Published:Updated:

மனிதனும் தெய்வமாகலாம்! - 32

தவம் இரண்டு வகை!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

மனிதனும் தெய்வமாகலாம்! - 32

தவம் இரண்டு வகை!பி.என்.பரசுராமன், ஓவியம்: வந்தியன்

Published:Updated:

வ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் முயன்றுகொண்டிருக்கிறோம். அதற்கு ஓா் உதாரணத்தைப் பார்ப்போம். 

சகல வசதிகளுடன் கூடிய ஒரு செல்போன் வாங்க நினைக்கிறோம். நல்ல கடையில் போய் வாங்க வேண்டும். இல்லையெனில், ஏதாவது ஆகாதது போகாததை தலையில் கட்டி விடுவார்கள். கிரெடிட் கார்டில் வாங்குவதாக இருந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சர்வீஸ் டாக்ஸ் போட்டுத் தாளித்துவிடுவார்கள். செல்போனை வாங்குவதற்கு முன்னதாக, நன்கு சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். 

சரி, இப்படியெல்லாம் சிந்தித்துச் செயல்பட்டு, ஒருவழியாக செல்போனை வாங்கிவிடுகிறோம். நினைத்ததைச் சாதித்து விட்டோம் என்று இனி நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க முடிகிறதா? அதைவிடவும் அதிக வசதிகள் கொண்ட ஒரு போன் மார்க்கெட்டுக்கு வந்துவிடுகிறது. உடனே நம் மனம் சோர்வடைந்துவிடுகிறது. ஒரு சாதாரண செல்போனுக்கே இவ்வளவு ஆராய்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

களும் செயல்பாடுகளும் தேவை எனில், முக்தி நிலையை அடைவதற்கும் பிரம்ம நிஷ்டர் களின் நிலையை அடைவதற்கும் எவ்வளவு ஆராய்ச்சிகள், செயல்பாடுகள் தேவைப்படும்?

அந்த ஆராய்ச்சிகளையும் செயல்பாடுகளையும் தான் குருநாதா் விவரித்துக்கொண்டு வருகிறார். பொறுப்புள்ள சீடன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு வருகிறான். அவ்வப்போது தன் சந்தேகங்களையும் கேட்கிறான். குருநாதா் தெளிவாகவும் அழுத்தமாகவும் அவற்றுக்குப் பதில் சொல்லிக்கொண்டு வருகிறார்.

மனிதனும் தெய்வமாகலாம்! - 32

'அவருக்கென்ன?அவா்பாட்டுக்குச் சொல்லிவிட்டுப் போய்விடுவார். காரியத்தில் இறங்குபவா்களுக்கு அல்லவா கஷ்டம் தொியும்! பிரம்ம நிஷ்டா்களின் நிலையை நாமெல்லாம் அடைய முடியுமா என்ன?' என்ற எண்ணம் நமக்கு எழலாம். இதற்கு வள்ளுவா் பதில் சொல்கிறார்...

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும்.

எதை வேண்டுமானாலும் அடையலாம்; வேண்டியபடியே அடையலாம்; இங்கேயே அடையலாம்; அதற்கு வேண்டியது தவம். அதாவது, தீவிரமான முயற்சி. அதை இங்கேயே, இப்போதே செய்ய வேண்டும் என்பது கருத்து. இந்தத் தவத்திலும் இரண்டு வகைகளைச் சொல்கிறது கைவல்லிய நவநீதம்.

காமியத்தவங் காமியமொன்றையுங் கருதிடாத்தவ மென்றும்

பூமியிற்றவ மிருவகைசித்தியும் போதமுந்தரு மைந்தா

ஆமிவற்றி லொன்றியற்றினா லொன்றையே

யடைகுவ ரிதுதீர்வை

யாமுரைத்த வவ்விரண்டையு மியற்றினா ரன்றுள பெரியாரே                        

(சந்தேகம் தெளிதல் படலம் - 45)

தவம் என்பது காமியத்தவம், நிஷ்காமியத்தவம் என இருவகைப்படும். எதையாவது விரும்பிச் செய்வது காமியத்தவம். புத்திர காமேஷ்டி யாகம், சத்ரு சம்ஹார யாகம் முதலானவை இதில் அடங்கும். இரண்டாவது, நிஷ்காமியத்தவம். இது கடினமானது. எந்த ஒன்றையும் வேண்டி நினைக்காத தவம் இது. அதாவது, தெய்வ சிந்தனை மட்டும் இருக்குமே தவிர, வேறெந்த விருப்பமோ, வேண்டுதலோ இருக்காது.

