"பேருந்து நிலையத்தில், பேருந்தின் அருகில் நடத்துநர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர், ''ஏங்க கண்டக்டரு! இந்த பஸ்ஸ எப்ப எடுப்பீங்க?'' என்று சீண்டினார்.

'சொந்தக்காரங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டாச்சு. அவங் கள்லாம் வந்தா உடனே எடுத்துற வேண்டியதுதான்'' என்றார் கண்டக்டர். கேள்வியையும் அதற்கு உண்டான பதிலையும் பார்த்தீர்கள் அல்லவா? கேள்வி கேட்பதும் அதற்கு பதில் சொல்வதும் சாதாரணமானது அல்ல!

முன்னோர் நமக்காக உருவாக்கி வைத்திருக்கும் ஞான நூல்கள் பலவும், கேள்விபதில்; வினாவிடை வடிவிலேயே அமைந்துள்ளன. உதாரணம்... யட்ச ப்ரச்னம், ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா, பகவத் கீதை மற்றும் பல. திருக்குறளிலேயே பாதிக்குப் பாதி வினாவிடை வடிவில்தான் அமைந்துள்ளது. கேள்வி கேட்டு விளக்கம் பெற்றாலொழிய, மனித வாழ்வு முன்னேற்றம் அடைய முடியாது. லௌகிக வாழ்வுக்கே இப்படியென்றால், பிரம்ம நிலையை அடைய விரும்பும் ஒருவன் என்னென்ன கேள்விகள் கேட்பான்?!

அப்படியாக சீடன் ஒருவன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் குருநாதர் பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கும் ஓர் அற்புதமான நூல்தான் கைவல்லிய நவநீதம்.

ஜீவன் முக்தர்களின் நிலையை குருநாதர் சொல்லிக்கொண்டு வருகிறார். அப்போது சீடன், ''குருநாதா! ஜீவன் முக்தர்கள், எப்போதும் சமாதி நிலையில் இருப்பவர்கள் என்று சொன்னீர்கள். என்னதான் ஜீவன் முக்தர்கள் சமாதி நிலையில் இருப்பவர்கள் என்று சொன்னாலும், அவர்களுக்கும் உடம்பு என்ற ஒன்று இருக்கிறது. அவர்களும் இந்த உலகில் நடமாடியாக வேண்டும்; வாழ்ந்தாக வேண்டும் அல்லவா? அவ்வாறு அவர்கள் செயல்படும்போது, அவர்களால் நல்லதுகெட்டது அறியாமல் இருக்க முடியாது. அப்போது, மனம் சஞ்சலம் அடையாதா? அப்படி சஞ்சலம் உண்டானால், அவர்களின் ஞான நிலை நழுவிப் போகுமே?'' என்று கேட்டான்.

விவகார வேளை எல்லாம்

சமாதி என்றால்

விகற்பம் அன்றோ மனம் அலைந்துவிடாதோ

அவதானம் நழுவும் அன்றோ என்றாயாகில்

அதற்கு ஒரு திட்டாந்தம் கேள்

(சந்தேகம் தெளிதல் படலம் - 22)

''ஜீவன் முக்தர்கள் சமாதி நிலையில் இருப்பார்கள். என்னதான் செய்தாலும் அது அவர்களைப் பாதிக்காது. அதேநேரம், அவர்கள் எல்லாம் உலக விவகாரங்களில் ஈடுபடுவது போலத் தோன்றினாலும், அவர்கள் மனம் எந்நேரமும் பிரம்மத்திலேயே நிலைபெற்றிருக்கும்'' என்று பதில் சொன்ன குருநாதர், அதற்கு ஓர் உதாரணமும் கூறினார்.

நாம் அந்த உதாரணத்துக்கு பதிலாக, ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதையின் மூலம் அதே தகவலைப் பார்க்கலாம்.

பெண்மணி ஒருத்தி பால், தயிர், வெண்ணெய், நெய் விற்றுக்கொண்டு இருந்தாள். அவரவர் கேட்பதை அளந்து கொடுப்பதும், அவர்களிடம் இருந்து பணம் பெறுவதும், மீதி சில்லறை கொடுப்பதுமாக... மும்முரமாகவும் சுறுசுறுப்பாகவும் அவள் செயல்பட்டுக் கொண்டிருந்தாள்.

அப்படி அவள் என்னதான் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருந்தாலும், அவளின் மனம் முழுவதும் அவளுடைய முதுகில் (தூளி போல) ஏணையில் இருந்த குழந்தையின் மீதே இருந்தது.

இவ்வளவு வியாபாரப் பிரச்னைகளின் நடுவிலும் அந்தப் பெண்மணி, தன் குழந்தையை

மறக்கவில்லை. அது போன்று, ஜீவன்முக்தர்கள் சமாதி நிலையில் இருப்பவர்கள், லெளகீக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் மனம் பிரம்மத்திடமே நிலை பெற்றிருக்கும்; ஒருபோதும் நழுவாது.

இப்படி, ஜீவன்முக்தர்களின் நிலையை சொல்லும் கைவல்லிய நவநீதம், அடுத்ததாக அவர்களை மாகர்த்தன், மாபோகி, மாத்தியாகி என்று மூன்று வகையினராகப் பிரித்து விவரிப்பதோடு, அவர்களது இயல்புகளையும் துல்லியமாக விளக்குகிறது.

முறையே... இந்த உலகில் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருப்பவராகவும், நாவின் ருசியை வென்றவரா கவும், குணங்களில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பளிங்கு போன்று தெளிவுடன் திகழ்பவராகவும் திகழும் அந்த மூவகையினரையும் குறித்து அடுத்த இதழில் காண்போம்.

- தொடரும்