Published:Updated:

பாதை இனிது... பயணமும் இனிது..! - 35

பாதை இனிது... பயணமும் இனிது..! - 35
பிரீமியம் ஸ்டோரி
பாதை இனிது... பயணமும் இனிது..! - 35

சூது கவ்வும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

பாதை இனிது... பயணமும் இனிது..! - 35

சூது கவ்வும்!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

Published:Updated:
பாதை இனிது... பயணமும் இனிது..! - 35
பிரீமியம் ஸ்டோரி
பாதை இனிது... பயணமும் இனிது..! - 35

ரு நதிக்கரையில் இருவர் நின்றிருந்தனர். நதியின் பிரவாகத்தில் கம்பளி ஒன்று அடித்துச் செல்வதைப் பார்த்தனர். ஒருவர் நீரில் இறங்கி, அதனைக் கைப்பற்ற முனைந்தார். ஆனால், பிரவாகம் அவரையும் அடித்துச் சென்றது. கரையில் நின்றவர், ‘கம்பளி கிடைக்காவிட்டால் பரவாயில்லை; நீ கரையேறு!’ என்றார். ‘நான் அதைப் பற்றிக்கொள்ளவில்லை; அதுதான் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இது கம்பளி அல்ல; கரடி’ என்று கதறினார் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்.

வாழ்க்கையில் அலட்சியமாக இருக்கும் தருணங்களில் பலவீனங்களை விளையாட்டாகத் தொடங்கி, பின்பு அதற்கு அடிமையாகிப் பலர் தங்கள் வாழ்க்கையையே அழித்துக் கொள்வதைப் பார்க்கிறோம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் மனிதன், மிகுந்த விழிப்பு உணர் வோடு இருக்கவேண்டும். மனிதனைக் கீழ்நிலைக்குத் தள்ளிவிடக்கூடிய ஆற்றல் படைத்த பல்வேறு விதமான பலவீனங்கள் இருக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றதுதான் வாழ்க்கை.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களை எவ்வாறு செதுக்கிக்கொள்ள வேண்டும் என்பதை திருவள்ளுவப் பெருந்தகையின் பொருட்பால் வழியாக அறிந்து வருகிறோம்.

கொள்ளவேண்டிய குணங்கள், தள்ளவேண்டிய தீமைகள், கவனத்தில் கொள்ளவேண்டிய கூறுகள் எனப் பல்வேறு வகையான கருத்துக்களை திருவள்ளுவர் கூறியுள்ளார்.

பாதை இனிது... பயணமும் இனிது..! - 35

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனிதன் சூதில் மாட்டிக்கொண்டு, தனது வாழ்க்கையை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே, சூது என்ற அதிகாரத்தை திருவள்ளுவப் பெருந்தகை வகுத்துள்ளார்.

சூது மிகவும் கவர்ச்சிகரமானது. மனிதனின் அறிவை மயக்கி, ஆசையைத் தூண்டி, மழுங்கடிக்கக்கூடியது. அதனால்தான் சூதில் வல்லவனான சகுனியை, நீலோத்பல மலர் போன்று கவர்ச்சி கரமானவனாக பகவத் கீதையின் தியான சுலோகம் வர்ணிக்கிறது.

பல்லாயிரமாண்டு காலமாக, மனித குலத்துக்கு நாசம் விளைவிக்கக்கூடிய ஓர் அம்சமாக சூது இருந்துவருகிறது. சூதுக்கு உரிய பொருள்கள் மாறியிருக்கின்றனவே தவிர, சூதினால் உண்டாகும் தீமைகள் மாறாமல் இருக்கின்றன.

உலகமே வியந்து பார்க்கும் ஒரு விளையாட்டின் போக்கை சூது நிர்ணயிப்பது என்பது எத்தனை ஒழுக்கக்கேடான விஷயம்?

சூதில் வெல்லக்கூடிய ஆற்றல் உடையவனாக இருந்தாலும், சூதாட்டத்தை ஒருவன் விரும்பக் கூடாது; அதில் வெற்றி பெற்று அடைந்த பொருள், இரையில் மறைந்திருக்கும் தூண்டில் இரும்பை மீன் விழுங்கியதைப் போன்றது என்று உதாரணத்தோடு கூறுகிறார் திருவள்ளுவர்.

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. (திருக்குறள்: 931)


ஒன்றுஎய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு. (திருக்குறள்: 932)


அதாவது, பொருளைத் தகாத வழியில் சம்பாதிக்கும் முனைவோடு சூதாட்டத்தில் ஈடுபட்டு, ஒன்றைப் பெறுவதற்காக நூறை இழப்ப வர்கள், அறத்தையும், இன்பத்தையும், வாழ்க்கை நெறிகளையும் இழக்கின்றனர் என்றும் கூறுகிறார் திருவள்ளுவர்.

‘தீவினையின்றி ஈட்டல் பொருள்’ என்றார் ஔவையார்.

நற்குடும்பங்களில் பிறந்த பலரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு, தங்களை அழித்துக்கொள்வது மட்டுமல்லாமல், தங்கள் குடும்பத்தினரின் செல்வம், கௌரவம், மானம் அனைத்தையும் அழித்துவிடுகின்றனர். ஒருவர் சூதாட்டத்துக்கு அடிமையாவதால், ஒரு தலைமுறையே துன்பப்படுவதை சமூகத்தில் காணமுடியும்.

சூதாட்டம் போன்று மனிதனின் புகழைக் கெடுத்து, வறுமையைத் தருவது வேறு ஒன்றும் இல்லை என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் ஆணித்தரமான கருத்து.

சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல். (திருக்குறள்: 934)


சூதினால் விழுங்கப்படுபவரை இம்மையில் பசி வாட்டும்; மறுமையில் நரகத்தில் அவன் துன்பப்பட நேரிடும். சூதினால் மனிதன் பொய்யன் ஆகிறான். அவனது உள்ளத்தில் அருள் அழிகிறது. அதனால், இம்மையிலும் மறுமையிலும் அவன் துன்பப்பட நேரிடுகிறது. சூதாடுகின்றவனை உணவு, உடை, கல்வி, செல்வம், புகழ் ஆகிய ஐந்து விஷயங்கள் வந்தடைவதில்லை என்கிறார் திருவள்ளுவர்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்வி என்றைந்தும்
அடையாவாம் ஆயம் கொளின். (திருக்குறள்: 939)


- பயணிப்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism