ளலார்,

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும் என்றும் பாடியுள்ளார்.

உலகில் எல்லோரையும் நேசிக்க வேண்டும்; எவரையும் வெறுக்கக் கூடாது என்பவையெல்லாம் பொதுவான விதிகள்.இவற்றை வலியுறுத்தும் அறநூல்களும், பெரியோர்களும் உலகில் எவ்வாறு வாழ வேண்டும், எவருடன் பழக வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.

தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, வாழ்நாளை வீணாக்குவதற்காக நமக்கு மனிதப் பிறவி கொடுக்கப்படவில்லை. மனிதப் பிறவியின் மாண்பை உணர்ந்துகொள்ள வேண்டும்.

அறத்தைக் கடைப்பிடித்து, மெய்யறிவைப் பெற்று, பேரின்பத்தை உணர்ந்து, பிறவித் தளையிலிருந்து விடுபடுவதே மனித உடலில் வாழ்கின்ற உயிரின் குறிக்கோள். இந்தக் குறிக்கோளுக்கு உதவுகின்ற சூழ்நிலை, நட்பு, சுற்றம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்வது மிக முக்கியம். அன்னப்பறவை நீரை விட்டுவிட்டு, பாலை மட்டும் அருந்துவதைப் போல், நம்முடன் பழகுபவர்களுடைய தீய பண்புகளை விடுத்து, நற்பண்புகளை மட்டும் தேடிப் பிடித்து ஏற்றுக்கொள்வது மிகக் கடினமானது.

வாழ்க்கையின் குறிக்கோளைத் தெளிவாக அறிந்து கொண்டு, அதனை அடைவதற்கு உரிய வழிமுறையையும் தெளிவாக அறிந்து கொள்பவர்கள், யாருடன் பழகுகிறோம் என்பதில் மிக எச்சரிக்கையாக இருப்பார்கள். எவரையும் வெறுப்பதில்லை எனினும், நட்பைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.

பொதுவாக, இனிக்க இனிக்க பேசுபவர் களின் நட்பு எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால், அவர்களது உட்கிடக்கை என்ன என்பதை உணர்ந்துகொள்ளும் முதிர்ச்சி பலருக்கு இருப்பதில்லை. வார்த்தை ஜாலங் களில் பலர் மயங்கிப் போய்விடுகிறார்கள்.

திருவள்ளுவர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவரின் நட்பை கூடாநட்பு என்று வகைப்படுத்தியிருக்கிறார். மரங்கள் பட்டையை உதிர்ப்பதுபோல, சரியான நேரத்தில் அத்தகைய நட்பை விட்டுவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. (திருக்குறள்: 821)என்கிறார் திருவள்ளுவர்.

அது மட்டுமல்ல, உள்ளத்தில் வஞ்சகம் வைத்து, வெளியே இனிய சொற்களைப் பேசுபவரோடு பழக அஞ்சுதல் வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர்.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா

வஞ்சரை அஞ்சப் படும். (திருக்குறள்: 824)

முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி, அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புகொள்ள அஞ்ச வேண்டும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுதல் என்பது ஓர் உயர்ந்த பண்பு. பலர், வெறுமனே வார்த்தைகளை வாரி இறைப்பர். அத்தகைய சொற்களை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்றும் திருவள்ளுவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்

சொல்லினால் தேறற்பாற்று அன்று. (திருக்குறள்: 825)

மனத்தால் தம்மோடு பொருந்தாமல் பழகுபவரை, அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக் கூடாது.

பயணிப்போம்