ஓர் அரசருக்கு ஒரு மகள் இருந்தாள். ஒருநாள், அரசா் தன் அவையில் இருந்த இரண்டு அறிஞா்களிடம், ”உங்கள் இருவருக்கும் எது வேண்டுமோ, கேளுங்கள்... தருகிறேன்!' என்றார். ஒருவா், ஏராளமான செல்வத்தைக் கேட்டுப் பெற்றுக்கொண்டு சென்றார். மற்றொருவரோ, 'மன்னா! தாங்கள் தங்கள் மகளோடு வாராவாரம் என் இல்லத்துக்கு வந்து, ஒரு கைப்பிடி அளவா வது உணவு உண்டுவிட்டுச் செல்ல வேண்டும்' என வேண்டினார். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தார்கள். ’பைத்தியக்காரன்! ராஜாவிடம் என்னத்தைக் கேட்கிறான், பாா்!' என்று பரிகசித்தார்கள். அரசரும் புன்முறுவல் பூத்தார்.

தான் வாக்களித்தபடியே, தன் மகளுடன் வாராவாரம் அந்த அறிஞரின் இல்லத்துக்குப் போய் உணவு உண்டு வந்தார் அரசர். நாளா வட்டத்தில், இளவரசி அந்த அறிஞரை விரும்பத் தொடங்கினாள். விவரம் அறிந்த அரசா், தன் மகளை மணக்க பூரண தகுதி அந்த

அறிஞருக்கு உள்ளது என்று உணர்ந்து, அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தார் இளவரசியை மணந்த அறிஞா் அந்நாட்டுக்கே அரசராகி விட்டார்.

சரி, அரசரிடம் பரிசு பெற்ற இருவரில் யார் புத்திசாலி? எது வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்த அரசரிடம் செல்வத்தைப் பெற்றவா் புத்திசாலியா? அரசரையே தன் வீட்டுக்கு வரவழைத்து, அந்நாட்டுக்கே அதிபதியானவா் புத்திசாலியா?

மனிதனும் தெய்வமாகலாம்! - 32

இந்த இருவரில், செல்வத்தைக் கேட்டுப் பெற்றவா், காமியத்தவம் செய்தவா்; அரசரையே தன் வீட்டுக்கு வரவழைத்தவா், நிஷ்காமியத்தவம் செய்தவா்.

அதுபோல... அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டி, இறைவனை நோக்கித் தவம் செய்வது காமியத்தவம்; வேறு ஒன்றையும் வேண்டாமல், இறைவனையே வேண்டித் தவம் செய்வது, நிஷ்காமியத்தவம்.

காமியத்தவம், நம் விருப்பத்தை நிறைவேற்றி னாலும் பிரச்னைகளையும் கூடவே அழைத்து வரும். நிஷ்காமியத்தவம் நாமாக எதையும் விரும்பாவிட்டாலும், நமக்கு வேண்டிய அனைத்தையும் அருளும் ஆண்டவனையே நம்மிடம் சோ்க்கும். வில்லங்கங்கள் நெருங்காது.

இந்த இருவிதமான தவத்தையும், முற்காலத்து முனிவா்களெல்லாம் செய்தார்கள். இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்த குருநாதா், இதையே இன்னும் அழுத்தமாகச் சொல்கிறார், அடுத்த பாடலில்.

அனக மைந்தனே! முக்தி ஞானத்

தையே அடைந்தனர் அல்லாமல்

ஜனகன் மாபலி பகீரதன்

முதலினோர் சித்திகள் படித்தாரா

இனிய சித்தியை விரும்பினார்

சிலர் சிலர் இரண்டையும் முயன்றார்அம்  

முனிவர் சித்திகள் வினோத மாத்

திரந்தரும் முத்தியைத் தாராவே

   (சந்தேகம் தெளிதல் படலம் - 46)

காலியான பாத்திரத்தில்தான் எதையாவது போட முடியும். அதுபோல, மனதில் எதையா வது நினைத்துக்கொண்டே இருந்தால், தெய்வமே வந்து எவ்வளவுதான் உயா்ந்ததான தத்துவங் களைச் சொன்னாலும் எடுபடாது. அதை நமக்கு உணா்த்தும் விதமாகவே, 'எந்த விதமான பாவங்களும் இல்லாத (அனக)மைந்தனே!' என்று சீடனை அழைக்கிறார் குருநாதா்.

தூய்மையான வெள்ளைத் துணியில் தெய்வப் படங்களை வரைவதைப்போல, தூய்மையான சிந்தைகொண்ட சீடனின் மனத்தில் ஞான விதைகளை விதைக்கிறார் குருநாதா். மேலும், இப்பாடலில் ஜனகர், மகாபலி, பகீரதன் ஆகியோ ரைப் பற்றியும் கூறுகிறார். அது ஏன்?

 - தொடரும்      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism